Search This Blog in tamil

Showing posts with label உடலுறவுக்கு_பின். Show all posts
Showing posts with label உடலுறவுக்கு_பின். Show all posts

Saturday, 22 May 2021

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

 முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!


திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே.

தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ்

ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு.

காதல் பாடல்கள்

இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா?

சமையலறை சங்கீதம்

உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம்.

அசத்தலான ஆல்பம்

போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

சின்னதாய் ஒரு ஷாப்பிங்

வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

விடுமுறை கொண்டாட்டம்

எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம்.

சின்ன சின்ன காமெடி

இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

வேடிக்கையான தோல்வி

செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்..


நன்றி 

Tuesday, 11 May 2021

உடலுறவுக்கு பின்னர்

 📷கணவன் மனைவி உறவுக்கு பின் ஆரோக்கியமான உறக்கம் நீடித்திருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் பெண்கள் அதிகப்படியான உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். இவை தற்காலிகமானதாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே தொடரும் போது கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது. உறவுக்கு பின் உண்டாகும் இந்த சிறிய அறிகுறிகளை கூட அலட்சியப்படுத்த வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். என்ன என்பதை பார்க்கலாமா?உறவுக்கு பின் உண்டாகும் இந்த அறிகுறியை அலட்சியப்படுத்த வேண்டாம் எச்சரிக்கும் மருத்துவர்கள்...


​உறவுக்கு பின்

📷

கணவன் மனைவி இடையேயான உறவுக்கு பிறகு சில பெண்கள் சிறியதாகவோ அல்லது தீவிரமாக வோ சில பாதிப்புக்கோ உள்ளாகிறார்கள்.

இவை பொதுவான சிறிய அளவிலான மாறுதலாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் வேறு மாதிரியான அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டும். மற்றுமொன்று ஆரோக்கிய குறைபாடு என்பது உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் உண்டாகலாம் என் பதும் குறிப்பிடத்தக்கது. சில பெண்கள் காரணமின்றி அழுவதாக ஆய்வு ஒன்றும் தெரிவித்துள்ளது.

பொதுவாக உறவுக்கு பின் கணவன் மனைவி இருவருமே ஆழ்ந்த உறக்கம் அடைவதுண்டு. ஆனால் இந்நிலை மாறி சில பெண்கள் கீழ்க்கண்ட அறிகுறிகளை கண்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

​வயிறு வலி

📷

சில பெண்களுக்கு உறவுக்கு தீவிரமான வயிறு வலி உண்டாகும். சில நேரங்களில் வலியானது வாந் தியை உண்டு செய்யும். வித்தியாசமாக உறவு கொள்ளும் போது தசைபிடிப்பு உண்டாகி வலி உரு வாவது பொதுவானது. இவை அதிகப்படியான வலியை உண்டாக்காது. ஆனால் தொடர்ந்துஇந்த வலி, உடல் ஆரோக்கியம் குறைவும், சோர்வு போன்றவை நீண்ட நேரம் இருக்கும் போது அதை அலட்சியப்படுத்த கூடாது.

குறிப்பாக ஒவ்வொரு முறை உறவுக்கு பின்னும் இந்த அறிகுறி தென்பட்டால் நிச்சயம் மருத்துவ பரி சோதனை தேவை. உடலுறவுக்கு பின் பெண்களுக்கு வலி ஏற்பட்டால் அது கட்டி, புண், காயங்கள் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி உணர்வு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படும்.

​அதிகப்படியான எரிச்சல், நமைச்சல்

📷

வலியை தாண்டி பெண் உறுப்பில் எரிச்சல் பிரச்சனையும் சமயங்களில் உண்டாகும். உறவின் போது உண்டாகும் காயம் தவிர்த்து வேறு விதமான எரிச்சல் பிரச்சனையும் ஏற்படும். இந்த எரிச்சல் நீண்ட நேரம் இருக்காது.

உறவுக்கு பின் மணிக்கணக்கில் எரிச்சலை அடையும் பெண்கள் உண்டு. தாங்க முடியாத எரிச்ச லால் இந்த பெண்கள் மீண்டும் உறவு கொள்வதையே விரும்ப மாட்டார்கள். இதுதான் காரணம் என்று நீங்களே முடிவெடுக்க வேண்டாம். இவை பாலியல் தொற்று பிரச்சனையாக இருக்கவும் வாய்ப்புண்டு.

பல பெண்கள் உறவுக்கு பின் உண்டாகும் எரிச்சலை வெளியில் சொல்லாமல் உறவு கொள்வதை விரும்புவதே இல்லை. இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை உருவாவதும் அதிகரித்து வரு கிறது. இந்த பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் மருத்துவரை தேவைப்பட்டால் பாலியல் மருத் துவரை சந்திக்கவும் தயங்க வேண்டாம்.

​இரத்த கசிவு

📷

உறவுக்கு பின் பெண்களுக்கு ரத்த கசிவு உண்டானால் பரிசோதனை செய்வது நல்லது. மாதவிலக்கு முடிந்து அடுத்த 2 நாட்களில் உறவு கொள்ளும் போது இரத்த கசிவு வந்தால் பயப்பட தேவையில் லை. ஆனால் மற்ற நேரங்களில் உறவுக்கு பின்பு இரத்த கசிந்தால் உடனடியாக கவனிப்பது பிரச்ச னைகளின் தீவிரத்தை குறைக்க செய்யும்.

ஒவ்வொரு முறையும் உறவுக்கு பின் இரத்தம் கசிந்தால் கருப்பை வாயில் புண் வேறு பல காரணங்க ளும் இருக்க வாய்ப்பு உண்டு. இதை கவனிக்காமல் விட்டால் கிருமித்தொற்று உண்டாகக் கூடும்.

​உறவின் போது தொடங்கும் வலி

📷

கருப்பை மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது. அதில் ஒன்று எண்டோமெட்ரியம். இவையும் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது. இதனுடைய வெளிப்புற அடுக்கு மெல்லியதாகவும், சிறியதாகவும் இருக்கும். சில பெண்களுக்கு உறவு கொள்ளும் போதே தாங்க முடியாத வலி உண் டாகும். கருப்பை வாயில் ஏற்படும் பலமான மோதல் காரணமாகவும் தாங்க முடியாத வலி உண்டாக க்கூடும்.

கருப்பை சுவரை சுற்றி உள்ள திசுக்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது வலி அதி கமாக உண்டாகும். உறவுக்கு பின்பும் கடுமையான வலியோடு வாந்தி குமட்டல் ஒவ்வாமையை உண்டாக்கும். அதனால் இந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

​ஆரோக்கியமான உறவு

📷

இவை தவிர சிறுநீர்த்தொற்று, பிறப்புறுப்பில் புண் போன்ற பிரச்சனைகளையும் பெண்கள் அவ்வ போது சந்திப்பதுண்டு. திருமணத்துக்கு பிறகு உட்லை பராமரிக்கும் முறையில் போதிய விழிப்புண ர்வை கணவன், மனைவி இருவருமே பெற்றிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகி றார்கள்.

உறவுக்கு முன்னும் பின்னும் உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். உறவுக்கு பின் உண்டாகும் அறிகுறியை அலட்சியம் செய்யாமல் முதலில் உங்கள் துணையுடன் கலந்து ஆலொசனை செய்வது நல்லது. மருத்துவ ரீதியிலாக சிகிச்சை பெறுவதற்கு முன்பு பாலியல் குறித்த சந்தேகங்களை மருத் துவர்களிடம் தயக்கமின்றி கேட்கலாம். ஆரோக்கியமான உறவு, ஆரோக்கியமான கருத்தரிப்பு இரண்டுமே ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமானவை.