Search This Blog in tamil

Showing posts with label ஆண்குறி_பராமரிப்பு. Show all posts
Showing posts with label ஆண்குறி_பராமரிப்பு. Show all posts

Monday, 19 July 2021

மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்

 மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:  


   பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும்  மாநிறத்திற்கும் சற்று அதிகமா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிரதேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற பகுதியைக் காட்டிலும் நிறம் மங்கி கறுத்தே காணப்படும். இதற்கான காரணம் பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.


(ஆண்களுக்கு இந்த நிற மாற்றம் எந்த பாதிப்பையும் மனதில் உருவாக்குவதில்லை. பெண்களே அதிகம் வருந்துகின்றனர்): 


நம் நாட்டில் வெப்பம் அதிகம். அதனால் வியர்வை அதிகம் சுரக்கும். குறிப்பாக மறைவிடங்களில் உருவாகும் வியர்வை உலராமல் அப்படியே ஈரமாகவே இருக்கும். சரி காரணங்களைப் பார்ப்போம்.


          1. பருத்தி அல்லாத செயற்கை இழையால் ஆன உள்ளாடைகளை உபயோகித்தல். இதனால், வியர்வை உறிஞ்சப்படுவது இல்லை. மாறாக அந்த வியர்வை அங்கேயே தங்கிவிடுகிறது. மேலும் நாம் நடத்தல், வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகையில் அங்கே அதிகப்படியான உராய்வு ஏற்படுகிறது. மறைவிடங்களில் உள்ள தோல்ப் பகுதியானது மற்ற இடங்களில் உள்ளதை விட மிகவும் மென்மையானது. தொடர்ந்து ஏற்படும் இந்த உராய்வினால் அந்த தோல் பகுதி கருமையாகத் துவங்குகிறது, நாளடைவில் ஒரு தழும்பைப்போலவே மாறி கருமை நிறமாகவே மாறிவிடுகிறது. 


        2. அடிக்கடி மறைவிடத்தில் உள்ள ரோமங்களை சவரம் செய்வதால் தோல் பகுதி கடினமாகி கறுத்து விடுகிறது. சில பெண்கள் ரோமங்களை அகற்ற சில ரசாயனம் மிகுந்த கிரீம்களை உபயோகிக்கின்றனர். அவற்றின் ரசாயனக் கலவை தோலைக் கருமையாக்கி விடும். 


        3. ஈரம் அதிகமாய் இருந்தால் கிருமித் தொற்றுதல் மிக அதிகமாய் இருக்கும். புண் அல்லது அரிப்பு போன்றவை ஏற்பட்டு கருமயாக்கிவிடும். 


தீர்வு:


பெண்கள் பருத்தி அல்லாத செயற்கை இழையினால் நெய்த உள்ளாடைகளை தவிர்த்து, பருத்தியால் ஆன உள்ளாடைகளையே கட்டாயம் அணிய வேண்டும். அதனால் வியர்வை உறிஞ்சப்படும். மேலும் அதிக இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியாமல், சற்று தளர்வான ஆடைகளை அணியலாம். இந்த இறுக்கமான ஆடைகளே வியர்வையுடன் சேர்ந்து அதிகப்படியான உராய்விற்கு காரணமாகிறது. உராய்வு  தவிரக்கப்படாலே பாதி  பிரச்னை சரி ஆகி விடும். அதே போல குளித்த பின்பு மறைவிடங்களில் உள்ள நீரை முற்றிலும்  உலரும் வரை துடைத்து எடுத்து விட வேண்டும். அவை எவ்வளவு உலர்வாக உள்ளதோ அவ்வளவு நல்லது. 


மேலும், ரசாயன ரோம அகற்றிகளை தவிர்க்கவும். அதற்கு பதில் வாக்சிங் (waxing) மூலம் ரோமங்களை அகற்றலாம். 


அடிக்கடி சவரம் செய்யாமல் சற்று இடை விட்டு. சவரம் செய்தல், ரோமங்களை வெட்டி விடுதல் (trimming) நிச்சயம் தோலை பாதிப்பிலிருந்து காக்கும். 


கருமை நிறத்தைப் போக்க சில வீட்டு வைத்திய முறைகள்:


1. எலுமிச்சம் பழத்தை கருமையா பகுதிகளில் சில துளிகள் பிழிந்து விட்டு, மெதுவாக மசாஜ் செய்துவிடலாம். அப்படி செய்கையில் எலுமிச்சை சாறு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் சென்று விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு எரிச்சலைக் கொடுக்கும்.


2. தயிர் கொஞ்சம் எடுத்து அந்த பகுதிகளில் பூசி மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். 


3. 1 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 10 துளிகள் பன்னீர் துளிகள் சேது குழைத்து அதை அந்த பகுதிகளில் இட்டு, அரை மணிநேரம் கழித்து கழுவி விடலாம். 


உங்களுக்கு எது வசதியோ அதை செய்து கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்திய முறைகள், முழுமையாக நிற மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் லேசான நிறமாற்றம் தரும்.


நன்றி 

Sunday, 20 June 2021

அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு.

 அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு...


பொதுவாக பெண்கள் சந்திக்கும் ஒரு தர்மசங்கட பிரச்சினை தான் அந்தரங்கப்பகுதியில் ஏற்படும் அரிப்பு. இதுபல காரணங்களால் ஏற்படுகின்றது.


குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகள், அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன், நாப்கின் அலர்ஜி, யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் போது அரிப்பு, நமச்சலை சந்திக்க கூடும்.


அதுமட்டுமின்றி உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு, சுய இன்பம் காணுதல், ,கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் போன்றவற்றால் கூட அரிப்பு ஏற்படும்.


பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை  அறிகுறிகளாகும். 


இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.


இதற்கு இயற்கை முறையில் கூட சில தீர்வுகள் உள்ளது. எனவே அவற்றை தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது. தற்போது அவை என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி பார்ப்போம்.


* சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.


* 1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள். 


* யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.


* கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.


தடுக்கும் முறைகள் :


* இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.


* குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.


* உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


* ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள். 


* பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

Tuesday, 31 March 2020

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)


உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன.
இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம்.
உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when washing the penis)
மென்மையான சோப்பு: வாசனைப் பொருள்கள் சேர்க்கப்படாத, மென்மையான சோப்பைப் பயன்படுத்தவும். நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் பெரும்பாலானவை வாசனை தரும் வேதிப்பொருள்களையும் பிற சுத்தப்படுத்தும் வேதிப்பொருள்களையும் கொண்டவை. அவை ஆணுறுப்பைப் பாதிக்கக்கூடியவை. அவை மெல்லிய ஆணுறுப்புத் தோலில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

உங்கள் தோல் எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தால் அல்லது உங்களுக்கு சரும ஒவ்வாமைகள் இருந்தால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுக்க உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

மொட்டு முனைத்தோல் அகற்றாத ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning uncircumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். பிறகு ஆணுறுப்பின் தண்டிலும் விந்தகங்களிலும் அதைத் தேய்த்து சுத்தம் செய்யவும்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாகும்.
மொட்டு முனைத்தோலை கூடுமானவரை பின்னுக்கு இழுக்கவும். இயற்கையாக எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மட்டும் இழுக்கவும். அதற்கு மேல் இழுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படிச் செய்வதால் ஆணுறுப்பு சேதமடைந்து காயம் ஏற்படலாம்.
மொட்டு முனைத்தோலுக்கு அடியில் சோப்பு போட்டு, சோப்பு போகும்படி நன்றாகக் கழுவவும். தோலுக்கு அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றும் வகையில் சோப்பு நுரையைத் தேய்த்துக் கழுவவும்.
பிறகு முனைத் தோலை வழக்கமான நிலைக்கு இழுத்து விடவும்.
மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்ட ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning circumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். ஆணுறுப்பின் தண்டு, முனைப் பகுதி மற்றும் விந்தகங்களில் நுரையைத் தேய்த்து சுத்தம்செய்யவும், பிறகு நீரால் நன்றாகக் கழுவி நுரையைப் போக்கவும்.
மொட்டு முனைத்தோல் இல்லையென்றாலும், ஆணுறுப்பின் மொட்டை சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் அங்கு வியர்வை, பாக்டீரியா, பிற அழுக்குகள் சேர்ந்திருக்கலாம்.
கழுவிய பிறகு நன்கு உலரவிடவும் (Drying after washing)

ஆணுறுப்பை சுத்தம் செய்த பிறகு மென்மையான டவலைக் கொண்டு முன் தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியையும் பிற பகுதிகளையும் விந்தகங்களையும் துடைக்கவும். ஆனால் மெதுவாகத் துடைக்க வேண்டும், அதே சமயம் கூடுமானவரை உலர்த்த வேண்டும். இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அதிக ஈரம் இருந்தால் யீஸ்ட் நோய்த்தொற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஆணுறுப்பை சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய பிற விஷயங்கள் (Other precautions to follow while cleaning the penis)
ஆணுறுப்பை அளவுக்கு அதிகமாகக் கழுவக்கூடாது. மிகவும் அடிக்கடிக் கழுவினால் அல்லது கடினமான அல்லது வாசனை உள்ள சோப்பைக் கொண்டு கழுவினால் ஆணுறுப்பில் வலியும் எரிச்சலும் உண்டாகலாம்.
சிலர் உடலுக்குப் போடும் பவுடரை இனப்பெருக்க உறுப்புப் பகுதியிலும் பயன்படுத்துவார்கள். ஆணுறுப்பில் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும். முன் தோலுக்கு அடிப்பகுதிக்கு பவுடர் சென்றுவிட்டால் எரிச்சலும் அசௌகரியமும் உண்டாகலாம். சிறுநீர்க் குழாயில் பவுடர் நுழைந்துவிட்டால் சிறுநீர்க்குழாய் எரிச்சல் ஏற்படலாம். சமீபத்தில், பெண்களுக்கு சினைப்பைப் புற்றுநோய் உண்டாவதற்கும் டால்கம் பவுடருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கப் பகுதிகளில் பவுடர் போட்டுவிட்டு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், பெண்ணுறுப்பில் டால்கம் பவுடர் நுழைந்து அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அந்தரங்கப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டவும். முடியின் தண்டு வியர்வையை அப்படியே சேகரித்து வைக்கும், இறந்த செல்கள் மற்றும் எண்ணெயையும் (சீபம்) தங்கவைக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இந்தப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டினால், நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். இப்பகுதியில் ஷேவிங் செய்வதால் ஷேவிங் ரேசரால் புண்கள் ஏற்படலாம், அரிப்பு ஏற்படலாம், ஆகவே ஷேவிங் செய்வதைவிட வெட்டுவதே நல்லது.
உடலுறவிற்கு முன்பும் பிறகும் ஆணுறுப்பைக் கழுவவும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புப் பகுதி சுத்தமாக இருக்கும். உங்களுடன் உடலுறவில் ஈடுபடும் இணையருக்கும் பாதுகாப்பானது. உடலுறவிற்குப் பிறகு, உடல் திரவங்களை ஆணுறுப்பிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமாகும். இந்தத் திரவங்கள் பாக்டீரியா வளர்ச்சிக்கு எதுவாக இருக்கலாம், குறிப்பாக அவை உலர்ந்தபிறகு பாக்டீரியாக்கள் எளிதில் பெருகலாம். டிஷூ பேப்பரை வைத்துத் துடைக்க வேண்டாம், சுத்தப்படுத்த சோப்பையும் நீரையும் பயன்படுத்தவும்.

Thursday, 20 February 2020

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள்.

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள்.

லிங்கத்தின் விரைப்புத் தன்மையப் பாதுகாக்கின்ற உணவுப் பொருட்களின் பட்டியல் இது,

தர்பூசணிப் பழம், பப்பாளி, வெண் பூசணி விதைகள், கொட்டை வகைகள் (வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு போன்றவை ) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், மிளகாய், குறுமிளகு போன்ற காரமுள்ளவை.

உயிர்ச் சத்துக்கள் நிறைந்த அனைத்து வகையான பழ வகைகள். குறிப்பாக வாழை, மாதுளை, ஸ்ட்றாபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை.

அனைத்து வகையான கீரை வகைகள். பீட் ரூட், கேரட், முட்டைக் கோஸ், அசைவத்தில் ஈரல் போன்றவை.

மற்றும் தேன், தண்ணீர் நாளொன்றிற்கு மூன்று லிட்டர்.

உடற்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், ஓட்டம், அல்லது வியர்க்க வைக்கும் வேகமான நடை மூன்று கிலோ மீட்டர்.

மேற்கண்ட உணவுப் பொருட்கள் லிங்கத்தின் வீரியத்தை மட்டும் பராமரிப்பதில்லை. புற்று நோய், மாரடைப்பு போன்ற உயிர்க் கொல்லி நோய்களையும் வருமுன் தடுக்கக் கூடியவை.

இதில், தர்பூசணிப் பழத்தை இயற்கையான வயாக்ரா என்றும் பப்பாளியை தேவதைகளின் உணவு என்றும் கூறுகிறார்கள் .

மீண்டும் ஒருமுறை சுருக்கமாக ஆணின் லிங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆணின் லிங்கம் நரம்புகளால் உருவான உறுப்பு. அந்த நரம்புகளில் பாயும் இரத்தத்தின் அளவிற்கேற்ப லிங்கத்தின் விரைப்புத் தனமை இருக்கும்.

உடலில் ஏதேனும் நோய் தோன்றும் போது இரத்தம் லிங்கத்திற்கு வராது. அதனால், விரைப்புத் தனமை இருக்காது. இதை ஒரே நாளில் கண்டுபிடித்து விடலாம்.

மனநிலை பாதிக்கப் பட்டாலும், லிங்கத்தின் விரைப்புத் தன்மை பாதிக்கப் படும். தன்னம்பிக்கையை அதிகரிப்பதே இதற்கான ஒரே தீர்வு. தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான சுலபமான வழி மனைவிக்குரிய இன்பங்களை வழங்குதல். பயன்படுத்தாவிட்டாலும் லிங்கம் பாழடையும். அதற்கும் உள்ள ஒரே தீர்வு மனைவிக்குரிய இன்பங்களை வழங்குதல்.

Saturday, 28 July 2018


ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்மை குறைபாடு என்றால் என்ன?

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
வாழ்க்கை முறைகள்
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.
மூலிகைகள்
அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு – வேப்பிலை, சிவனுக்கு – வில்வம், விநாயகருக்கு – அருகம்புல், விஷ்ணுவுக்கு – துளசி, பிரம்மாவுக்கு – அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.
அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.
உணவு முறைகள்
நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.
ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.
கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.
மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.
- See more at: http://tamilwin.in/archives/19480#sthash.5RqZJqiq.dpuf

Monday, 25 August 2014

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…


பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன? ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
* இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்

* அந்தரங்க பேன்
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:
* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.