Search This Blog in tamil

Showing posts with label நிர்வாணம். Show all posts
Showing posts with label நிர்வாணம். Show all posts

Tuesday, 27 July 2021

காமம்_நிர்வாணம்

 *#காமம்_நிர்வாணம்*

நீட்ஷே ஒருமுறை அழகான ஒரு குறிப்பைக் கூறினார் . 


மதமானது காமத்திற்கு விஷம் வைத்து அதைக் கொல்ல முயன்றாலும் காமம் மரணமடைந்து விடவில்லை .


 அதற்கு மாறாக அது இன்னமும் உயிருடனும் , முழுவதும் விஷம் நிறைந்ததாகவும் உள்ளது என்று அவர் கூறினார் . 


காமம் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் அது அப்படி ஆகவில்லை . 


அதற்கு விஷம் வைக்கப்பட்டது என்றாலும் அது உயிர் வாழ்ந்து வருகிறது . 


நமது வழிகள் குறி தவறிச் சென்று விட்டன . 


இன்று நம்மைச் சுற்றி நாம் காணுகின்ற காம வேட்கையானது விஷமாக்கப்பட்ட காமத்தின் சுருக்கம்தான் .


    செக்ஸ் என்பது மிருகங்களிடத்திலும் உள்ளது . 


ஏனெனில் செக்ஸ்தான் உயிர்ச்சத்து .


 ஆனால் காமவெறி மனிதனிடம் மட்டுமே உள்ளது . 


காமவெறி என்பது மிருகங்களிடம் இல்லை . 


மிருகங்களின் கண்களைப் பாருங்கள் .


 நீங்கள் அதில் காமத்தைக் காண முடியாது . 


ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் கண்களைப் பார்த்தால் அதில் காமத்தைத் தவிர வேறெதையும் காணமுடியாது😏😏


காமத்திற்கான மொத்த ஆசையைத் தவிர வேறெதையும் காண முடியாது .


 எனவே இன்றைய தினத்தில் மிருகங்கள் ஒருவிதத்தில் அழகாக உள்ளன . 


ஆனால் பைத்தியக்காரத் தனமாக காமத்தை அடக்கி வைக்கின்ற இந்த மனிதனின் அசிங்கத்திற்கும் , துர்நாற்றத்திற்கும் ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது .


      எனவே காமவெறிலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான முதல் படியாக நான் நேற்று கூறியதைப்போல் குழந்தைகள் , சிறுவர்கள் , சிறுமியர்கள் இருபாலருக்கும் செக்ஸ் பாடம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் . 


அவர்களுக்கு இந்த செக்ஸ் பற்றிய அறிவைக் கொடுப்பதோடு கூட அவர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அசிங்கமான , செயற்கையான இடைவெளி அழிக்கப்பட வேண்டும் . 


உண்மையில் அவர்கள் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும் . 


இப்போது நாம் பிரித்து வைத்திருப்பது முற்றிலும் செயற்கைத்தனமானது .


      ஆணும் , பெண்ணும் முற்றிலும் வேறுபட்ட இரு உயிரினங்களைப் போல் ஆக்கப்பட்டு விட்டனர் . 


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனிதனால் இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையை உற்று நோக்கினால் அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ; 


அவர்கள் இருவரும் மனித இனத்தின் ஒரு பகுதிதான் என்று கூட நம்மால் நம்புவதற்கு கடினமாக உள்ளது .


 சிறுவர்களும் , சிறுமியர்களும் அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம் ஆடைகளின்றி வீட்டைச் சுற்றிவர அனுமதிக்கப் படுவார்களேயானால் அவர்களின் பிற்காலங்களில் அவர்கள் மனதில் ஏற்படும் இயற்க்கைக்கு மாறான ஆசைகளையும் , ஆபாசத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் . 


குழந்தைகள் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே .


 நாகரீகமடைந்தவர்களின் குழந்தைகள் எல்லாம் ' ' டாக்டர் ' ' விளையாட்டு விளையாட ஆசைப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம் .


     இதைவிட இன்னும் ஒரு விஷயம் என்னவெனில் , அமெரிக்க சமுதாயத்தில் மதத்தின் காவலர்கள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் புதிதாக ஒரு பிரிவை ஆரம்பித்துள்ளனர் . 


அவர்களின் முக்கிய நோக்கம் என்னவெனில் , நாய் , பூனை , குதிரை  மற்றும் ஏனைய மிருகங்களை ஆடையின்றி வெளியே வருவதைத் தடுப்பதுதான் . 


அந்த மிருகங்களை அவர்கள் தெருவில் எடுத்து வரும்போது அவைகளுக்கு ஆடைகள் அணிவித்துத்தான் எடுத்து வர வேண்டும் என விரும்புகின்றனர் .


 குழந்தைகள் ஆடையில்லாத அந்த மிருகங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பதுதான் அவர்கள் கூறும் கருத்தின் பின்னணி . 


அம்மணமாக இருக்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து குழந்தை கெட்டுவிடும் என்று கூறுவது எவ்வளவு வேடிக்கையாக உள்ளது !  


ஆனால் எப்படியோ அவர்கள் தெருக்களில் ஆடையில்லாமல் மிருகங்கள் திரியக் கூடாது என்பதற்கு ஒரு சங்கமே ஆரம்பித்துள்ளனர் . 


மனித வர்க்கத்தைக் காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றனவென்று பார்த்தீர்களா !!! 


மனித இனத்தின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் இவர்கள்தான் மனிதனை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . 


ஆடைகள் இல்லாமல் மிருகங்கள் எவ்வளவு அழகாகவும் , அற்புதமாகவும் இருக்கின்றன என்று நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?


 அவைகளின் நிர்வாணத்திலும் கூட அவைகள் கள்ளம் கபடமற்றவைகளாக , எளிமையானவைகளாக , வஞ்சகமின்றி இருக்கின்றன .


 மிருகங்கள் அம்மணமாக இருப்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை .


 மேலும் நீங்கள் உங்களது அம்மணமான நிலையை உங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதால்தான் மிருகங்கள் அம்மணமாக இருப்பது உங்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரிகிறது . 


ஆனால் தங்களின் நிர்வாண நிலையைக் குறித்து பயப்படுகிறவர்களும் , கோழைகளும் அதை ஈடு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வதற்கு முயற்சிப்பார்கள் .


 இப்படிப்பட்ட பரிகாரங்களையெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிப்பதால்தான் மனித இனம் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு வருகிறது .


      மனிதன் எளிமையாக இருக்க வேண்டுமெனில் , அவன் ஆடையின்றி , நிர்வாணமாக , கள்ளம் கபடமற்ற பேரானந்தம் நிறைந்து இருக்கலாம் .


 மகாவீரரைப் போன்றவர்கள் ஆடையின்றி இருந்தனர் . 


அதுபோல ஒவ்வொரு மனிதனும் தானும் ஆடையின்றி இருக்க முடியும் என்கிற மனப்பக்குவத்தை அடைய வேண்டும் .


 மதவாதிகள் மகாவீரர் ஆடைகளைத் தவிர்த்து விட்டார் என்றும் , ஆடைகள் அணிவதை அவர் விட்டு விட்டார் என்றும் கூறுகின்றனர் . 


ஆனால் நான் இதை மறுக்கிறேன் .


 அவரது சித்தம் , அவரது உள்ளுணர்வு அந்த அளவுக்கு தெளிவாகவும் , அந்த அளவுக்கு கள்ளம் கபடமற்றதாகவும் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் போல் தூய்மையானதாக ஆகிவிட்டதால்தான் , அவர் நிர்வாணமாக இந்த உலகத்தை சந்தித்தார் . 


தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்று ஒரு மனிதன் எண்ணும்போது , அவன் நிச்சயம் அம்மணமாக இருக்க முடியும் .


     தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று மனிதன் உணர்வதால்தான் அவன் ஆடைகளை அணிகிறான் .


ஆனால் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்னும்போது அவன் ஆடைகள் அணிய வேண்டிய அவசியமில்லை . 


ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல் தூய மனத்தோடு , தெளிவான மனத்தோடு ஆடைகளை நிராகரிக்கும் தகுதியை அடைகின்றதொரு புதிய உலகம் அவசியம் தேவை . 


அதில் தவறு எங்கே உள்ளது ?


 அம்மணமாக இருப்பதில் என்ன அபாயமுள்ளது ?


      வேறு ஏதாவது காரணங்களுக்காக ஆடைகளை அணிந்து கொள்வதென்பது வேறு விஷயம் . 


ஆனால் தான் அம்மணமாக இருப்பதற்கு பயந்து கொண்டு மட்டுமே உடைகள் அணிவது கர்வத்தைத்தான் காட்டுகிறது . 


அம்மணமாக இருப்பதற்கு பயந்து ஆடைகள் அணிவது உங்களது நிர்வாணத்தை இன்னும் அதிகப்படுத்தி , உங்களது மாசுபடுத்தப்பட்ட மனதிற்கு ஒரு ஆதாரமாக அது இருப்பதைத்தான் குறிக்கிறது . 


ஆனால் இன்றோ நாம் ஆடைகளை அணிந்தும் கூட நமக்குள் உள்ள நிர்வாணத்தை ஒழிக்க முடியாமல் குற்ற உணர்வுடன்தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம் . 

 

       ஆ ! கடவுள் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறார் ! 


அவர் மனிதனை ஆடையுடன்  படைத்திருக்க முடியும் .


      இப்படி நான் கூறுவதால் தயவுசெய்து நான் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கூறுவதாக முடிவு கட்டி விடாதீர்கள் . 


வெறும் பயத்தினால் நமது நிர்வாணத்தை மறைப்பதற்காக ஆடைகளை அணிந்து கொள்வது ஒருபோதும் நமது நிர்வாணத்தை மறைத்ததாக ஆகாது என்பதை நான் கூறுவதற்கு தயங்கவில்லை .


 நிர்வாணத்தைப் பற்றிய நமது இந்தச் செயற்கைதனமான உணர்வு நமக்கு வெறுப்பூட்டுவதாகவும் , பலமிழக்கச் செய்வதாகவும் உள்ளது . 


ஆனால் இந்த உணர்வு ஒரு நீண்ட சமூக பாரம்பரியத்திலிருந்து வந்து விட்டது . 


      ஆடைகள் அணிந்தும் ஒருவன் அம்மணமாகத் தெரியலாம் . 


அதேபோல் அம்மணமாக இருந்தும் ஒருவன் ஆடை அணிந்தவனைப் போலும் தெரியலாம் . 


ஆண்களும் , பெண்களும் உடம்போடு ஒட்டி அணிகின்ற நவநாகரீக உடைகளை நீங்கள் பார்த்த பின்னரும் கூட நான் இதைக் குறித்து இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமா ? 


மற்றவர்கள் தங்களை கடைக்கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற திருப்தியடையாத ஆசைகளின் வெளிப்பாடுதான் இன்றைய நவநாகரீக உடைகள் 


 ஆணும் , பெண்ணும் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பார்த்துப் பழகிவிட்டால் அதன் பின்னர் உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே நாம் உடைகள் அணிய வேண்டும் என்கிற நோக்கம் தானாகவே வந்துவிடும் .


 ஆனால் அந்தோ பரிதாபம் ! 


நவீன காலங்களில் ஆடைகள் காமவெறியைத் தட்டி எழுப்புவதற்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன .


      ஆடைகள் வெறும் ஆடைகளாக இல்லாமல் , மனிதனின் காமவெறியைத் தூண்டும் சாதனங்களாக மாறிக் கொண்டு வருவதால் , மனிதனின் நாகரீக வளர்ச்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?


 இதனால்தான் நான் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளையெல்லாம் அம்மணமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறேன் . 


நமது பாலுணர்விற்காக உடலை மறைக்க வேண்டிய தேவையில்லை , வேறு காரணங்களுக்காகத்தான் ( இயற்கைச் சூழல்களால் ஏற்படும் இடர்பாடுகளுக்காக மட்டும் ) உடைகள் தேவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .


      மேலும் நிர்வாணம் என்பது தனி மனிதனின் ஆளுகைக்குட்பட்பட்டது .


 கள்ளம்கபடமற்ற , எளிமையான மனதிற்கு நிர்வாணம் என்பது குற்றமாகத் தெரியாது . 


அது அழகாகத் தெரியும் . 


ஆனால் இதுவரை மனிதன் விஷமூட்டப்பட்டு விட்டான் . 


நாட்கள் செல்லச் செல்ல அந்த விஷம் மெல்ல மெல்ல மனித வாழ்க்கையின் ஒரு முனையிலிருந்து நேர் எதிர் முனைக்கு வந்து விட்டது . 


அதன் விளைவாக நிர்வாணத்தைக் குறித்து நமது நோக்கமும் செயற்கையாகி விட்டது .


      பாரதீய வித்யா பவன் ஆடிட்டோரியத்தில் முதல் கூட்டத்தில் நான் இந்தத் தலைப்பில் பேசியபோது ஒரு பெண்மணி என்னிடம் வந்து , ' ' நான் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டேன் . 


உங்கள் மீது எனக்குக் கோபம் வருகிறது . 


செக்ஸ் என்பது மானக்கேடான விஷயம் .


 காமம் என்பது பாவச் செயல் .


 அதைப் பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள் ?


 நான் உண்மையிலேயே செக்ஸை நிந்திக்கிறேன் ' ' என்று கூறினார் .


      அப்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி மகன்கள் , மகள்களோடு இருந்தபோதிலும் , அந்தப் பெண்மணி செக்ஸை நிந்திப்பதைப் பாருங்கள் .


 அவளை செக்ஸ் என்னும் அந்தப் பாவச் செயலுக்கு அழைத்துச் செல்கின்ற அவளுடைய கணவனை அவள் எப்படி உண்மையிலேயே நேசிக்க முடியும் ?


 செக்ஸ் என்னும் பாவச் செயலின் மூலம் பிறந்த அந்தக் குழந்தைகள் மீது உண்மையிலேயே எப்படி அன்பு செலுத்த முடியும் ? 


வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய நோக்கத்தில் விஷம் தெளிக்கப்பட்டு விட்டது . 


ஆகையால் அவளது அன்பும் , நேசமும் விஷமானதாகத்தான் இருக்கும் . 


எனவே நிச்சயமாக அந்தப் பெண்மணிக்கும் , அவளது கணவனுக்கும் இடையில் அடிப்படையிலேயே பிளவு ஏற்பட்டு விட்டது . 


அவளுக்கும் , அவளது குழந்தைகளுக்கும் இடையில் இருப்பது நிச்சயம் முள்வேலியாகத்தான் இருக்க முடியும் .


 ஏனென்றால் அவளது எண்ணப்படி குழந்தைகள் பாவத்தின் பழங்கள் .


 அவளுக்கும் , அவளது கணவருக்குமிடையே உள்ள உறவு ஒரு பாவச் செயலுக்காகத்தான் உள்ளது என்கிற குற்ற உணர்வு அந்தப் பெண்மணியின் ஆழ் மனதில் அடிக்கடி நடமாடிக் கொண்டிருக்கும் . 


பாவச் செயலோடு யாராவது இணக்கமாக வாழ முடியுமா ?


      செக்ஸைப் பழித்துக் கூறுபவர்கள்தான் நம் ஒவ்வொருவரின் மண வாழ்க்கையையும் குலைத்து விட்டனர் . 


காமத்தின் மீது மதிப்பு வைப்பதற்குப் பதிலாக அதற்கு எதிராக , பலவந்தமாக அதை ஒழிக்கும் எண்ணமானது அநேக தீய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது .


 தனக்கும் , தனது மனைவிக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு தடையை வைத்துக்கொண்டு , அவளோடு கூடுகின்ற எந்த ஒரு ஆணும் தன் மனைவியுடன் மட்டும் திருப்தி அடைய முடியாது . 


அவன் நிச்சயமாக அடுத்த பெண்களைத் தேடித் திரிவான் .


 அவன் விபச்சாரிகளிடம் செல்வான் .


 அவன் தனது வீட்டில் திருப்தி அடைந்திருந்தால் இந்த உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் அவனுக்குத் தங்கைகளாகவும் , தாய் மார்களாகவும் தென்படுவர் . 


ஆனால் இப்போது தனது மனைவியிடம் திருப்தி இல்லாததால் , பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தன் மனைவியாக பாவிப்பான் . 


எப்போதும் எதன் பின்னாலாவது போய்க் கொண்டிருப்பான் . 


ஆனால் இது இயற்கைதான் . இப்படித்தான் நடக்கும்


 ..........தொடரும் .........


*****************#ஓஷோ#***************


     **********#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*********


     #பகுதி :-----------56 ,57 ,  58  ----------


#படித்ததில்_பிடித்தது

Friday, 19 September 2014

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

லண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் அமெரிக்காவின் காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி
உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டனர் இரவு நேரத்தில் படுக்கையில் ஆடையின்றி நிர்வாணமாக உறங்குவதையே 57 சதவிகித தம்பதிகள் விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாக 48 சதவீத தம்பதிகள் கருத்து கூறியுள்ளனர். இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இரவு உடைகளை அணிந்து உறங்குவதே தங்களுக்கு வசதி என்று 43 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்று 15 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில் ஆடையின்றி படுப்பது உங்களுக்குள் உடல் மற்றும் உணர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மன்ஹட்டனை சேர்ந்த உறவு மற்றும் சிகிச்சை நிபுணர் அம்பர் மடிசன் கூறியுள்ளார். நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனவும் தாம்பத்ய உறவுக்கு அது பச்சை கொடி காட்டுவது போன்றது என்கிறார் நிபுணர் மடிசன் இப்போது உள்ள சவாலான வாழக்கை சூழ்நிலையில் இது போன்ற செயல்கள் தம்பதியரிடையே நெருக்கமும் வலுவான உறவும் ஏற்பட தேவை எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Monday, 25 August 2014

முழு நிர்வாணமாக இருந்தால் நன்மை என்ன?


முழு நிர்வாணமாக இருந்தால் நன்மை என்ன?


வாழ்க்கை ஒரு வட்டம். அது உண்மை தான். நம் பாட்டான் காலத்து பேஷன் மீண்டும் உயிர் பெறுவதில்லையா? அதே போல் தான் ஆதி கால நாகரிகமும்! ஆம், நிர்வாணமாக சுற்றித் திரிவது நாகரீகமற்றது என்று மாறியவர்கள் தான் நாம். ஆனால் இன்று நிர்வாணத்தினால் கிடைக்கும் பயன்களால், அதை சிலர் அந்தரங்கத்தில் செயல்படுத்துகின்றனர்.
வேலை முடிந்து வீட்டில் நுழைந்தவுடன் போட்டிருக்கும் ஆடைகளை கழற்றி ஒரு குளியலை போடத் தான், உங்களின் எண்ணம் இருக்கும் அல்லவா? ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருப்பது மன அழுத்தத்தைக் குறைத்து ஒருவித நிம்மதியை அளிக்கும், முக்கியமாக கோடை காலங்களில்.
சொன்னால் நம்புவீங்களா? ஆம், உங்கள் பிறந்த ஆடையான நிர்வாணத்தை தேர்ந்தெடுக்கும் போது, அது உங்களை பல விதத்தில் உதவி, பல உடல்நல பயன்களை அளிக்கிறது. முழு நிர்வாணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளதா? அப்படியானால் லேசான காட்டன் ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
நிர்வாணம் என்றால் நீங்கள் கூச்சப்படலாம், ஆனால் அப்படி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது ஒன்றும் நாகரீகம் அற்றது அல்ல. பல பேருக்கு நிர்வாணமாக தூங்க பிடிப்பதுண்டு.
சரி, ஏன் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதன் பின் ஒளிந்திருக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சரி வாங்க அதன் பயன்களைப் பார்ப்போம்.
வெயிலின் சீற்றத்திற்கு பயந்து, நம் சருமத்தை பாதுகாக்க, நாம் அதிகமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதுண்டு. ஆனால் நீண்ட நேரமாக வெயிலில் இருந்தால் தான் இந்த பாதிப்பு ஏற்படும். காலை கதிர்களில் 10-15 நிமிடம் வரை நிர்வாணமாக அல்லது லேசான பருத்தி ஆடைகளை அணிந்து நில்லுங்கள். இது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரித்து, மன நிலையையும் நன்றாக வைக்கும்.
சருமம் மூச்சு விடுவதற்கு காற்று வேண்டும். ஆனால் உடலை இறுக்கமான ஆடைகளால் மூடினால், சருமம் வலுவிழக்கும். அதற்கு காரணம் வியர்வையால் ஏற்படும் நச்சுத்தன்மையை சருமம் உள்வாங்குவது தான். அதுவே நிர்வாணமாக அல்லது லூசான பருத்தி ஆடைகளை அணிந்து இருந்தால், சருமம் மூச்சு விடுவதற்கு தோதாக இருக்கும்.
ஆடைகள் இன்றி இருந்தால், இறுக்கமான ப்ரா அல்லது ஜட்டி அணிந்து அதனால் ஏற்படும் சிவப்பு தடங்களை தவிர்க்கலாம். மேலும் உள்ளாடைகள் இல்லாமல், லூசான பருத்தி ஆடைகளை அணிந்திருந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ஒரு ஆய்வின் படி, வெறும் காலால் பெரியவர்கள் ஓடினால் மூளை தேய்வு நோயான அல்சைமரை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடந்தாலோ, ஓடினாலோ, அது மூளையை ஊக்கமளிக்கும் விதமாக அமையும். வெறும் பாதத்தினால் ஏற்படும் இந்த ஊக்கம் பல நரம்பணு இணைப்புகளை ஊக்கப்படுத்தும் என்று மும்பையை சேர்ந்த பொதுநல மருத்துவர் சுனேசரா கூறுகிறார். மேலும் இது மூளையின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும்.
நிர்வாணம் அல்லது உள்ளாடையின்றி வெறும் லூசான பருத்தி ஆடைகளை அணிவது என்பது மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் மற்ற மனநல பிரச்சனைகளுக்கான மசாஜ் தெரப்பியாக அமையும். ஏனெனில் இவ்வாறு படுக்கும் போது இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, நச்சுத்தன்மையும் நீங்கும். மேலும் மனதிற்கு ஒருவித அமைதியை கொடுத்து, விடுதலை உணர்வை அளிக்கும்.
வியர்வையால் அணிந்திருக்கும் ஆடைகள் நனைந்திருந்தால், அவை பாக்டீரியாவை உற்பத்தி செய்யும். அதனால் பல அழற்சிகள் உருவாகும். ஆனால் தீங்கு விளைவிக்கும் இந்த பாக்டீரியாக்களிடம் இருந்து, நிர்வாணம் அல்லது லூசான பருத்தி ஆடை உங்களை காக்கும்.
இறுக்கமான எலாஸ்டிக் உள்ளாடைகள் அணிந்தால் ஆணுறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இறுக்கமான ஜட்டி அல்லது லோ- வெய்ஸ்ட் ஜீன்ஸ் அணிந்தால், அவை ஆணுறுப்பை நேரடியாக அழுத்தும். மேலும் அவை மெதுவாக அதனை சுற்றியுள்ள நரம்பு ஏற்பிகளை அழித்துவிடும். இது விந்தணுவின் அளவைக் குறைத்துவிடும்.
நிர்வாணம் அல்லது லூசான ஆடைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் டென்ஷனை குறைக்கும். இறுக்கமான உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை நிறுத்தி சரும சிராய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியமான சருமம் மற்றும் உடல் வேண்டுமானால், இரவில் நிர்வாணமாக தூங்குங்கள் அல்லது லேசான பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம்.
நிர்வாணம் செக்ஸ் உணர்வை தூண்டும். உடலானது மெத்தையில் நிர்வாணமாக கிடக்கும் போது காதல் உணர்வை அது தூண்டும். மேலும் உங்கள் கணவன் உங்களை நிர்வாணமாக படுக்கையில் பார்க்கும் போது, உங்கள் அருகில் வராமல் அவரால் இருக்க முடியுமா என்ன?
- See more at: http://tamilwin.in/archives/19331#sthash.TRL0gUPi.dpuf