Search This Blog in tamil

Showing posts with label உணவு_முறை. Show all posts
Showing posts with label உணவு_முறை. Show all posts

Tuesday, 8 February 2022

ஆண்மை பெருக

 படித்ததில் பிடித்தது:


ஆண்மை பெருக தாம்பத்திய உறவு சிறக்க விந்து விருத்தி:-


1. தாம்பத்திய உறவு சிறக்க


1. கணவருடனான உடலுறவு திருப்தி இல்லையென்றால், ஆலமரத்தின் கொழுந்தினை அரைத்து தினமும் சிறிது தண்ணீருடன் கலந்து கணவருக்கு கொடுத்து வந்தால், சிறிது நாட்களில் திருப்திகரமான உடலுறவு கிடைக்கும். ஆழம் பழமும் சிறந்ததே.


2. முருங்கை கீரை, முருங்கை காய் ஆண்மை தன்மையை, எழுச்சியை அதிகப்படுத்தும்.


3. செம்பருத்தி பூ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி போடு செய்து தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு பின்பு பசும்பால் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.


4. தினமும் உடல் உறவிற்கு முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய சுகம் மேலும் அதிகமாகும்


5. திராட்சை பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கும்


6. நாவல் பழம் விந்தை கட்டுபடுத்தும். எனவே கருதரிக்கதவர்கள் நாவல் பழத்தை அறவே ஒடுக்கவேண்டும். மாறாக கொட்டைப்பாக்கு உடலுறவு நேரத்தை அதிகபடுத்துவதுடன், வீரியம் மிக்கதாகவும் ஆக்கும்.


2. ஆண்மை பெருக


1. அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும்


2. கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்


3. கருஞ்சீரக எண்ணையை ஆண்குறியில் தடவி வந்தால் பெரிதாகும்


4. தேன் ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாரு ஒரு தேக்கரண்டி, வெங்காய சாரு ஒரு தேக்கரண்டி தினமும் காலையில் தயாரித்து அருந்திவர, ஆண்மை அதிகரிக்கும்


5. அமுக்கிறாய் கிழங்கு பொடியுடன் தென் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு அறவே நீங்கும்.


3. விந்து விருத்திக்கு (தாது விருத்தி ஆல்லது சுக்ல விருத்தி)


1. சுக்ல விருத்தி (விந்து விருத்தி) அதிகம் ஆக, ஓரிதழ் தாமரையை போடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர, நல்ல பலன் தெரியும்.


2. துரியன் பழம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.


3. பலாகொட்டை காயவைத்து பவுடர் ஆக்கி,

பனங்கல்கண்டுடன் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.


4. சீரகபொடி, வில்வ பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்...

Saturday, 22 May 2021

தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..?

 தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..?


ஏன் முக்கியம்..?



நாம் சாப்பிட கூடிய உணவை தான் நமது உடல் ஆற்றலாக மாற்றி கொள்கிறது. இவை சரியான வகையில் இல்லையென்றால் நம்மால் ஒரு சின்ன வேலை கூட செய்ய இயலாது.



இதனை சரியான முறையில் செய்து வருகிறது வைட்டமின்களும் தாதுக்களும். இதில் ஆண்களின் உடலுக்கென்று தனித்துவமான வைட்டமின்களும் உண்டு.



வைட்டமின் கே



நமது உடலில் எலும்புகள் இல்லையென்றால் அவ்வளவு தான். ஆண்களின் உடலுக்கு எலும்புகள் தான் அதிக வலுவை சேர்கின்றன.



இவற்றை பாதுகாக்கவே வைட்டமின் கே ஆண்களுக்கு தேவைப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் இது தேவைப்படுகிறது.



சாப்பிட கூடிய உணவுகள்..



வைட்டமின் கே-வை நம்மால் எளிதாக பெற்று விடலாம். அதற்கு முளைக்கீரை போன்ற கீரை வகைகளை உணவில் சேர்த்து கொண்டால் போதும்.



மேலும், ப்ரோக்கோலி, காலிபிளவர், முட்டை, இறைச்சி, கல்லீரல் ஆகியவற்றை ஆண்கள் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளவும்.



வைட்டமின் டி



எல்லா வகை வைட்டமின்களை காட்டிலும் இந்த வைட்டமின் டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.



இதை சூரியனிடம் இருந்தே நம்மால் எடுத்து கொள்ள இயலும். தினமும் காலை அல்லது மாலையில் சூரிய ஒளியில் 15 நிமிடம் இருந்தால் போதும்.



சாப்பிட கூடியவை..



வைட்டமின் டி-யை நேரடியாக பெறுவதற்கு இந்த உணவு வகைகள் உங்களுக்கு உதவும். முட்டை, பால், பருப்பு வகைகள், மீன், மாட்டின் கல்லீரல் ஆகியவற்றில் இவை அதிகம் காணப்படுகின்றன.



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்



ஆண்கள் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க ஒமேகா 3 அவசியம். இவற்றை நாம் தினமும் உன்ன கூடிய உணவுகளில் இருந்து ஓரிரு விடலாம்.



ஒமேகா 3 ஆண்களின் தாம்பத்திய வாழ்விற்கு பல நன்மைகளை தர கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



சாப்பிட வேண்டியவை..



வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், அவகடோ போன்றவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளதாம்.



ஆண்கள் தினமும் 2:1 லிருந்து 4:1 என்ற அளவு வரைக்கும் ஒமேகா 6s – ஒமேகா 3s எடுத்து கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.



வைட்டமின் பி-12



ஆண்களின் உடலுக்கு அதிக ஆற்றலை தர கூடிய தன்மை இந்த வைட்டமின் பி12-யிற்கு உள்ளது.



ஆண்களை பலவித உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து இந்த வைட்டமின் டி தான் காக்கிறது. தாம்பத்தியத்தில் சிறந்த ஆற்றலுடன் செயல்படவும் இந்த வைட்டமின் முக்கியமானது.



சாப்பிட கூடியவை..



பால், யோகர்ட், கோழியின் மார்பு பகுதி, கடல் உணவுகள் ஆகியவற்றில் இவை அதிகம் காணப்படுகின்றன.



அசைவம் விரும்பி சாப்பிட கூடிய ஆண்கள் ஆடு அல்லது மாட்டின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சாப்பிடடால் நல்ல பலனை அடைய முடியும்.



ஐயோடின்



ஆண்களின் ஹார்மோன்களை சரியான முறையில் சுரக்க வைக்க இந்த ஐயோடின் மிகவும் முக்கியம். மற்ற ஊட்டச்சத்துக்களை காட்டிலும் இவை தான் ஆண்களின் ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கிறது.



இவற்றின் அளவு குறைந்தால் எதிர்ப்பு சக்தி குறைவு, எடை கூடுதல், தைராய்டு போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகும்.



சாப்பிட வேண்டிய உணவு..



ஐயோடினை முழுமையாக பெற ஒரு சில முக்கிய உணவுகள் தேவை. முக்கியமாக கடலில் இருந்து கிடைக்க கூடிய உணவுகள், முட்டை, பால், கடல் உப்பு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் ஆண்கள் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், மீனை வாரத்திற்கு 1 முறையாவது சாப்பிட வேண்டும்

புதுமாப்பிள்ளைக்கு கசகசா பாதாம் சேர்த்த பால் எதுக்கு தெரியுமா, இப்பவாவது தெரிஞ்சுக்கங்க!

புதுமாப்பிள்ளைக்கு கசகசா பாதாம் சேர்த்த பால் எதுக்கு தெரியுமா, இப்பவாவது தெரிஞ்சுக்கங்க!


அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கசகசா. பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை. விதைப்பையில் வரும் பால் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இவை தான் போதை தருவனவாக இருக்கிறது. பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது. தற்போது இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதை அளவாக தேவைக்கு பயன்படுத்தினால் பல மருத்துவ நன்மைகளை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.


ஆண்மை பெருகிட :


25 வருடங்கள் முன்பு வரை, ஏன் இன்றும் பல கிராமங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு இரவு அல்லது காலை வேளையில் கசகசா, பாதாம் சேர்த்த பால் தருவது வழக்கம். பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க தருவார்கள்.


இல்லற வாழ்வில் ஈடுபாடு வருவதோடு ஆண்மையை அதிகரிக்கவு பாலியல் ஆசையை தூண்டவும் கசகசாவிதைகள் பெரிதும் உதவுகின்றன.

திருமணம் முடிந்த முதல் ஒரு மாதம் வரை இந்த பாலை கொடுப்பார்கள். ஆண்மை குறைபாடு இல்லறத்தில் ஈடுபாடில்லாதவர்களுக்கு தொடர்ந்து ஒருவாரம் வரை இந்த கசகசா பாலை குடித்து வந்தால் உடனடி மாற்றம் தெரியும்.


கருப்பை பலம் பெற :


கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இக்குழாய்களில் இருக்கும் கோழை அல்லது கெட்டியான அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து கருவுறுதலை அதிகரிக்க இவை உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

பெலோப்பியன் குழாய்களில் உள்ள குறைபாட்டால் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் அந்த குறைபாடை களைவதற்கு கசகசா உதவுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பெலோப்பியன் குழாய்களில் குறைபாடுள்ள பெண்களில் 29% பெண்கள் வெற்றிகரமாக கருத்தரிப்பு பெற்றுள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.


தூக்கமின்மை போக்க :


தூக்கமின்மை பிரச்சனையால் அனைத்து வயதினரும் இன்று அவதிபடுகிறார்கள். ஆய்வுகளின் படி கசகசா கலந்த பாலை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உறக்கமின்மை பிரச்சனையையும் இவை சரிசெய்கிறது.


தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கசகசாவை அரைமணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மைய அரைக்கவும். அதை சூடான பாலில் கலந்து ( ஒரு டீஸ்பூன் அளவு) பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை காணாமல் போகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.


எலும்புகள் பலம் பெற :


எலும்புகளை உறுதிபடுத்த தேவையான சத்து இதில் அடங்கியுள்ளது. கசகசாவில் காப்பர் கால்சியம் உள்ளது. இவை எலும்பை பலவீனத்திலிருந்து மீட்டு பலப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பாஸ்பரஸ் மாங்கனீசு சத்துகள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கிறது.


நடுத்தர வயதுக்கு பிறகு எலும்பு தேய்மானம் ஆகும் போது கால்சியம் சத்து உணவு, கால்சியம் மாத்திரைகள் எடுப்பதுண்டு. ஆனால் வளரும் பருவத்திலேயே கசகசாவை அவ்வபோது உணவில் சேர்த்துவருவதன் மூலம் இவை எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் காலங்களில் எலும்பு மெலிவு, எலும்பு அடர்த்தி குறைவு, எலும்பு தேய்மானம் பிரச்சனைகளை அதிகம் சந்திக்காமல் இருக்க கசகசாவை உணவில் சேர்த்து வருவது அவசியம்.


மூளைக்கு ஆரோக்கியம் :


மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உண்டு. இந்த ஊட்டச்சத்துகள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. மூளையின் சீரான இயக்கத்துக்கு இவை உதவுகிறது.


கசகசாவில் இருக்கும் ஒலிக் அமிலமானது உடலில் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவை தவிர தைராய்டு, வாய்ப்புண் கோளாறுகள், கண்பார்வை சீர்பட, சிறுநீரககல் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், வலி நிவாரணியாக, செரிமானத்தை எளிதாக்க என பலவகையில் பயன் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பு :


உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும் போது இவை பாதுகாப்பானது. ஆனால் தனியாக இதை தேநீர் வடிவிலோ, நீரில் ஊறவைத்தோ குடிக்கும் போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும். அதே நேரம் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்சனையும் இராது அளவாக எடுத்துகொண்டால் இவை ஆரோக்கியமே. ஆண்களுக்கு வீரியமிக்க பலம் தருவதும் உண்மையே.

Sunday, 29 July 2018

46 இயற்கை வயகரா உணவுகள்

46 இயற்கை வயகரா உணவுகள்  


Side Effects Of “Viagra”


  • Increases the chances of heart attack.
  • Sudden loss of vision.
  • Irregular heartbeat pattern.
  • Shortening of breath.
  • Swelling of hands feet and ankles.
  • Muscle pain.
  • Nasal congestion.
  • Back pain.
  • Hearing loss.
  • Nervous system problem.
  • Memory problems.
  • Pain in Penis and its erection that may last long for 4 hrs.
but in nature we have foods for that

check out down and ensure its in your food style 

1. Almonds பாதாம்

2. Ashwagandha (அஸ்வகந்தா)

3. Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு

4. Avocadoes

5. Banana
6. Beetroots
7. Blueberries
8. Broccoli
9. Brazil Nuts
10. Cardamom
11. Carrots
12. Catuaba
13. Celery
14. Chasteberry
15. Chillies
16. Cumins Seeds
17. Damiana
18. Dark Chocolate
19. Drumsticks
20. Fenugreek Seeds
21. Figs
22. Garlic
23. Ginkgo Biloba
24. Horny Goat Weed
25. Korean Red Ginseng
26. Liquorice
27. Maca Root
28. Muira Puama
29. Oats
30. Peanut Butter
31. Pomegranates
32. Pumpkin Seeds
33. Raisins
34. Raspberries
35. Saffron
36. Saw Palmetto
37. Shiitake Mushrooms
38. Spinach
39. Strawberries
40. Teff
41. Vanilla
42. Walnuts
43. Watermelon
44. Yohimbe Bark Extract
45. Yarsagumba

1. Almonds பாதாம்

2. Ashwagandha (அஸ்வகந்தா)


3. Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது. 

அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும். இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

 செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. சிறுநீர் நோய்களை குணமாக்கும் இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. 

மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும். கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார். நரம்பு மண்டல நோய் இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது. வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது. மலட்டுத்தன்மை போக்கும் இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை. இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது. இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது.


4. Avocadoes
5. Banana
6. Beetroots
7. Blueberries
8. Broccoli
9. Brazil Nuts
10. Cardamom
11. Carrots
12. Catuaba
13. Celery
14. Chasteberry
15. Chillies
16. Cumins Seeds
17. Damiana
18. Dark Chocolate
19. Drumsticks
20. Fenugreek Seeds
21. Figs
22. Garlic
23. Ginkgo Biloba
24. Horny Goat Weed
25. Korean Red Ginseng
26. Liquorice
27. Maca Root
28. Muira Puama
29. Oats
30. Peanut Butter
31. Pomegranates
32. Pumpkin Seeds
33. Raisins
34. Raspberries
35. Saffron
36. Saw Palmetto
37. Shiitake Mushrooms
38. Spinach
39. Strawberries
40. Teff
41. Vanilla
42. Walnuts
43. Watermelon
44. Yohimbe Bark Extract
45. Yarsagumba


Saturday, 28 July 2018


ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்மை குறைபாடு என்றால் என்ன?

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
வாழ்க்கை முறைகள்
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.
மூலிகைகள்
அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு – வேப்பிலை, சிவனுக்கு – வில்வம், விநாயகருக்கு – அருகம்புல், விஷ்ணுவுக்கு – துளசி, பிரம்மாவுக்கு – அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.
அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.
உணவு முறைகள்
நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.
ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.
கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.
மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.
- See more at: http://tamilwin.in/archives/19480#sthash.5RqZJqiq.dpuf

Friday, 19 September 2014

உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க

உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க

சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்… சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்… எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட இதை மையப்படுத்திதான். என்ன மாதிரியான உணவுகள் உண்பதனால் தாம்பத்ய உறவில் தடங்கல் இன்றி ஈடுபடலாம் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. அதேபோல படுக்கை அறைக்கு போகும் முன்பாக என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். சுவாச புத்துணர்ச்சிக்காக
சிலர் சூவிங்கம் மெல்லுவார்கள். பெப்பர்மின்ட் சூவிங்கம் ஆகவே ஆகாது என்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன் லெவலை கட்டுப்படுத்துமாம். புதினா உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும் படுக்கைக்கு போகும் முன்பாக அதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் ஜின், சோடா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். இது டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பை குறைப்பதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்குமாம். கிரிஸ்பான ப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிட்டுவிட்டு கூல்டிரிங்க்ஸ் குடிப்பவரா நீங்கள்? அதை படுக்கைக்கு போகும் முன் தவித்து விடுங்கள். அதில் உள்ள கொழுப்புச் சத்து உங்கள் செக்ஸ் ஹார்மோன் லெவலை குறைத்துவிடுமாம் சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு உணவுகளை கண்டிப்பாக தவித்து விடுங்கள். சிலர் முட்டைக்குப் பதிலாக டோஃபு எடுத்துக் கொள்வார்கள். இரவு நேரத்தில் உறவுக்கு முன்பாக அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் டோஃபு ஈஸ்ட்ரோஜென் லெவலை குறைத்துவிடும். டின்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளை கண்டிப்பாக தவித்து விடுங்கள். காரணம் அதில் உள்ள ரசாயனங்கள் உற்சாகத்தை குறைத்து விடுமாம். ஒரு கப் ஒயின் சாப்பிட்டால் மூடு கிளம்பும் என்று கூறி அதை சாப்பிடுவார்கள். அது தவறானதாம். இதன் மூலம் தாம்பத்ய உறவில் தடுமாற்றம்தான் ஏற்படும் என்கிறது வாஷிங்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று. இரவு நேரத்தில் ஓட்ஸ் சாப்பிட வேண்டாம். இது உடம்பில் கிளர்ச்சியை குறைத்து விடும். காரணம் இதில் உள்ள அதீத நார்ச்சத்துதானாம். இரவு உணவுக்குப் பின்னர் ஸ்ட்ரா பெரி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டாம். இது உணவு ஜீரணிக்கும் தன்மையை பாதிக்குமாம். பழங்கள் சாப்பிட வேண்டுமானால் இரவு உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளலாம். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு உற்சாக பானம் அருந்துவதை தவிர்த்து விடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதில் உள்ள சர்க்கரை செக்ஸ் ஹார்மோன் அளவை குறைத்து கிளர்ச்சியை தடுத்து விடுமாம். எனவே மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் படுக்கைறையில் உற்சாகத்தை அதிகரிக்கலாம்.

"உறவு"க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்….!

"உறவு"க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்….!

அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே


அப்போது உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை உட்கொண்டு வந்தால், சுகத்தை நன்கு அனுபவிக்கலாம். டெய்லி ‘செக்ஸ்’ வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்களேன்! அதிலும் கசப்பான காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு இனிப்பாகவும், ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், படுக்கையில் ஒரு கை பார்க்கலாம். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை பகல் நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வருவது, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய உதவியாக இருக்கும். இங்கு உடலுறவில் ஈடுபடும் முன் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து சாப்பிட்டு, சும்மா புகுந்து விளையாடுங்கள்…. இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வந்தால், அவை உடலின் எனர்ஜியை அதிகரித்து, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய தேவையான ஆற்றலைத் தரும்.

மேலும் தக்காளியில் உள்ள லைகோபைன், விறைப்புத்தன்மையை அதிகரிக்கும். திருமணமான புது தம்பதியர்கள் ஏன் முதலிரவில் பாதாம் பால் குடிக்க கேட்கிறார்கள் என்பது தெரியுமா? ஏனெனில் பாதாம் பாலை உறவில் ஈடுபடும் முன் குடித்தால், நல்ல எனர்ஜி கிடைக்கும்.

அத்திப்பழத்தில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இவை பாலுணர்ச்சியை தூண்டக்கூடியவை. எனவே மாலை வேளையில் ஒரு கையளவு அத்திப்பழத்தை உட்கொண்டால், இரவில் படுக்கையில் நன்கு விளையாடலாம்.

 உண்மையிலேயே சாக்லெட் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் தியோப்ரோமைன் என்னும் அல்கலாய்டு நிறைந்துள்ளது.

 அவகேடோ பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். ஆனால் ஆண்கள் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் இவை விரைவில் விந்தணுவை வெளியேற்றிவிடும்.

ஆம், உறவில் ஈடுபடும் முன் தேன் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள போரான் ஸ்டாமினாவை அதிகரிப்பதுடன், வைட்டமின் பி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

 கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது, எனர்ஜியை அதிகரிக்கும். ஏனென்றால் இதில் எண்ணற்ற அளவில் வைட்டமின்களானது நிறைந்துள்ளது.

இரவில் ஒருகை பார்க்கலாம் என்று இருக்கிறீர்களா? அப்படியெனில் ஒரு பௌல் தர்பூசணியை சாப்பிடுங்கள். மேலும் ஆய்வு ஒன்றில், இதனை உட்கொண்டால், பிறப்புறுப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதனை ‘நேச்சுரல் வயாகரா’ என்றும் சொல்லலாம்.

உணவில் வென்னிலா எசன்ஸை சேர்த்து வந்தால், பாலுணர்ச்சியானது அதிகரிக்கும். முடிந்தால் ஒரு கப் வென்னிலா ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிடுங்கள்.

மாதுளை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். எனவே உறவில் ஈடுபடும் இரண்டு மணிநேரத்திற்கு முன் மாதுளை ஜூஸ் குடியுங்கள்.

Monday, 25 August 2014

பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்


பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்


உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்களுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன. நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியடையவில்லையெனில், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றி விடும். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப்பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை. எனவே, உங்களிடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப்படுத்துவது நல்ல வழிமுறையாகும்.

மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்
பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன
பெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.
அனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது. முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது
1. மகிழ்ச்சி அதிகரிக்கிறது. 2. சுய-மதிப்பு கூடுகிறது 3. துணையுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம் 4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும் 5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடியும்.
- See more at: http://tamilwin.in/archives/19492#sthash.xUylWypi.dpuf

Saturday, 7 June 2014

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்


பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளிபோவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பலபெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவதுஇருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வுகாண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில்பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியானவாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின்வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்துவெளிப்படும்.இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல்,வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான்ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டுமூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ்துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன்,கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில்பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிகஉதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்குமுக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும்பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்குகாரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்குமற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம்போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன்மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாகமாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும்இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.மனரீதியான ஆறுதல்: 
இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களதுபிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும்டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலிஉள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்குமட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களைசத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமானநாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம்.நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துஅடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதைதடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்
அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனைதினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போதுஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்குபிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்குஎடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்டமாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனேவெளிப்படும்.செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம்மாதவிலக்கு ஒழுங்காகும்.செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும்வயிற்று வலி குணமாகும்.சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக்குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.ரெசிபி
எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைதேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றைஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்தஎனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும்.உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.பேரீச்சை பால்: 
பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டுசேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில்இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்துஉட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது.இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.கொள்ளு கூட்டு: 
மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்துசீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.டயட் 
பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்றுசொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால்உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வதுஅவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின்எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும்.நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.