Search This Blog in tamil

Showing posts with label கள்ளத்தொடர்பு. Show all posts
Showing posts with label கள்ளத்தொடர்பு. Show all posts

Tuesday, 9 August 2022

கள்ள உறவு பற்றிய விளக்கம்

 goldenking:

EMA என்ற திருமணம் தாண்டிய திருட்டு உறவு என்ற கள்ள  உறவு பற்றிய விளக்கம்

பகுதி - 1


EMA னா கணவன் மனைவிக்கு தெரியமல் அல்லது   மனைவி தன் கணவனுக்கு  தெரியாமல் , செக்ஸ் வெச்சு ஜாலியா திருட்டுத்தனமான உடல் உறவில் ஈடுபடுவது 


இதான் EMA,  திருமணத்தை தாண்டிய உறவு/ கள்ளகாதல்னு நினைக்கறீங்க.


ஒரு உளவியல் ஆலோசகரா, EMA க்ளையண்ட்ஸ் பத்தி பேசனும். 


(((இது எங்க உரிமைனு சொல்றவங்கள பத்தி எந்த கருத்தும் எனக்கு இல்லை.))


EMA  என்பது எதுவும் வெறும் செக்ஸ்காக  மட்டும் போய் மாட்றது இல்ல


. தன் இணை(கணவனோ/மனைவியோ) இவங்ககூட மனசு விட்டு பேசாதது, 


குடுக்க வேண்டிய மரியாதை காதல் அன்புனு எதும் குடுக்காம, 


கல்யாணம் ஆயிடுச்சு, ஒன்னு/ரெண்டு குழந்தை ஆயாச்சு. 

இனி வேலைக்கு போறது, 

சமைக்கிறது,

 குழந்தை வளர்ப்பு, 

படிப்பு, ஸ்கூல் ஃபீஸ், வாடகை கரெண்ட்பில், கடன பத்தி பேசுறது,


 போக வேண்டிய கல்யாணம் காதுகுத்து மட்டும் பேசிட்டு நல்லா வாழறோம்னு ரெண்டு பேர்ல ஒருத்தர் நினைக்கிறதும் 


அடுத்தவங்க அன்பு அங்கீகாரம்

,சாய்ந்து கொள்ள தோள்,

கண்ண துடைக்க சில வார்த்தைகள் கிடைக்காம


 நா ஒரு மெஷின்.

. நா இல்லைனா காசு கஷ்டம் வரும்

 இல்லைனா சாப்பாடு கஷ்டம் வரும் மத்தபடி என்னை மிஸ் பண்ண மாட்டாங்கனு விரக்தி மனநிலைக்கு போய், 


யாராவது ஆறுதலா பேசிட்டா தொடர்ந்து அவங்க அன்பும் ஆறுதலுக்கு பேச ஆரம்பிச்சு,


 பேச மட்டும்தான செய்யிறோம்னு சமாதான படுத்திக்கிட்டு 


மெல்ல அந்தரங்க கேள்வி-பதிலுக்கு போய்

 virtual love,sex ல விழுந்து 


அப்பவும் வெறும் chat/photo தான


,என் கணவனோ/மனைவியோ இதே அன்ப குடுத்திருந்தா


 நாம ஏன் பண்ண போறோம்,

 தப்பு அவங்களோடதுனு தன் தப்ப நியாயபடுத்தி, 


மேலும் தண்டனை குடுப்போம்னு நேர்ல சந்திக்கிறதுனு தொடரும். 


இவங்க சந்திக்கிற பிரச்சனை

**முதல்ல தப்பு செய்யயறோம்ன்ற குற்றவுணர்ச்சி.


**தன் பொது வாழ்கைல இந்த உறவுனால மரியாதை போயிடுமேன்ற பயம். 


**யாருக்குல்லாம் தெரிய வாய்ப்பு இருக்குனு யோசிக்கிறது


**தன் கணவனோ/மனைவியோ சாதாரணமா கோவபட்டா கூட தெரிஞ்சதுனால கோவபடுறாங்கனு பயம்/சோகம்


**தன் கணவனோ மனைவியோ அன்பு காட்டிட்டா மறுபடி குற்றவுணர்ச்சி


**தான் தேடின அந்த இன்னொருத்தர விட்டு விலக நினைச்சா வெளில சொல்லிடுவாங்களோ, என்ற பயம் 


**இவ்ளோ நாள் பாசம் குடுத்ததுக்கு நன்றியா இருக்கனும்ல னு எண்ணம்.


ஆக மொத்தம் பயம்/அழுகை/தூக்கமின்மை/சாப்பிட தோணாம/பிடிக்காம,தன் உடல்நலன் மேல ஆர்வமில்லாம, ஸ்ட்ரெஸ்ல விழுதுடுவாங்க. 


இதே ரொம்ப நாள் தொடர்ந்தா டிப்ரஷன் ஆக வாய்ப்பிருக்கு. 


பலர் இதே காரணங்களால வேற சில அறிகுறிகளுக்கு ஆட்பட்டு 

psychosomtic ப்ரச்சனைகள் தெரிய ஆரம்பிக்கும். 


அதாவது மனநல ப்ரச்சனையால உருவாகுற உடல்நல கோளாறுகள். 


அந்த க்ளையண்ட்ஸ் பலர் 

நாம இத பண்ணிட்டோம், 

எப்டி வெளிய வர்றது, 

தெரிஞ்சவங்கள கேக்க முடியாதுனு கவுன்சிலர்ட்ட வெளிய சொல்ல மாட்டீங்கள்ல னு வருவாங்க. 


அவங்க அழுகை குற்றவுணர்ச்சி பாதிப்பு தற்கொலை எண்ணம் இதெல்லாம் எல்லா மனநோய்கள் போலதான் இருக்கும். 


குடிகாரன ஏன்டா குடிச்சனு கேட்டா வேலையில்ல 

காதல் தோல்வி

 காசில்ல 

எங்கப்பா குடிப்பாரு 

எனக்கு பழக்கி விட்டாரு

 மனைவி தொல்லைனு

 பல குற்றசாட்டு வைக்கிறா போல


 இவங்களும் அடுத்தவங்க மேலதான் சொல்லுவாங்க. 


 லைட்டா கோவபட்டாகூட சாவுதான் தண்டனைனு பேச ஆரம்பிப்பாங்க. 


மற்ற எந்த க்ளையண்ட் போலதான் இவங்களும்.  


இவங்கள சரி பண்றதுனால, 

நா  EMA க்கு ஆதரவு, 

 நானும் EMAல இருப்பேன்னு 

என்னை திட்றது, 

நல்லா குடும்பத்த கெடுத்துவிடு, 

உன்ன மாதிரி ஆளுகளால தான்  EMA நடக்குதுனு கத்தினா  

அதுக்கு என்ட்ட பதில் இல்ல. 


நா கவுன்சிலர்/தெரபிஸ்ட் மட்டுமே. 


உண்மைல அவங்க  சந்தோஷமா இன்னொரு உறவுல இருக்குறதே இல்ல.


EMA என்ற திருமணம் தாண்டிய திருட்டு உறவு என்ற கள்ள  உறவு பற்றிய விளக்கம்

பகுதி - 2



EMA வின் நன்மைகள் 

தன் திருமண உறவு  பார்ட்னரிடம்  திருமண  வாழ்வில் கிடைக்காத

பாசம்

நேசம்

அக்கறை

கரிசனை 

Care taking

மனம் விட்டு பேசுதல் 

ஆறுதல் 


போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு



மனநிலை பாதிப்பு

குடும்ப உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டு மனைவிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் 

மனைவியை மதிக்காமல் 

மனைவிக்கு குடும்பத்தில்  எந்த முடிவு எடுக்கும்  உரிமையும் கொடுக்காமல்

வேலைக்காரி போல நடத்தி 

மனைவி என்றாலே அடிமை  

என்ற மனப்பான்மை கொண்ட ஆண்கள் 


ஆன் என்ற ஈகோ


போதிய பாலியல் விழிப்புணர்வு இன்மை


என்ற பல காரணங்களாலும் 


ஆண்மைக் குறைவு 

விந்து முந்துதல் 

உடல் உறவில் நாட்டமின்மை

போதிய விறைப்பு இன்மை

பெண்களை பாலியல் ரீதியாக கையாள தெரியாமை 

தெரிந்தாலும் அக்கறை காட்டாமை 


தற்போதை சமுக ஊடகங்கள் இணைய தளங்கள் மூலம் 

பெண்களும் பாலியல் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள்

பெண்களுக்கும் செக்ஸ் எதிர்பார்ப்புகள் இருக்கும்

தேவைகள் இருக்கும் என்பதை உணராமல் 


பாலியல் உறவில் 

மனைவிக்கும் தன்னைப் போன்றே ஆசை இருக்கும் செக்ஸ் உணர்வுகள் இருக்கும்  உணர்ச்சிகள் இருக்கும்

செக்ஸ் தேவைகள் இருக்கும் 

என்பதை உணராமலும் தெரிந்து கொள்ளாமலும்  

மனைவியை அலட்சியப்படுத்தி 

சக மனுசியாக மதிக்காமல் 


தன் தேவைகளை மற்றும் நிறைவேற்றி விட்டு 


பெண் உறுப்பை விந்து கழிக்கும் கழிப்பிடமாக (டாய்லட் ) பயன் படுத்தும் ஆண்கள் (கணவர்) 


 கொடுக்க முடியாத 

உடல் உறவு இன்பம் 

உச்ச கட்ட புணர் பரவச ஆர்கச பேரின்ப நிலையை அடையும் 

செக்ஸ் உறவு கிடைக்க வாய்ப்பு உள்ளது 



அதன் மூலம் கணவன் மூலம் கிடைக்காத  பெண்களின் செக்ஸ் தேவைகள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புகள் உள்ளன




EMA வின் தீமைகள்


EMA வில் அறிமுகமான ஆணோ 

அல்லதுபெண்னோ

நம்பிக்கையான EMA கிடைக்கவில்லை என்றால் 

ஒருவரை ஒருவர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது 


கள்ள உறவை வெளியே சொல்லி விடுவேன்

உறவினர்களிடம் சொல்லி விடுவேன் என்று 

உறவை வைத்து மிரட்டி நண்பர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது


மிரட்டி பணம் / நகை பறிப்பது 


போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் 


EMA வில் வரும் ஆணுக்கோ பெண்ணுக்கோ 

இருக்கும் 

TB 

தோல் நோய்கள்

சிபிலிஸ் கொனேரியா போன்ற STD நோய்கள் 

HIV / HSV / HPV / எயிட்ஸ் போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் 



மேலும் EMA வெளியே தெரிந்து விட்டால்

தனக்கு   அவமானம்

குடும்பத்துக்கு அவமானம்

குடும்பத்தினின் வெறுப்பு / ஒதுக்கி வைத்தல் 

கொலை

தற்கொலை 


போன்ற பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை வரலாம் 


EM A வுக்கு தீர்வு


பாலியல் தேவை தான் E MA வை நாடக் காரணம் என்றால்

சுய இன்பம் (Masturbation) செய்து கொள்ளலாம்


பாசம் அன்பு மரியாதை போன்றவை கிடைக்காத காரணம் என்றால் 

மனநல மருத்துவரை நாடலாம்

அதற்கு ஒத்துழைக்க வில்லை எனில்

துணையை திருத்த முடியாது என்றால் 

தற்போதை நம் வாழ்வியல் கலாச்சாரத்தில் 

மனதை  மாற்றிக் கொள்ளுவதைத் தவிர வேறு வழி இல்லை



மனதுக்குப் பிடித்த இசை கேட்டல் / காமெடி வீடியோக்கள் / சமையல் / மருத்துவம் நிகழ்ச்சிகளை

 யூ டியூபில் பார்த்து மனதை திருப்புதல் 


கைத் தொழில்  / கைவினைப் பொருட்கள் செய்தல் 

மாடித் தோட்டம் 

தையல் 

கம்யூட்டர்  புத்தகங்கள் படித்தல்

போன்ற  பல் வேறு வழிகளில் மனதை திருப்பி 

மகிழ்ச்சியாக வாழும் வழியைத் எதடிக் கொள்ள வேண்டியது தான்


 தற்போதைய நம் நாட்டு கலாச்சாரம்  வாழ்வியல் முறைப்படி EMA அவ்வளவு எளிதல்ல என்பதை உணர வேண்டும்




இவ்வளவு பிரச்சினைகளையும் எதிர் கொள்ள முடியும் என்றால் EMA வைத்துக் கொள்வதில் தப்பு இல்லை 


இன்பமாக மகிழ்ச்சியாக வாழும் உரிமை ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கிறது 


துணையை இன்பமாகவும் மன  மகிழ்ச்சியாக வும் வாழ வைக்கும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது  என்பதை உணர்ந்தால்  EMA வுக்கு வேலை இல்லை 


மகிழ்வித்து மகிழ் என்பதே தாரக மந்திரம்

Thursday, 24 June 2021

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

பெண்கள் அகிலத்தின் ஆதாரம்..


பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!


2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் கள்ள உறவில் இருக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கிறது. பொதுவாக கள்ள உறவில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலானோர் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பது அளவற்றது. ஆண்கள் பலதார முறை என்று இருந்து வந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், பெண்களுக்கு ஒரே கணவன். அவருடன் மட்டும்தான் உறவில் இருக்க வேண்டும். கணவன் இறந்த பின்பு சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுப்பு என்று அவர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். தற்போது அந்த நிலமை மாறி வருகிறது. ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது அது அவரது சொந்த உரிமையாக மாறி வருகிறது.


கசக்கும் திருமண உறவு

தற்போது உள்ள பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்பு சொல்லும் ஒரு வார்த்தை என்னவென்றால் தன்னுடைய மனைவி திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடன் மட்டுமே உறவில் இருக்க வேண்டும் என்பதுதான். திருமணம் முடிந்து சிலகாலம் வரை கணவனுடன் இருக்கும் பெண்களில் சிலர் ஏன் கள்ள உறவை நோக்கி செல்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்க வேண்டும். ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.


கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல


திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்திருந்தது. மேலும், கள்ள உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிரடியாக ரத்து செய்திருந்தது. வயது வந்த ஆண், பெண் தங்களுக்கு பிடித்த நபர்களுடன் உடலுறவு கொள்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்.


கணவர் எஜமானர் அல்ல


கள்ள உறவு விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆனால், அது ஒரு குற்றமாகாது. கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது குற்றம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண்களுக்கு கணவர்கள் என்பவர் ஒரு பாதுகாப்பானர்வர்கள் தான். அவர்கள் ஒன்றும் எஜமானர்கள் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு கலாச்சார போராளிகளுக்கு பெரும் இடியாக அமைந்தது.


எதிர்பார்ப்பு பூர்த்தியடையாத போது...


தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி நடத்தலாம், தனது கணவர் தன்னிடம் எப்டியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என பல்வேறு கற்பனை கோட்டைகளை மனதில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகும்போது, அதுபோன்று இருக்கும் வேறு ஒரு ஆணுடன் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படியாக கள்ள உறவு ஏற்படுகிறது.


கொடுமைப்படுத்துதல்


மனைவியை மனிதனாக கருதாமல் தன்னனுடைய அடிமையாக கருதி அவர்களை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்களினால் பெண்களுடைய வாழ்க்கை வேதனைக்குள்ளாகும். அந்த வேதனையை வேறொரு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.


மேலும் இதுபோன்ற சமயங்களில் தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே அவர்கள் கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கும்.


பாதுகாப்பு இல்லாத போது..


பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கிறது என்கிற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இந்த காரணங்களுக்காக சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.


நேரம் செலவிடாமல் இருப்பது..


உங்களுடைய வாழ்க்கை துணைக்காக நேரத்தை நீங்கள் செலவிடவேண்டும். அலுவலகம் செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் அதற்கான நேரத்தை அவர்களுக்கு வழங்காதபோது, அந்த நேரங்களில் வேறொரு ஆண் நபரின் நட்பு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நட்பு கள்ள உறவாகவும் மாற வாய்ப்புள்ளது.


பிரிந்திருக்கும் போது..

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன.நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன. தங்களுடைய உடல் தேவையை பூர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு துணை அந்நேரத்தில் தேவைப்படும்போது, கள்ள உறவில் அவர்கள் இறங்குகிறார்கள். எல்லா குடும்பங்களிலும் இவை நடப்பதில்லை என்றாலும், மற்ற குடும்பங்களை விட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு சில ஆய்வு முடிவுகள்.


உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது…


பெண்கள் தங்கள் கணவனிடம் மிகவும் எதிர்பார்ப்பது அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளதாபோது, கணவன் மீது ஒருவித வெறுப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு ஆண் நபரின் நட்பு காதலாக கூட மாற வாய்ப்புள்ளது.


உடலுறவில் திருப்தியின்மை..


பெரும்பாலான பெண்கள் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாகதான் பெண்கள் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள். ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு, பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு. வேறொரு பெண்ணுடன் ஆண் மிக சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்ளவார்கள். ஆனால் பெண்கள், உணர்வு ரீதியான உடலுறவை எதிர்பார்ப்பார்கள்.


உடலுறவில் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு பிடித்தது போன்றோ, அவர்கள் விரும்புவது போன்றோ நடக்கிறதா என்றால் அது மிகக்குறைந்த அளவுதான். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேறொரு உறவை தேடி அவர்கள் செல்கிறார்கள். குறிப்பாக தாம்பத்திய வாழ்க்கை சரியாக இல்லை என்றுதான் நிறைய விவாகரத்து வழக்குகள் இங்கு நடைபெறுகின்றன.


பெண்களுக்கான மதிப்பளிப்பது


பொதுவாக ஒரு உறவில் உள்ளே செல்வதும் விரைவாக வெளியேறுவதும் ஆண்களுக்கு சாதாரண காரியம். ஆனால், பெண்களுக்கு அது சாதாரண காரியமல்ல. ஆண்கள் மிகவும் எளிதாக ஒரு உறவில் இருந்து விலகிச் செல்ல முடியும், ஏனெனில் அவர்களின் உணர்ச்சிகள் வேறுபட்டவை. ஆனால், ஒரு பெண் உடலுறவு கொள்ள விரும்புவதும் அதை மறந்துவிடுவதும் என்பது வழக்கத்திற்கு மாறானது. பெண்களுக்கான மதிப்பையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆண்கள் நடந்துகொண்டால், கள்ள உறவுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு குறையும்.


தவறு என்பது இருதரப்புக்குமானது..

இந்த பதிவில் யாரையும்..

ஆண் மற்றும் பெண் தவறு செய்தாலும் தவறு தவறுதான்..

இந்த பதிவில் காரணங்கள் மட்டுமே எனது கோணத்தில் ஆராயப்பட்டது...

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..


எனது பதிவுகளின் நோக்கம் ஆண்கள் இல்லத்தில் சிறந்து விளங்க வேண்டும்..

பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்க வேண்டும்...

பெண்களே இல்லறத்தின் கண்கள்..

எங்கு பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ 

அங்கு தேவதைகள் வசிக்கின்றனர்..

எனது பதிவுகளினால் ஒரு பெண்ணை அவரது கணவன் மகிழ்ச்சியடைய செய்தாலும் அது இறைவன் எனக்கு தந்த வரமாகும்..

தெரிந்ததோ தெரியாமலோ நான் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்..

பெண்களின் உணர்வுகள் அந்த அளவுக்கு பிரபஞ்சத்தில் ஆற்றல் மிக்கது ஆகும்..

பெண்களின் திருப்தியே ஆண்களின் அனைத்து நல்ல மகிழ்ச்சிக்கும் ஆதாரம்..

அதற்காகவே பதிவுகளை நான் தேடி தேடி பதிவிடுகிறேன்..


நன்றி

Thursday, 2 August 2018

நிம்மதியான வாழ்க்கையை இழக்காதீங்க! நிபுணர்களின் அறிவுரை!!

இன்றைக்கு ஊடகங்களின் மிக முக்கிய செய்தியே கள்ளக்காதல் கொலைகளும்,
தற்கொலைகளும்தான்.
கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல்
புதிதாக ஒரு காதலில் விழ நேரிட்டால் இரண்டு குடும்பங்களின் நிம்மதியும்
கேள்விக்குறியாகிவிடுகிறது. இதுபோன்ற தவறான உறவுகள் ஏற்பட என்ன காரணம்,
இதனால் எந்தமாதிரியான சிக்கல்கள் எழும் என்று உளவியல் நிபுணர்கள்
பட்டியலிட்டுள்ளனர் படியுங்கள்.
இளம் வயதில் காதல் ஏற்படுவது இயல்பானது. அதே சமயம் திருமண வாழ்க்கையில்
திருப்தியில்லாமலோ, புதிதாக ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு
காதல்வயப்படுவதோ இயற்கைக்கு முரணானது என்கின்றனர். அத்தகைய உறவுக்கு
காதல் என்று பெயர் சூட்டினாலும் அதனை சமுதாயத்தில் வெளிப்படையாக யாராலும்
தெரிவிக்க முடியாது என்பதே நிபுணர்களின் அறிவுரை.
திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்த பின்னரும் பிறன்மனை நோக்குவது
மோசமானதும் அருவெறுப்பானதும் என்று கூறுகின்றனர். இது வாழ்க்கைத்
துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயல் என்றும்
நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற மரபு மீறிய உறவுகள் நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து
வருகின்றன என்றாலும் சமீபத்தில் பல்கிக் பெருகிவிட்டது. முன்பு இந்த
உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன. இப்போதோ
நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன
என்பதுதான் வேதனை. முன்பு இதனை வெளியில் சொல்ல கூச்சப்பட்டனர். ஆனால்
இன்றைய காலத்தில் இதுபோன்ற உறவுகள் வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி
அலட்டிக் கொள்வதில்லை.
இன்றைய கள்ளக்காதல்கள் உடல் ரீதியான உறவு என்பதையும் தாண்டி வன்முறையில்
முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ
காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும்
பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே
போகிறது.
பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. இறுதியில் தனது
விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச்
செல்கின்றர்கள்.தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள
உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள்
உண்டு.
அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள்
அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட
அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன
இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. சிலர் ஆடம்பர
வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற உறவுகளில் ஈடுபடுகின்றனர்.சிலர் தனது
துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின்
மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர். என்னதான் ஆண், பெண்
இடையே முறை தவறிய உறவுகள் ஏற்பட்டாலும் பாதிக்கப்படுவது என்னவோ
பெண்கள்தான்.
வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம்
வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல்
சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன
உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச
ஆரம்பித்து விடுகின்றனர். இதுவே கள்ள உறவுகள் ஏற்பட சாதகமாக அமைகின்றது.
சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும்
பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும்,
இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த
ஊடகங்களில் அடிபடுகின்றன.
இதுபோன்ற இடைஞ்சல்களை தவிர்க்க ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையே
ஏற்புடையது என்கின்றனர் நிபுணர்கள். கள்ள உறவில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த
நேரம் யாருக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்துடனே வாழ்வதால் மன
உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே குடும்ப அமைப்பில் கிடைக்கும்
மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிடைக்காது எனிபது
நிபுணர்களின் அறிவுரை. எனவே தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக
நிலையான இன்பத்தினை இழக்கவேண்டாம் என்றும் கூறுகின்றனர். திருமணம் என்பது
புனிதமானது. அது ஒரு அறச் செயல், வழிபாடு, அதனை விளையாட்டாகவும்,
வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்வது விபரீதத்தில்தான் முடியும் என்பது
நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.


அன்புடன்

சிவப்பிரகாஷ்

- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் ந‌லத்தை தீர்மாணிக்கின்றன. -

Friday, 19 September 2014

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?



திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’  ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும்  போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில்  இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது.

சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது.

 மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.


இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை.


ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு  வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால்  கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில்  விலகி செல்கிறார்கள்.

செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.


மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து  உங்கள் கணவருக்கு  உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம்.

குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை  விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.


ஆண்கள்  எப்பொழுதும் தங்களது துணை  தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு  தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.

 இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு  குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது.

 இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

இதற்காக  எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம்.


 இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…!

Friday, 4 July 2014

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?


இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :
1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.
3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது – தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.
4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.


- இவை எல்லாம் கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்.
சரி… இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. தாலி கட்டிய மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.


2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.

3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு – இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.
- இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஒரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், “கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்” என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்

Saturday, 7 June 2014

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…?

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…?

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும்வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!
திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.

இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.

மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.
இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…!