Search This Blog in tamil

Showing posts with label மாதவிடாய். Show all posts
Showing posts with label மாதவிடாய். Show all posts

Sunday, 25 July 2021

மாதவிடாய்

 மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் நாகரீகம் கொண்ட நண்பர்களே


மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் அமைப்பில் இயங்கியவியலின் சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை.


நாப்கின் மற்றும் மாதவிடாய் பற்றிய புரிதல் இன்மை பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் இன்றளவும் உள்ளது.


இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.நாப்கின்களை பெரும்பாலான ஆண்கள் முழுதாக பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஏனென்றால், கடைகளில் கருப்பு கவர்களின் உள்ளேதானே வைத்து தருவார்கள்.


இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது) கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.


நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை

15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.

நாப்கினின் நீளம் 200 – 20 மி.மீ (ரெகுலர்),

240 – 20 மி.மீ (லார்ஜ்),

280 – 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.

அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.

30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.

முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.


ஏதோ ஒரு காரணத்தால் இன்றும் பெண்களுக்கு சுகாதாரமற்ற மாதவிடாய் அமைகிறது 

மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.


சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோயால் உண்டாகும்.


கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் அந்த‌ துணி உர‌சி உர‌சி தொடையெல்லாம் எரியும். 


துணியை ந‌ல்லா தோய்க்காமல் அதைத் திருப்பிப் பயன்படுத்தி அதுனால்‌ கிருமி தாக்கி நோய் தாக்கும் 

பெண்க‌ள் நிறைய‌ இருக்கிறார்கள்  நாள் முழுக்க‌ மாற்ற‌ முடியாம‌ல் திண்டாடும் பெண்க‌ளைப் போன்று பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் நாப்கினை மாற்ற வாய்ப்பில்லாமல் இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் கண்டு கவலை அடைந்ததுண்டு.


பல ஆண்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எனவே ஆண்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு தரப்படவேண்டும்.சானிடரி நாப்கின்களை இன்னும் மலிவான விலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். 


பெண்ணுக்கு உடலே விதியல்ல Biology is not Destiny என்ற புரிதல் இல்லாமல் ஆண்களும், பெண்களும் இருப்பதும் ஒரு பிரச்சினை.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும்  அவதியை ஆண்களால் அனுபவிக்க இயலாது என்பதால் குறைந்த பட்சம் உணரவாவது முயற்சி செய்வது ஆண்கள் ஒவ்வொருவரது கடமை. இதனை அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.


                                     நன்றி

Saturday, 22 May 2021

மாதவிடாய் 😢 😭(ஆண்களுக்கான பதிவு )

 ♥#மாதவிடாய் 😢 😭(ஆண்களுக்கான பதிவு )


♥மாதத்தில் 25 நாட்கள் நாம்மோடு நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 5 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம்( ஆண்கள் ) உணர்வதே இல்லை....!


♥அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை.. 

பொது_இடங்களில்_செல்வதும் இல்லை.... சாப்பிடுவதும் இல்லை... தூங்குவதும் இல்லை....


♥அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை அதை அவளால் தடுக்கவும் முடியாது...


♥தன் சகோதரனிடமோ யாரிடமும்  கூட சொல்ல முடியாது அந்த வேதனையை..... 


♥ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது ஒன்றை மறந்து விடுகிறார்கள் . அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது இந்த குமட்டலும் வாந்தியும்  என தெரியவில்லை.....!


♥அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....!


♥உனக்காக 25 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 5, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்... அதுவும் முடியவில்லை என்றாள் அவளை அவளுக்காக அந்த 5 நாட்கள் வாழவிடுங்கள்...


♥அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..


♥அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...


♥இன்றைய வாழ்க்கையில் அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது....


♥நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு.. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்...!


♥ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத கடவுளுக்கு நன்றி..


Friday, 19 September 2014

தாம்பத்யம் பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை

தாம்பத்யம் பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை

தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக் காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன.


உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.உடலுறவு கொள்தலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்தல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.
நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்தல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும். உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்தல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.
உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 7 June 2014

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!

* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.


* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.


* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்
மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
"இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்....
சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்...பசியும் குறைவு...."
நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள் அம்மா.
சற்று மெல்லிய தோற்றம் கொண்டவளாயினும், மகளின் முகத்தில் நோயின் வாட்டம் தென்படவில்லை. அழகாக, திரட்சியாக பதின்ம வயதுகளின் கவர்ச்சியுடன் தோன்றினாள். 
மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித்தேன். சற்று முன் நகர்ந்த அம்மா தனது குரலைத் தாழ்த்தி.....
"இவளுக்கு சரியா வெள்ளை படுகுது. உருகிக் கொண்டு போறாள்." 
வெளிப்படையாகப் பேசுங்கள்.


இவர்கள் சற்று வெட்கப்பட்டவர்கள். காலம் மாறிவிட்டது.இன்றைய இளம் பெண்கள் பலர் தாயின் துணையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது.திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறுநோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற்படக் கூடிய உடல் உளப் பிரச்சனைகள் என எதுவானாலும் மருத்துவருடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது பொருந்தும்.

வெள்ளைபடுதல்


இந்த வெள்ளைபடுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில் சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவு எனலாம்.



பெண் பாலுறுப்பிலிருந்து சற்றுத் திரவம் கசிவது இயற்கையானது. வாயிலிருந்து எச்சில் ஊறுவது போன்றது.
வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில்.

அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரணமாக எப்பொழுதும் ஈரலிப்பாக இருக்கும்.

  • கிருமிகள் தொற்றாதிருக்கவும்,
  • உடலுறவின் போது இன்பம் அளிக்கவும்,
  • மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம்.
எனவே குழந்தை பெற்றெடுக்கக் கூடிய வயதுகளில் மிகவும் அவசியமானது. விசனிக்க ஏதும் இல்லை.

உணவில் ஆசை ஏற்பட்டால் எச்சில் அதிகம் ஊறும்.
அதேபோல பாலுணர்வு மேலெழும்போது யோனியிலிருந்து சுரப்பது அதிகமாகும்.

பதின்ம வயதுகளில் பாலியல் உணர்வுகள் மெருகேறும்போது பையன்கள் தங்கள் ஆண்குறிகள் திடீர் திடீரென விறைப்படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற உணர்விற்கும் ஆளாவது போலவே பெண்பிள்ளைகளும் இந்த வெள்ளை படுதலைக் கண்டு அசூசை அடைகிறார்கள்.



தாய்மார் தங்கள் இளமை நினைவுகளை மீளநினைத்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பது முக்கியமாகும்.ஆயினும் பல நோய்களாலும் யோனியிலிருந்து திரவம் கசியக் கூடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

சாதாரண வெள்ளைபடுதல்





சாதாரண வெள்ளை படுதல் என்பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும்.பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோனியின் சுவர்களிலிருந்தும் கசியும்.

சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப்பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம்.அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்ரும் நிறம் மாறலாம்.உடலிலுள்ள பெண்ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வழமையாக ஓரளவு இருக்கும் இந்த வெள்ளைபடுதல் மனஅழுத்தங்களின் போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளை படுதல் பற்றிய பய உணர்வும், அசூசை ஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும்.

பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நேரத்தில் இவ்வாறு கூடியளவு வெள்ளைபடலாம்.

கருவுற்று இருக்கும் காலங்களிலும் வெள்ளைபடுவது அதிகரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் ரிதியான உணர்வுகள் கிளறும்போதும் வெள்ளை படுதல் அதிகரிக்கும்.

வேறு நோய்கள் காரணமாக


தொற்று நோய், புற்றுநோய், ஒவ்வாமை போன்ற பல காரணங்களலும் வெள்ளை படுதல் ஏற்படலாம்.நீரிழிவு இருந்தால் பங்கஸ் தொற்று நோயாலும் தோன்றலாம்.

ஆனால் இவற்றின்போது பெரும்பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மணம், போன்றவை சேர்ந்திருக்கும். 

நோய்கள் காரணமா?


வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?




  • இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்

  • அதன் நிறத்தில் மாற்றம்

  • அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.

  • பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.

  • மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல்.
வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகம் ஏற்படும்.

நீங்கள் செய்யக் கூடியவை என்ன?


உங்கள் பாலுறுப்பை சுத்தமாகவும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங்கள்.

பல பெண்கள் உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள்.

இது தவறான முறை. அவ்வாறு செய்யும்போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ் (Pads) மட்டுமே உபயோகியுங்கள்.


உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது





உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.சில்க், நைலோன் போன்றவை ஈரத்தை உறிஞ்ச மாட்டாது.அத்துடன் வியர்வையையும் உறிஞ்சமாட்டாது. காற்றோட்டத்தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளும் கூடாது.

பாலுறுப்பை அண்டியுள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம்.

ஈஸ்ட் கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட், தயிர் போன்றவற்றை உண்பது நல்லது. கடுமையான அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் ஈஸ்ட் தொற்றுதைத் தடுக்க உண்ணலாம்.

பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் கட்டுப்படுத்தி வையுங்கள். இல்லையேல் பங்கஸ் கிருமித்தொற்றும் ஏற்படும்.

எப்பொழுது டொக்டரிடம்


வெள்ளை படுதலுடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் உடலுறவு கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இருந்திருக்கலாம் என சற்று சற்தேகம் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

வெள்ளை படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்பளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம்.

எனவே வெட்கத்தை விட்டொழியுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பேண உங்கள் மருத்துவருடன் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

Friday, 17 May 2013

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!


மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!


* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு
பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். 
இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு 
எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் 
கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட 
வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை
பலனளிக்கும்.







* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு 
வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.







* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.







* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் 
அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் 
அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் 
குணமாகும்.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t34338-topic#ixzz2Tc6TfxgE