Search This Blog in tamil

Showing posts with label பெண்ணின் _கருவளமிக்க_நாட்கள். Show all posts
Showing posts with label பெண்ணின் _கருவளமிக்க_நாட்கள். Show all posts

Saturday, 22 May 2021

10_பயனுள்ள_ரகசியங்கள்

 🇨🇭#குழந்தைக்காக_திட்டமிடும் #பெண்களுக்கு………❗


🇨🇭#10_பயனுள்ள_ரகசியங்கள்...❗❓


👉ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


#தாய்மைக்குத்_தயாராகும்_முன்… (Planning for Pregnancy)


⭕ 1. மாதவிலக்கு காலத்தில்…


மாதவிலக்கின் போது,


கருப்பு உளுந்து


கருங்குருவை அரிசி


நல்லெண்ணெய்


முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.


மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.


மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.


⭕ 2. புத்துணர்வு தேவை


பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.


⭕ 3. புகை, மது தவிர்க்கலாம்


கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.


⭕ 4. உடற்பயிற்சி நல்லது


ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.


⭕ 5. பெஸ்ட் டைம்


மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.


உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.


⭕ 6. காபி, டீக்கு நோ சொல்லுங்கள்


சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. 

டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.


⭕ 7. கெமில்கல்கள் இல்லாத சூழல்


வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.


⭕ 8. உடல் எடை பராமரிப்பு


உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.


⭕ 9. ஃபோலிக் ஆசிட் உணவுகள்


ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.


⭕ 10. ஆரோக்கியமான குழந்தை உருவாக உதவும் உணவுகள்


பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.


முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


புரோக்கோலியும் நல்ல உணவு.


உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.


மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.


மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள். 


வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.


அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.


பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.


ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.


பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.


கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 

48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.


மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

Saturday, 20 March 2021

எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?


இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.


இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.


ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.


ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).


ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.


அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.


இயற்கையான கருத்தடை முறைகள்


உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.


இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.


முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .


அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.


அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.


இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.


இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை பாவிப்பது கட்டாயமாகும்

Sunday, 13 December 2020

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.!!!

நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும்.

ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    
ஓவுலேசன் காலம்
ஓவுலேசன் காலமானது முதல் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த 13 அல்லது 14 நாட்களில் ஆரம்பமாகும். சில பெண்களுக்கு இது வேறுபடும். இங்கு குறிப்பிட்ட நாட்களில் இருந்து சிலருக்கு முன்பும், இன்னும் சிலருக்கு தாமதமாகவும் கூட ஆரம்பமாகலாம். இருந்தாலும் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு, பெண்ணின் ஓவுலேசன் காலத்தை அறியலாம்.
    
அதிகமான பாலுணர்ச்சி
சில நாட்களாக உங்களது பாலுணர்ச்சி அதிகமாக இருந்தால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும். இக்காலத்தில் உடலுறவு கொண்டால், வேகமாக கருத்தரிக்கலாம்.
    
லேசான வெள்ளைப்படிதல்
ஓவுலேசன் காலத்தில் பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம் யோனியில் இருந்து வெளியேறும். இதுவும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை சுட்டிக் காட்டும்.
    
புண்ணான மார்பகங்கள்
நிறைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்குப் பின் மார்பகங்கள் புண்ணாக இருக்கும். இது குறைந்த முக்கியத்துவமுடைய அடையாளம் தான். இருந்தாலும், மாதவிடாய் சுழற்சிக்கு பின் இந்த அறிகுறி தென்பட்டால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
    
ஈர்ப்பு அதிகரிக்கும்
ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் காலத்தின் போது, தன் துணையின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இதற்கு ஆணின் உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோன் பெண்ணின் வாசனை உணர்வை அதிகரித்து ஈர்ப்பது தான்.
    
மென்மையான மற்றும் திறந்த கருப்பை வாய்
ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனியின் வாய் திறந்தும், மென்மையாகவும் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, குறைவான வலியை உணரக்கூடும். அதுமட்டுமின்றி, ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனிப்பகுதி வறட்சியுடனேயே இருக்காது. இதனால் லூப்ரிகேஷன் தேவைப்படாது.
    
அடிவயிற்று வலி
சில பெண்களுக்கு அடிவயிற்று லேசான வலி ஏற்படும். அதுவும் இந்த வலி சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் வரை நீடித்திருக்கும். அதோடு, குமட்டல் அல்லது வெள்ளைப்படுதலுடன் வலியையும் அனுபவித்தால், அதுவும் ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
    
லேசான இரத்தக்கசிவு
ஓவுலேசன் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு யோனியில் இருந்து, இரத்தம் கலந்த நிறத்தில் வெள்ளைப்படிதல் ஏற்படும். எனவே இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், ஓவுலேசன் காலம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.