Search This Blog in tamil

Showing posts with label மருத்துவ_ஆலோசனை. Show all posts
Showing posts with label மருத்துவ_ஆலோசனை. Show all posts

Tuesday, 18 May 2021

ஆண்மைக்_குறைவு

 🇨🇭#ஆண்களை_அலற_வைக்கும்…❗


🇨🇭#ஆண்மைக்_குறைவு…❗❓


👉 ஆண்மைக் குறைவு என்றால் என்ன❓


👉  ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது❓


👉 ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்❓


👉 ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்❓


👉 ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை❓


👉 ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ❓


⭕ ஆண்மைக் குறைவு என்றால் என்ன❓


இன்றைய நாகரீக உலகில் 

"பாலியல் உறவுகளை" பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம். இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லா

தவன் என்றே கூறுகிறது. 


ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. 


குழந்தையில்லாத அனைவரும் "ஆண் மையற்றவர்கள்" என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.


ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும் விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே "ஆண்மைக் குறைவு " என்கிறோம்.


⭕ ஆண்குறி  எவ்வாறு விறைப்படைகிறது❓


ஆண்குறியிலிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு 

தூண்டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் (HELICINE) 

ஹெலினசன் என்னும் தமனிகள் (ARTERY) விரிவடைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசைகளில் (CARPORA CARVEROSA) உள்ள (LACUNAR SPACES) 

லஃகுனார் ஸ்பேஸ்சிஸ் இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் (VENIS) சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது. உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் VENOUS OUTFLOW நடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.


⭕ ஆண்மைகுறையு ஏற்பட காரணங்கள்❓


👉இரத்த ஓட்ட காரணங்கள்


ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்படுவதில் தாமதமோ அல்லது ஏற்படா மலே இருக்க அந்த பகுதிக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாதுதான் முதன்மையான காரணம். ATHEROSCLEROSIS என்னும் நோயில் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதாலும், ஆண்குறி பகுதிகளில் ஏற்படும் காயங்களால், இரத்தக் குழாய்கள் கடினப்பட்டு சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுகிறது.


புகைப்பிடித்தல், உடல் பருமன் இவற்றால் இரத்த ஓட்டம் நிறைய பேருக்கு தடைபடலாம் என்பதில் ஐயமில்லை.


சில ஆண்களுக்கு, குறிக்கு எடுத்து வரப்படும் இரத்த அளவைவிட அதிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் ‘VENOUS OUTFLOW அதிகமாயிருந்தால் விறைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.


பொதுவாக மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி, இருதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இவ்வாறு ஏற்படலாம்.


சில நேரங்களில் உள்ளிருக்கும் விறைப்பு தசைகளில் (ELASTIC FIBRES) போதிய அளவு ஏற்படாமல் அது சிரைகளின் மீது(TUNICA VENIS) அழுத்தம் தரமுடியா விட்டாலும் ஏற்படலாம்.


பொதுவாக வயதானவர்கள், அதிக கொலஸ்டிரால் அளவு, ஆஸ்த்மா, இரத்த சோகை உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் படலாம்.


👉 நரம்பு மண்டல காரணங்கள்


முதுகு தண்டுவட நரம்புகள் குறிப்பாக பின் அடி முதுகில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு ஆணை "IMPOTENT" ஆக்க வாய்ப்புகள் அதிகம்.


இந்த மாதிரியான பிரச்சனைகளில் 75 %பேர் குறைவான விறைப்பு தன்மையும் 25 % பேர் மட்டுமே பெண் குறியினுள் செலுத்தும் அளவிற்கு வீரியத்தையும் பெற்றிருப்பார்கள்.


இவை பொதுவாக " மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ்" மற்றும் "பெரிமிரல் நியூரோபதி என்னும் நோய்களில் காணப்படும்.


இந்த PERIPHERAL NEUROPATHY நோய் ஏற்பட நீரிழிவு நோயும் அதிகமது பழக்கமும் ஒரு காரணமாகும்.


இடுப்பு எலும்பு கூட்டுப் பகுதியில் (PELVIS) ஏற்படும் அறுவை சிகிச்சைகள் குறிப்பாக பிராஸ்டேட், 

சிறுநீர் பை, போன்றவைகளில் பிரச்சினை களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் "தானியங்கு" (AUTOMATICNERVES) நரம்புகள் அல்லது தமனிகள் பாதிக்கப்பட்டு IMPOTENCE ஏற்படலாம்.


கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் போதும், நரம்புகள் பாதிக்கப்படலாம்.


👉 ஹார்மோன்  காரணங்கள்


பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள் அல்லது உறவுகளின் போது "டெஸ்ட்டோ ஸ்ட்ரோன்" என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு 

ஆண் குறி விறைப்படைகிறது.


"ஹைபோகோன்டிஸ்ம்" என்னும் நோயில் செக்ஸ் உறவுக்கு தேவையான அளவு இந்த"டெஸ்ட்டோஸ்ட்ரோன்" சுரப்பு இல்லாமை யால் அல்லது குறைவால் ஆண்மை குறைவு ஏற்படலாம்.


"ஹைபர்புரோலக்டினிமீயா"என்னும் நோயில் ‘PROLACTIN ’எனும் ஹார்மோன்அதிகம் சுரக்கிறது.இதனால் ‘TESTROSTERONE’ ஹார்மோனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் மூலம் ஆண்மை குறைவு ஏற்படுகிறது.


"ஹைப்பர்தைராய்டிஸம்" என்னும் நோயிலும் ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.


🔴 நீரிழிவு காரணங்கள்


பொதுவாக 35-75 % நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.


மேற்கூரிய இரத்த ஓட்ட அல்லது நரம்புகாரணிகள் இதை உண்டாக்குகிறது.


எந்தவொரு நீரிழிவு நோய் உள்ள ஆணுக்கும் "ஆண்மைக் குறைவு" ஏற்பட்டிருந்தால் அது "டயாபடிக் நியூரோபதியின்" ஆரம்ப கால அறிகுறியாகும்.


நரம்பு அல்லது நாளமில்லா திசுக்களில் நைட்ரிக் அமிலம் உருவாக்கம் குறைந்துபோவதும் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகும்.


🔴 மனசு சார்ந்த காரணங்கள்


அதிக கவலை


மன அமைதியற்ற, நம்பிக்கையில்லா தாழ்வுநிலை


நெருங்கிய நட்பில் பிளவு


கவர்ச்சியில்லாத மனைவி


குழந்தை வயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள்


கர்ப்பமாகி

விடுவார்களோ என்ற பயம்


பால்வினை நோய்கள் தொற்றிவிடுமோ என்ற அச்சம்


மனரீதியான தோல்விகள்


தனிமையான அறையில் தாம்பத்ய உறவு முடியாமல் உள்ள கூட்டு குடும்ப முறை


உடலுறவு பற்றிய பயம்


ஆர்வமில்லாத உடலுறவு


🔴 மருந்துகளால்  ஏற்படும் ஆண்மைக் குறைவு 


25 % ஆண்கள் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் ஆண்மைக்குறைவை பெற்றுள்ளனர்.


இரத்த கொதிப்பு நோய்க்கு தரப்படும், மருந்துகள் நேரடியாக ஆண்குறியின் விறைப்பு தசை (CARPORA) ல் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், மறைமுகமாக PELVIC(இடுப்பு எலும்பு பகுதிக்கு) இரத்த ஓட்டத்தை குறைப்பதாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.


ஈஸ்ட்ரோஜன், அலசருக்கு தரப்படும் RANITIDINE,CIMETEDINE மற்றும் டையுரடிக்ஸ், போன்ற மருந்துகள் எஞசஅஈஞபதஞ டஏஐச உருவாகுவதை குறைப்பதாலும் மற்றும் ANDROGEN ஹார்மோன்


🔴 வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.❗❓


அதிக கொலஸ்டிரால் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தரப்படும் DIGOXIN, GEMFIBROZIL, CLOTIBRATE போன்ற மருந்துகள் "Na+ -K+ATPASE "என்னும் என்சைம் செல்லின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி செல்சுவரை தாண்டி செல்லுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கிறது.


⭕ ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்❓


தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.


உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.


வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.


⭕ ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை❓


 தூக்கமின்மை


 மன அழுத்தம்


 வாழ்க்கை பற்றிய பயம்


 வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்


 தற்கொலை எண்ணங்கள்


விவாகரத்து


 சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்


🔴 ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம்❓


TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்


 FSH ஹார்மோன் அளவில் குறைதல்


 ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்


முழு இரத்த பரிசோதனை - நீரிழிவு, கொலஸ்டிரால், எலக்ட்ரோலைட்


 PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்


 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்


 PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)


 RIGI ஸ்கேன் - தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.

(IN SLEEP LAB) 


இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.


சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு,  காரணம் என கொள்ளலாம்.


ஆண்குறியை தொடும்போது உணர்ச்சி குறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.


அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.


🇨🇭  மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்❓❗


பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.


ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு 2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)


நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.


மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் "ஆண்மைக் குறைவை" கண்டிப்பாக ஏற்படுத்தும்.


ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.


#ஆண்_உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். 


#உண்மையிமல்…… 


பெண்ணி யோனிக்குழாயில் (#பெண்_உருப்பு) (VEGINA) 

4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். 


இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.


Thursday, 20 February 2020

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள் 50

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள்.

1. லிங்கத்தின் அளவைப் பொறுத்து பெண்ணுக்குரிய இன்பம் வேறுபடும்.

2. பெரிய லிங்கத்தால் தான் பெண்ணுக்குரிய இன்பத்தை விரைவாக நிகழ்த்த முடியும்.

3. லிங்கமும், யோனியும் பங்கேற்கும் துய்ப்பிலேயே பெண்ணுக்குரிய இன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்து விடும்.

4. முன் விளையாட்டுக்களில் ஈடுபடாமலே மனைவியின் உடலில் உச்ச கட்ட பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.

5. என் மனைவிக்கெல்லாம் பத்தே நிமிடங்களில் உச்ச கட்டப் பாலின்பம் நிகழ்ந்து விடும்.

6. எவ்வித இன்பமும் நிகழாமலே, இன்பம் நிகழ்ந்து விட்டதைப் போல, எந்தப் பெண்ணும் நடிப்பதில்லை.

7. மூன்றே நிமிடத்தில் உச்ச கட்ட இன்பம் நிகழ்ந்து விட்டதாக ஒரு பெண் சொன்னால் அது உண்மையே.

8. இந்த உலகிலேயே என்னுடைய மனைவி மட்டும் தான் பாலின்பத்தை வழங்க மறுக்கிறாள்.

9. அளவுக்கு மீறிப் பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பது பெண்ணுக்குப் பிடிக்காது.

10. என் மனைவிக்குப் பாலுணர்வு அறவே இல்லை. அதனால் தான் செத்த மீனைப் போல் கிடக்கிறாள்.

11. படுக்கையறை விளைவுகள், வெய்யிலைக் கண்ட பனி போல், விடிந்ததும் மறந்து போய் விடும்.

12. பாலின்பத்திற்கும் மனிதப் பிறவியின் மனநிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

13. பெண்ணின் அனைத்து பாலின்பங்களும் ஒரே மாதிரியான இன்பக் கிளர்ச்சியை வழங்கக் கூடியவையே.

14. புணர்புழை என்பது ஒரு பிளாஸ்டிக் குழாயைப் போல எப்போதும் நேராகவே தான் இருக்கும்.

15. புணர்புழையானது சாதாரண நேரங்களிலும் கூட மிகவும் உணர்ச்சி மிகுந்த இடமாகவே இருக்கும்.

16. மதன பீடத்திலும், கொங்கைகளின் இதழ்களிலும் உள்ள நரம்பு களைப் போலவே, புணர்புழையில் உள்ள நரம்புகளும் நுண்ணிய உணர்வுடையவை.

17. ஆணின் லிங்கமே மதன பீடத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் வல்லமை யுடையது.

18. பெண்ணின் உடவில் நிகழும் மதன பீட இன்பம் மட்டுமே மதன பீடத்தோடு தொடர்புடையது.

19. தூக்கமின்மை, உடற்பருமன், மது, புகையிலை போன்றவை ஆணின் பால் திறனைப் பாதிப்பதில்லை.

20. மது அருந்திய நிலையில் இன்பத்துய்ப்பில் ஈடுபடும் போது, நீண்ட நேரம் திறம் படச் செயலாற்ற முடியும்.

21. பெண்ணின் மூளையைத் தயார் படுத்தாமலே, பெண்ணின் உச்ச கட்டப் பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.

22. பெண்ணின் உடலில் உள்ள பாலுணர்வு மையங்கள் தொடைகளுக்கு நடுவில் மட்டுமே அமைந்துள்ளன.

23. துரித ஸ்கலிதம் ஒரு நோய். மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.

24. விந்து முந்துதல் ஒரு வியாதி. மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.

25. பாலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் செயலாற்றும் திறனைப் பெற்று விடுவார்கள்.

26. தளர்வான நிலையில் காணப்படும் ஆணுறுப்பின் வித்தியாசம் விரைப்படைந்த நிலையிலும் காணப்படும்.

27. பெரிய லிங்கத்திற்கும், சிறிய லிங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்ணால் பார்க்காமலே ஒரு பெண்ணால சொல்லி விட முடியும்.

28. மாதவிடாயின் போது பாலுறவில் ஈடுபட்டால், நோய் வந்து விடும். மாத விடாய் பருவத்தை ஒரு பெண் கடக்கும் போது பெண்ணின் காமம் செத்துப் போகும்.

29. மாதவிடாயைக் கடந்த பின் பாலுறவில் ஈடுபட்டால் பெண்ணுக்குரிய உச்ச கட்ட இன்பம் நிகழாது.

30. மாதவிடாய்ப் பருவம் முடிந்த பின்னும் பாலுறவில் ஈடுபடும் பெண் காமவெறி பிடித்தவள்.

31. அறுபது வயதில் வருகின்ற மாரடைப்பு மரணத்திற்கும், பாலின்ப ஆற்றாமைக்கும் தொடர்பில்லை.

32. எழுபது வயதிற்குப் பின் ஆண்களின் லிங்கம் செத்துப் போகும்.

33. பேரக் குழந்தைகள் பிறந்த பின் பாலுறவில் ஈடுபடுவது அநாகரீகம்.

34. விவாகத்தை ரத்து செய்ய விரும்பும் தம்பதியர் முழுமையாகப் பாலின்பத்தை அனுபவித்தவர்கள்.

35. தம்பதியின் சண்டைகளுக்கு பாலின்பம் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்.

36. ஆண்கள் தங்களுக்குள் பாலுறவு பற்றிப் பேசிக் கொள்வதைப் போல் பெண்கள் பேசிக் கொள்வதில்லை.

37. குழந்தைகள் பாலுறவைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

38. பெண்ணின் பாலுறுப்பைப் பற்றி தொண்ணூற்று ஒன்பது சதவீத ஆண்களுக்குத் தெரியும்.

39. எந்தப் பெண்ணும் சுய இன்பம் அனுபவிப்பது இல்லை.

40. ஆண்களில் ஒரு சிலர் தான் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.

41. திருமணமான ஆண் சுய இன்பம் அனுபவிப்பதில்லை.

42. சுய இன்பம் உடல் நலத்திற்குக் கெடுதல் செய்யக்கூடியது.

43. லிங்கத்தை மட்டுமே பயன்படுத்தி பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கி விட முடியும்.

44. பாலுறுப்புக்களை சுவைப்பது ஒரு பாவச்செயல்.

45. பாலுறுப்புக்களைச் சுவைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.

46. பாலுறுப்புக்களைச் சுவைக்கும் போது சுவைப்பவர்களுக்கு எவ்வித இன்பமும் கிடைப்பதில்லை.

47. யாருமே பகல் நேரத்தில் பாலுறவைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

48. பெண்ணின் தணிக்கப் படாத காமம் ஆபத்தை உண்டாக்கக் கூடியதல்ல.

49. பெண்ணைக் கவர்ச்சியான நிலையில் கண்டால் கூட, நல்ல ஆணின் பாலுணர்வு கிளர்ந்தெழாது.

50. திரையில் காட்டப்படும் நெருக்கமான காட்சிகளின் போது ஆணின் பாலுணர்வு மட்டுமே கிளர்ந்தெழும்.

என்பன போன்ற எண்ணற்ற பொய்யான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றை நம்பாதீர்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

உரிய அறிஞர்களிடம் ஆலோசனை பெறவும், உரிய நூல்களைப் படிக்கவும் ஒரு போதும் தயங்காதீர்கள். இல்லற வாழ்வில் கோடி ரூபாய் பரிசு உருவாக்கும் அதிசயங்களை விட பாலின்பங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதமானவை.

Saturday, 4 October 2014

பெண்களுக்கான செக்ஸ் டிப்ஸ்!!

பெண்களுக்கான செக்ஸ் டிப்ஸ்!!



நீ பாதி நான் பாதி!
குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.

பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.

அவள் கூறியதாவது:

ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.

அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.

எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்

அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது? என்றாள்.

ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.

ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்

தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே! என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.
திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.

எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.

தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்

திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.

எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.
அனைத்து ஆண்களையும் நான் இவ்வாறு குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலனவர்கள் இவ்வாறு உள்ளனர் என்று அறிய முடிகிறது. தயவு செய்து. உங்கள் மனைவி மிகவும் மிருதுவானவள் அவள் விரும்பாமல் தொடுவது கூட ஒரு கற்பழிப்பிற்கு ஈடாது.. என்பதை புரிந்து கொண்டு தம்பத்தியத்தை இன்பமாய் அனுபவியுங்கள்.
இளமை என்றும் உங்களுடன் பணித்துக்கொண்டேயிருக்கும்...

Friday, 19 September 2014

பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்

பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன.

ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.


பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன.

 ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது  மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.
ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மோனோபாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை , காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

செக்ஸ் சிறந்த வலி நிவாரணி.

செக்ஸ் சிறந்த வலி நிவாரணி.

ஆரோக்கியமான செக்ஸ் சிறந்த வலிநிவாரணி என்று நிபுணர்கள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மனஅழுத்தம், உடல் வலி, தலைவலி என நோய்களைப் போக்கும் சர்வரோக நிவாரணியாய் திகழ்கிறது என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள். தம்பதியர் இடையேயான புரிதலும் உறவின் போதான அந்நியோன்னியமான தொடுதலும் அப்போது சுரக்கும் ஹார்மோன்களும்தான் இந்த வலிகளை போக்கும் அருமருந்தாக திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனஅழுத்தம் போக்கும் இன்றைய வாழ்க்கைச்சூழலில் பலரையும் அவதிக்குள்ளாக்கி வருவது மனஅழுத்தம். வேலை, குடும்பப்பிரச்சினை மற்றும் இன்னபிற பல்வேறு பிரச்சினைகளால் உண்டாகும் மன உளைச்சலும், மன அழுத்தமும் செக்ஸ் உறவின் மூலம் குறைக்கப்பட்டு ரிலாக்ஸான உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனஅழுத்தம் குறைவதன் மூலம் உடலும் ஆரோக்கிமடைகிறது. சரியான பொசிஷன் ஸ்பூனிங் பொசிஷன் எளிதானது, அது

மனஅழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சீராக்குகிறதாம். எனவே காலை நேரத்தில் ஸ்பூனிங் பொசிஷன் உறவுக்கு சரியானது என்கின்றனர் நிபுணர்கள். நோய் எதிர்ப்பு சக்தி செக்ஸ் உறவின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அபரிதமாகஅதிகரிக்கிறது. இதனால் நோய்கள் எளிதில் தாக்காமல் காக்கப்படலாம் தப்பிக்கலாம். தலைவலி, சளி என தாக்கினாலும் உடனடியாக சரியாகிவிடுமாம். உடல் உறுதியாகும் செக்ஸ் குறிப்பாக இதய தசைகளை பலப்படுத்தும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு செக்ஸ் உறவுமுறைகளை பொருத்து கை, கால்கள், பின்புறத்தசைகள், மார்பு என உடலின் பல்வேறு பகுதிகளும் செக்ஸ் உறவின் மூலம் உறுதிப்படுகிறது. இளமை புதுமை முகத்தை பொலிவாக்கி இளமையை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கான ஹார்மோன் சுரக்கிறது. உறவுக்கு முன்பும், பின்பும் விளையாடப்படும் விளையாட்டுக்கள், கொஞ்சல்கள், சீண்டல்கள்தான் இளமையாக்கும் ஹார்மோன்களை சுரக்கிறதாம். கட்டிப்பிடி வைத்தியம் படுக்கையறையில் மட்டும்தான் என்றில்லை. தம்பதிகள் தங்களின் தனியாக சந்தர்ப்பங்களில் அடிக்கடி கட்டிப்பிடிப்பதும் கூட உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தரும் என்கின்றனர் நிபுணர்கள். புற்றுநோயை தடுக்கும் செக்ஸ் பெரும்பாலும் ஆண்களுக்கு வயதானபிறகு வரும் நோய் புரஸ்டேட் கேன்சரை தடுக்கிறதாம். இது பலகட்ட ஆய்வுகளுக்குப்பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவயதில் அதிகமான முறை உடலுறவு கொள்பவர்களுக்கு வயதானபிறகு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டிருக்கிறது. வலிநிவாரணம் தரும் ஆர்கஸம் உறவின் போதான உச்சநிலையே உடல்வலிகளை போக்கும் வலிநிவாரணியாக திகழ்கிறது. முதுகுவலி, மைக்ரேன், மூட்டுவலி, போன்றவைகளுக்கு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை விட உங்கள் துணையோடு ஆரோக்கியமான கலவியில் ஈடுபடுங்கள் வலி பறந்து போய்விடுமாம். ஆரோக்கியமான உறவு செக்ஸை வெறும் காமமாக மட்டுமே பார்த்து அளவுகோலை கடைபிடிப்பதைவிட, துணையை காதலோடு அணுகினால் மகிழ்ச்சியோடு ரோக்கியமும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்தான் உடல் வலியை போக்குவதோடு, ஆரோக்கியத்திற்கும் வலிவகுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

லண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் அமெரிக்காவின் காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி
உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டனர் இரவு நேரத்தில் படுக்கையில் ஆடையின்றி நிர்வாணமாக உறங்குவதையே 57 சதவிகித தம்பதிகள் விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாக 48 சதவீத தம்பதிகள் கருத்து கூறியுள்ளனர். இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இரவு உடைகளை அணிந்து உறங்குவதே தங்களுக்கு வசதி என்று 43 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்று 15 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில் ஆடையின்றி படுப்பது உங்களுக்குள் உடல் மற்றும் உணர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மன்ஹட்டனை சேர்ந்த உறவு மற்றும் சிகிச்சை நிபுணர் அம்பர் மடிசன் கூறியுள்ளார். நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனவும் தாம்பத்ய உறவுக்கு அது பச்சை கொடி காட்டுவது போன்றது என்கிறார் நிபுணர் மடிசன் இப்போது உள்ள சவாலான வாழக்கை சூழ்நிலையில் இது போன்ற செயல்கள் தம்பதியரிடையே நெருக்கமும் வலுவான உறவும் ஏற்பட தேவை எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Monday, 25 August 2014

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்









ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உ
டல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.
சில அரவாணிகள், டாக்டர்களிடம் சென்று கொடூரமாக தண் ஆண்குறியையும், விரைப்பையும் முழுவதுமாக வெட்டி சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு சிறு இடம் விட்டு தைத்துக் கொள்வர். இதில் 10 அலிகளுக்கு 8 அலிகள், பிறப்பு உறுப்பு பகுதியில் சீழ்வைத்து, உடல்நலம் கெட்டு இறந்து விடுவார்கள். ஒரு சிலர் பிழைத்து “நான் முழுவதுமாக” பெண்ணாகவே மாறி விட்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்வார். அவர்களுக்கு முறையான பெண்குறி (யஹஞ்ண்ய்ஹ) இருக்காது. அந்த அலி தனக்கு பெண்குறி இருப்பதுபோல் நடித்து தன் வாடிக்கைக்காரர்களுடன் உடல்உறவு கொள்ள அழைத்து, பின் தனது ஆசனவாய் (Vagina) வழியில்தான் உடல்உறவு வைத்துக் கொள்வார்.
இப்படி ஆண் ஆணுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பால்வினை நோய்கள் பல, விருந்து வைத்து விடுகின்றன. அதன்மூலம் HIV என்ற எய்ட்ஸ் பங்காளி யையும் வரவழைக்க உதவுகின்றன. இந்த ஓரினச்சேர்க்கை எங்கு எவரிடத்தில் அதிகம் நடைபெறுகின்றது?
1. ஒரே இடத்தில் தங்கி வாழும் ஹோட்டல் சர்வர்கள்.
2. ஹாஸ்டலில் ஒரே அறையில் பலபேர் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.
3. ஒரே ரூமில் தங்கி வாழும் பஸ் டிரை வர்கள் மற்றும் வேலையாட்கள்.
4. பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளி கல்லூரி தோழிகள்.
5. நீண்ட தூரத்தில் ஒரே இடத்தில் தங்கி வாழும், மனைவியைப் பிரிந்து பணியாற்றும் காவலாளிகள், இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், ஆபீசர்கள், மருத்துவ பிரதிநிதிகள்.
6. ஒரே சிறையில் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகள்.
7. மனைவி குழந்தை பெற்றுவிட்டால் இப்போது உடல்உறவு அவளுடன் கொள்ளக் கூடாது என்ற தப்பான எண்ணத்தில் தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் நண்பர்களுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்கள்.
8. ஆண் கலைஞர்கள் நடனம், நாட்டியம், டிஸ்கோ, பாட்டு என்று ஊர் ஊராய் சென்று ஒரே இடத்தில் தங்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.
9. பெரிய செல்வந்தார்கள் உயர் மட்டத்தில் வாழும் ஆண்கள், பார்ட்டி, டின்னர், சீட்டாட்ட ‘கிளப்பில்’ ஆடிவிட்டு அதன்பின் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் என இந்த ஓரினச்சேர்க்கை வட்டம் விரிவடைந்து வருகின்றது.
ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு
ஒன்று
ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.
இரண்டாவது வகை
தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.
இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.
1. சிபிலிஸ் என்ற கிரந்திநோய் (Syphillis) :
இந்த நோயை தன்னிடம் வைத்து இருக்கும் ஒரு (எஹஹ்) ‘கே’ யுடன் அதாவது ஓரினச் சேர்க்கையில் வாழும் ஒரு ஆணுடன், வேறுஒருவன் உடல்உறவை வைத்துக் கொள்ளும் போது அவனது ஆசனவாயில் 10 முதல் 90 நாட்களில் இந்த நோய் புண்களாகத் தோன்றும் இந்த நோய்க்குரிய கிருமியின் பெயர் டிரப்னிமா பாலிடம் (Treponema Palidum). இது மிக்க கொடிய நஞ்சுக்குணம் கொண் டது.
ஆசனவாயின் உட்புறத்திலும் ரெக்டம் (Rectum) என்ற குதப்பகுதியிலும், புண்கள் தோன்றி இருக்கும். அதனால் மலம் கழிக்கும்போது வலி, எரிச்சல், சீழுடன் கூடிய திரவம் அல்லது ரத்தமும் வடிய ஆரம்பிக்கும். 6 மாதம் வரை வைத்தியம் மேற்கொள்ளா விட்டால், இந்த வியாதி ஆசனவாயில் ஓரப்பகுதியிலும் காண்டிலோமோலேட்டா (Condylomata) என்ற கொடிய வியாதியை தோற்றுவிக்கும். இது புற்கள் மாதிரி முளைத்து வளர்ந்து இருக்கும்.
வாய்வழிப்புணர்ச்சி இருந்தால் வாயிலும் புண்கள் தோன்றும். அரை இடுக்கு களில் வலிக்காத நெரிகட்டிகள் தோன்றும்.
முறையான வைத்தியம் பார்க்கா விட்டால் இரத்தம் மூலம் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவி தோல் முழுவதும் தட்டையான கொப்பளங்கள், பத்துக்கள் தோன்றும். தீராத தொல்லைகளை கொடுத்து பரம்பரைக்கும் நோயை நீடிக்க வைத்துவிடும்.
பெண்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட பெண்களுக்கும், இந்த சிபிலிஸ் நோய் வரும்.
ஆண்களுக்கு வரும் தொல்லைகள்மாதிரி இவர்களுக்கும் தோன்றி தொல்லை கொடுக்கும்.
2. கோனாரியா என்ற வெட்டை நோய் :
ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசன வாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். ஆசனவாய் உளபகுதியை (Prostocopy) உருப்பெருக்கி கருவி கொண்டு சோதிக்கும் போது, மலக்குடல் பாதை சிவந்தும், புண்கள் தோன்றியும், புண்ணில் இருந்து சீழ் கோர்த்து இருப்பதும் தெரிய வரும். இரத்தமும் வடியும் நிலை இருக்கும். சீழ் திரவத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது வெட்டை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படும். கல்சர் டெஸ்ட் செய்யும்போது இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்படும். வாய் வழி புணர்ச்சி கொண்டவனுக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.
பெண்கள் :
இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

3. ஹெர்பிஸ் என்ற அக்கிக் கொப்பளங்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒரு Gay ஆசனவாயைச் சுற்றிலும், அதன் உட்புற பாதையிலும் புண்ணாக வெடிக்கும்.
மலம் கழிக்கும்போது எரிச்சல், ஆசனவாயைச் சுற்றிலும் அரிப்பும் (Mucoid) ஏற்படும். மூக்காய்டு என்ற சளித்திரவம் ஆசனவாயில் இருந்து வடிந்து கொண்டு இருக்கும் இந்தப் புண்கள் வரக் காரணமான HIV ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் ஹோமினிஸ் என்ற நுண்கிருமி, கிருமியை சிநேகம் பிடித்து கூட்டிவரும்.
வாய்வழிப்புணர்ச்சி கொண்ட நபருக்கு வாயில் உதட்டு ஓரங்கள் உதட்டின் உட்புறப்பகுதி, தொண்டைப்பகுதி என பல இடங்களிமல் இந்த நோய்க்கிருமி இடம் பிடித்து சிறு சிறு புண்களைக் கொடுக்கும். இந்த புண்கள் வலி கொடுக்கும் தொண்டை அழற்சி ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமல் அவதியுற நேரிடும். முறையாக வைத்தியம் மேற் கொள்ளாவிட்டால் இப்புண்கள் கடுகுகள் மாதிரி சிறு, சிறு புண்களாக பல மாதம், வருடங்கள் என திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கும். மிக கவலை தரும் நோயாக மாறும்.

பெண்கள் :
ஓரினச்சேர்க்ககையில் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கு, ஆண்களுக்கு வருவது மாதிரியே இப்புண்கள் ஆசனவாயில் வாயின் உதட்டுப்பகுதி தொண்டைக்குழி முதலிய இடங்களில் தோன்றி அவதியு வைக்கும்
4. ஜெனிட்டல் வார்ட்ஸ் (Gental Warts) :
ஓரினச்சேர்க்கையில் ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒருவனுக்கு ஜெனிட்டல் வார்ட்ஸ் என்ற விஷப் பருக்கள், ஆசனவாய்ப் பகுதியில் உடல்உறவு வைத்துக் கொண்டு சில வாரங்களில், ஏன் சில மாதங்களில் தோன்றக் கூடும். இந்த நோய் கிருமியின் பெயர் ஹீயூமன் பாப்பில் பாமா வைரஸ் (Human/ Papilloma Virus) என்பதாகும். ஆசனவாயை சுற்றிலும் பெரினியம் என்ற ஆண்குறிக்கும் மலத்து வாரத்துக்கும் இடையில் உள்ள இடத்திலும் இப்பருக்கள் தோன்றும். ஆசனவாய் உட்புறத்திலும், இந்த விஷச் செடி முளைக்கும். மலம் வரும்போது வலியும், எரிச்சலும், இரத்தமும் கலந்து வடிந்து தொல்லை கொடுக்கும். வாய்வழிப் புணர்ச்சி கொண்டவர்களுக்கு வாயின் ஓரங்களிலும் தொண்டைக்குழியிலும் இப்படி பருக்கள்தோன்றி மிக எச்சில் விழுங்க முடியாமல் தொல்லை கொடுக்கும். முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால் புற்றாகவும் (Cancer) மாறக்கூடும்.
பெண்கள் :
ஆசனவாய் வழிப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கும் விஷப் பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கும்.
5. மஞ்சள் காமாலை வியாதி :
ஓரினச்சேர்க்கையர், ஆசனவாய் வழி உடல்உறவு வைத்துக் கொள்பவருக்கு “ஹெப்படைடிஸ் பி வைரஸ்” (Hepatitiis B) என்ற நுண்கிருமி இரத்தத்தின் வழியே உள்ளே நோயை உண்டாக்கி விடுகின்றது. இந்த நோய் கண்ட “அலிக்கு” உடல் சோர்வு, களைப்பு, வயிறு, வீக்கம் சிறுநீர் மஞ்சளாக போதல், கண்ணின் வெள்ளைப்படலம், மஞ்சளாக மாறுதல் முதலியன ஏற்படும். ஜான்டிஸ் என்ற இந்த மஞ்சள் காமாலை நோய் மிக விஷத்தன்மை கொண்டது. நோய்க்கிருமி மிகக் கடுமையாக இருந்தால் பிழைப்பது அரிது.
7. அமீபியாசிஸ், சியார்டியாசிஸ் என்ற வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை நோய்கள் :
ஓரினச்சேர்க்கையில் அவனது ஆசனவாய் புணர்ச்சி மூலம் அமீபியாசிஸ் சியார்டியாசிஸ் போன்ற வியாதிகள் தோன்றி வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை போன்ற நோய்கள் வரும். இதற்காரணமான பார சைட்டுகள் ள்(Parasites) என்ற கிருமிகள் என்டமிபாகிஸ்டோலிகா சியார்டியா லேம்லியா (Entamoeba/ Histolylica/ Giardia/ Lambia) என்பதாகும். இவைகளால் பலவிதமான வயிற்றுக் கோளாறு உண்டாகும் அடிவயிற்று வலி சளி மாதிரி நுரையுடன் கூடிய மலம் வெளி யேறுதல், மலத்துடன் இரத்தம் வருதல் என பலவித கஷ்டங்களைக் கொடுக்கும். அதாவது கழிசல் நோய் கொடுக்கும்.
பெண்கள் :
ஓரினச்சோக்கை மூலம் ஆசனவாய் வழியாக இந்த கழிசல் நோய்கள் குடல்களில் பரவி வயிற்றுவலி, வயிற்றாலை, வயிற்றுக் கடுப்பு என பெண்களும் துன்பப்படுவர்.
இவ்விதம் ஓரினச்சேர்க்கை மூலம் வரும் பால்வினை நோய்களைப் பற்றி விரிவாக அறிந்தோம். எல்லா பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோய்க்கு வழிகாட்டி நிற்கும் இது .

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…


பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன? ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
* இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்

* அந்தரங்க பேன்
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:
* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்


சுடுநீர் குளியல்
பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.
உள்ளாடை
அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.
மொபைல்
பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
போதிய உடலுறவு இல்லாமை
உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல்
சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
சோயா பொருட்கள்
ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.
டிவி பார்த்தல்
பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும்ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

லேப்டாப்
தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Saturday, 7 June 2014

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் 

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….
ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.
குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.
பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.
பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்


பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளிபோவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பலபெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவதுஇருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வுகாண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில்பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியானவாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின்வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்துவெளிப்படும்.இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல்,வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான்ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டுமூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ்துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன்,கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில்பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிகஉதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்குமுக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும்பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்குகாரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்குமற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம்போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன்மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாகமாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும்இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.மனரீதியான ஆறுதல்: 
இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களதுபிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும்டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலிஉள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்குமட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களைசத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமானநாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம்.நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துஅடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதைதடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்
அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனைதினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போதுஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்குபிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்குஎடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்டமாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனேவெளிப்படும்.செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம்மாதவிலக்கு ஒழுங்காகும்.செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும்வயிற்று வலி குணமாகும்.சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக்குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.ரெசிபி
எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைதேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றைஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்தஎனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும்.உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.பேரீச்சை பால்: 
பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டுசேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில்இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்துஉட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது.இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.கொள்ளு கூட்டு: 
மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்துசீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.டயட் 
பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்றுசொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால்உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வதுஅவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின்எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும்.நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.