செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான்
என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக
செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர்
செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ்
உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக
அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு
கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த
சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும்
சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள்
என்று கூறப்பட்டவர்கள் ஆவர் இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ்
விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள்
உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உடல் ரீதியான கோளாறு
காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது.
மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ்
விருப்பங்கள்,ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல
முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கொடுத்த பதிலை வைத்து
இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து
பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம்
ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன. இந்த
ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே
தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க
வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை
அதிர்வுகளும் இருந்ததாம். அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம்
அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில்
செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம்
அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள்
வந்துள்ளனராம்.
நீங்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையை காதலித்தால் செக்ஸ் தெய்வீகமானது புனிதமானது என்பதை புரிந்து கொள்வீர்கள் பாலுறவு என்பது ஒரு குழு விளையாட்டு... வெற்றி தோல்வி இல்லாத விளையாட்டு.... கொடுத்து பெறுவது என்பதே ஒரே விதி... (Secret of Sex👍)
Search This Blog in tamil
Showing posts with label செக்ஸ்_அடிமை. Show all posts
Showing posts with label செக்ஸ்_அடிமை. Show all posts
Friday, 19 September 2014
செக்ஸ் அடிமை
செக்ஸ் அடிமை
By on
குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல்
மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ்
அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப்
பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல்
சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும்
மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.
* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள்
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல்
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்
இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் – மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.
பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன.
எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்
Subscribe to:
Posts (Atom)