#செக்ஸ்_உறவை_விட #முன்விளையாட்டுக்களே…
#உணர்ச்சிப்_பெருக்கை_அதிகரிக்கக் #கூடியவை…❗❗❗❓❓
பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன…
பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே 'டாப் கியருக்குப்' போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப்பெறக் கூடியலாவகம் பலருக்கு இருப்பதில்லை.
பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.
உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.
தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.
அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.
அதேபோல பெண்களின் 'காலர் போன்' பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.
முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.
முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.
உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை 'மருத்துவத்திற்கு' ஒத்து வருவார்கள்.
அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட 'இன்ஸ்டன்ட்' இன்பத்திற்கு உதவும். காது மடல் 'காதல் மடலாகவும்' விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.
அடுத்து காலைப் பிடித்து காரியம் 'சாதிப்பது'. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.
❤ ஜி ஸ்பாட்
அடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும்.
ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வு தான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது
செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.
❤ கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்
அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.
❤ லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்
சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.
❤ மார்புகளில் ஆர்கஸம்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.
❤ வாய்வழி கிளைமேக்ஸ்
வாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும் போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.
நாம் இன்பத்தை தரும் வள்ளலாக இருந்து
நாமும் இன்பத்தை தாராளமாக பெறுவோம்..
நன்றி நற்பவி 🙏 வாழ்க வளத்துடன்
No comments:
Post a Comment