Search This Blog in tamil

Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, 31 March 2020

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)


உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன.
இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம்.
உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when washing the penis)
மென்மையான சோப்பு: வாசனைப் பொருள்கள் சேர்க்கப்படாத, மென்மையான சோப்பைப் பயன்படுத்தவும். நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் பெரும்பாலானவை வாசனை தரும் வேதிப்பொருள்களையும் பிற சுத்தப்படுத்தும் வேதிப்பொருள்களையும் கொண்டவை. அவை ஆணுறுப்பைப் பாதிக்கக்கூடியவை. அவை மெல்லிய ஆணுறுப்புத் தோலில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

உங்கள் தோல் எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தால் அல்லது உங்களுக்கு சரும ஒவ்வாமைகள் இருந்தால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுக்க உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

மொட்டு முனைத்தோல் அகற்றாத ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning uncircumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். பிறகு ஆணுறுப்பின் தண்டிலும் விந்தகங்களிலும் அதைத் தேய்த்து சுத்தம் செய்யவும்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாகும்.
மொட்டு முனைத்தோலை கூடுமானவரை பின்னுக்கு இழுக்கவும். இயற்கையாக எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மட்டும் இழுக்கவும். அதற்கு மேல் இழுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படிச் செய்வதால் ஆணுறுப்பு சேதமடைந்து காயம் ஏற்படலாம்.
மொட்டு முனைத்தோலுக்கு அடியில் சோப்பு போட்டு, சோப்பு போகும்படி நன்றாகக் கழுவவும். தோலுக்கு அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றும் வகையில் சோப்பு நுரையைத் தேய்த்துக் கழுவவும்.
பிறகு முனைத் தோலை வழக்கமான நிலைக்கு இழுத்து விடவும்.
மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்ட ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning circumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். ஆணுறுப்பின் தண்டு, முனைப் பகுதி மற்றும் விந்தகங்களில் நுரையைத் தேய்த்து சுத்தம்செய்யவும், பிறகு நீரால் நன்றாகக் கழுவி நுரையைப் போக்கவும்.
மொட்டு முனைத்தோல் இல்லையென்றாலும், ஆணுறுப்பின் மொட்டை சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் அங்கு வியர்வை, பாக்டீரியா, பிற அழுக்குகள் சேர்ந்திருக்கலாம்.
கழுவிய பிறகு நன்கு உலரவிடவும் (Drying after washing)

ஆணுறுப்பை சுத்தம் செய்த பிறகு மென்மையான டவலைக் கொண்டு முன் தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியையும் பிற பகுதிகளையும் விந்தகங்களையும் துடைக்கவும். ஆனால் மெதுவாகத் துடைக்க வேண்டும், அதே சமயம் கூடுமானவரை உலர்த்த வேண்டும். இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அதிக ஈரம் இருந்தால் யீஸ்ட் நோய்த்தொற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஆணுறுப்பை சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய பிற விஷயங்கள் (Other precautions to follow while cleaning the penis)
ஆணுறுப்பை அளவுக்கு அதிகமாகக் கழுவக்கூடாது. மிகவும் அடிக்கடிக் கழுவினால் அல்லது கடினமான அல்லது வாசனை உள்ள சோப்பைக் கொண்டு கழுவினால் ஆணுறுப்பில் வலியும் எரிச்சலும் உண்டாகலாம்.
சிலர் உடலுக்குப் போடும் பவுடரை இனப்பெருக்க உறுப்புப் பகுதியிலும் பயன்படுத்துவார்கள். ஆணுறுப்பில் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும். முன் தோலுக்கு அடிப்பகுதிக்கு பவுடர் சென்றுவிட்டால் எரிச்சலும் அசௌகரியமும் உண்டாகலாம். சிறுநீர்க் குழாயில் பவுடர் நுழைந்துவிட்டால் சிறுநீர்க்குழாய் எரிச்சல் ஏற்படலாம். சமீபத்தில், பெண்களுக்கு சினைப்பைப் புற்றுநோய் உண்டாவதற்கும் டால்கம் பவுடருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கப் பகுதிகளில் பவுடர் போட்டுவிட்டு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், பெண்ணுறுப்பில் டால்கம் பவுடர் நுழைந்து அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அந்தரங்கப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டவும். முடியின் தண்டு வியர்வையை அப்படியே சேகரித்து வைக்கும், இறந்த செல்கள் மற்றும் எண்ணெயையும் (சீபம்) தங்கவைக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இந்தப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டினால், நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். இப்பகுதியில் ஷேவிங் செய்வதால் ஷேவிங் ரேசரால் புண்கள் ஏற்படலாம், அரிப்பு ஏற்படலாம், ஆகவே ஷேவிங் செய்வதைவிட வெட்டுவதே நல்லது.
உடலுறவிற்கு முன்பும் பிறகும் ஆணுறுப்பைக் கழுவவும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புப் பகுதி சுத்தமாக இருக்கும். உங்களுடன் உடலுறவில் ஈடுபடும் இணையருக்கும் பாதுகாப்பானது. உடலுறவிற்குப் பிறகு, உடல் திரவங்களை ஆணுறுப்பிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமாகும். இந்தத் திரவங்கள் பாக்டீரியா வளர்ச்சிக்கு எதுவாக இருக்கலாம், குறிப்பாக அவை உலர்ந்தபிறகு பாக்டீரியாக்கள் எளிதில் பெருகலாம். டிஷூ பேப்பரை வைத்துத் துடைக்க வேண்டாம், சுத்தப்படுத்த சோப்பையும் நீரையும் பயன்படுத்தவும்.

Friday, 19 September 2014

செல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்?

செல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்?

ஊடல் இல்லாத தாம்பத்யம்… உப்புச்சப்பில்லாத உணவு போல என்பார்கள் பெரியவர்கள்… அதற்காக எப்போது பார்த்தாலும் எலியும் பூனையுமாக எப்போது பார்த்தாலும் சண்டை போட்டாலும் தாம்பத்யம் ருசிக்காது. அப்புறம் வீட்டுச்சாப்பாட்டை மறந்துவிட்டு ஹோட்டல் சாப்பாட்டின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். கொஞ்சம் கோபம்… நிறைய காதல் என இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை என்கின்றனர் நிபுணர்கள். வெளியில் அலுவலக சூழலில் டென்சனோடும், பணிச்சூழலில் மன அழுத்தத்தோடும் வீட்டிற்கு வரும் கணவரை மனைவியும் எரிச்சலூட்டி டென்சன்

செய்தால் குடும்பத்தில் கூடுதலாக குழப்பம் கும்மியடிக்க ஆரம்பித்துவிடும். எனவே ஈகோ பார்க்காமல் கோபத்தை சமாளிக்கவும், கணவரை குட்டிப் போட்ட பூனையாக சுத்தவைக்கவும் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

செல்லமாய் ஒரு முத்தம் கணவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாரா சரியான நேரம் பார்த்து கிசுகிசுப்பாய் காதில் ஐ லவ் யூ சொல்லுங்கள். முடிந்தால் சின்னதாய் ஒரு முத்தம் தப்பில்லை. அலுவலகத்தில் டென்சன் இல்லாமல் வேலை பார்க்க அது போதுமானது. சொல்லப்போனால் மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும் வரைக்கும் அது கணவரின் நினைவில் நிற்கும்.

நம்பிக்கை அதானே எல்லாம். இது விளம்பர வாசகம் மட்டுமல்ல… தாம்பத்யத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான வாசகம் இது. உங்களவரை, துணையை முழுவதுமாக நம்புவது அவசியம்.

ஈகோ வேண்டாம் கணவன், மனைவிக்கு சிறு சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் சரணடையுடங்கள்.

உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

நட்போடு அணுகுங்கள் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.


அடிக்கடி கட்டிப்பிடிங்க கணவர் கோபமாக பேசும்போது அதற்கு எதிராக குரலை உயர்த்திப் பேசாமல் டக் என்று கட்டிப்பிடிங்களேன். முடிந்தால் உதட்டோடு முத்தமிட்டு வாயை அடைத்துவிடுங்கள். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது.

சந்தோச விளையாட்டு கணவர் டென்சனாகிறார் என்றால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அதிகம் டென்சனாக்க வேண்டாம். அவ்வப்போது கட்டிப்பிடியுங்கள் அவருக்கு டென்சன் பறந்து விடும். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

 விட்டுக் கொடுங்கள் கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். வீட்டில் சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் நீங்கள் முதலில் விட்டுக் கொடுங்கள். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

ஆசையோடு காத்திருங்கள் வீட்டிலிருந்து சண்டை போட்டு கிளம்பினால் நீங்களும் உடனே முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டாம். எஸ்.எம்.எஸ், ஈ மெயில் என பலவகையிலும் அட்டாக் செய்யுங்கள். அப்புறம் அவர் உங்கள் வசம் வருவார். மாலையில் அழகாய் உடுத்தி அவருக்காக காத்திருங்களேன். இதுவும் ஒரு டெக்னிக்தான்.

காதலுடன் பரிசு காதலிக்கும் போதுதான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. திருமணத்திற்குப் பின்னரும் அவ்வபோது சர்ப்ரைசான பரிசுகளைக் கொடுத்து அசத்துங்களேன். முக்கியமாக ஊடல் சமயங்களில் கொடுக்கப்படும் பரிசுகளுக்கு எபெக்ட் அதிகம்.

கட்டில் போர்க்களம் படுக்கை அறையில் தோல்விகூட வெற்றியாகத்தான் பார்க்கப்படும். படுக்கையறை போர்க்களத்தில் வெற்றிக்காக போராடுவதை விட கணவரிடம் தோற்றுப்போங்களேன். இது கூட வின் வின் ஃபார்முலாதான்.


கணவரின் இதயத்தை கவர இது சிறந்த வழி எல்லாம் தெரியும் என்பதைப் போல காட்டிக்கொள்வதை விட சொல்லிக் கொடுங்களேன். கற்றுக்கொள்கிறேன் என்று கூறுவது கணவரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இதையெல்லாம் செய்து பாருங்கள், உங்களின் இல்லற வாழ்க்கையில் அருமையான மாற்றங்களை உணர்வீர்கள்.

மனைவியை காதலிப்பது எப்படி?

மனைவியை காதலிப்பது எப்படி?


Husband and Wife
கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார்.
அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார்.

 திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள்.

 உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.


* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.

* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.

* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.

* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.  

* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.

* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

குறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன்
காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல் வாழ்க்கை கிடைக்க பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும். பாலியல் ஆரோக்கியம் என்பது மனித பாலினத்திற்கும், மனித பாலியல் குணத்தை உருவாக்கும் சில சிக்கலான காரணிகளை புரிந்து கொள்வதற்குமான நேர்மறையான அணுகுமுறையாக விளங்குகிறது. பாலியல் என்பது நேர்மறையான மற்றும் வாழ்க்கை முழுவதும் பின் தொடரும் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனாகும். இது குறிப்பிட்ட நம் குணங்களையும் தாண்டி இருக்கும். தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க! ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சி என்பது உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்லாது பாலியல் குணங்கள் மற்றும் ஆரோக்கிய
தேவைப்படுகளையும் குறிக்கும். உணர்ச்சி ரீதியான முதிர்ச்சி மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி போன்ற இன்ன பிற முக்கியமான கூறுகளையும் குறிக்கும். பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. அதனால் எழப்போகும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியும் தெரிவதில்லை. அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது! ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும். ஆரோக்கியமாக இருந்திட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல் நலன்கள், இதோ! சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட.. ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம். பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே.. உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்தி, HIV பரவாமல் இருக்கவும் வேறு சில உடலுறவு ரீதியான தொற்றுக்கள் பரவாமல் (STI) இருக்கவும் தடுக்கலாம். ஆனாலும் கூட உடலுறவு கொள்ளும் போது, பலரும் எந்த ஒரு பாதுகாப்பையும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்களையும், உடலுறவு கொள்ளும் அந்த பெண்ணின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை காத்திடவும், ஆணுறை பயன்படுத்துவதை மறக்காதீர்கள். பலரிடம் உடலுறவு வைத்தக் கொண்டால் STD உண்டாகலாம். இருப்பினும் ஆணுறை பயன்படுத்தினால் அதற்கான இடர்பாடு குறையும். டெஸ்டோஸ்டிரோன் என்பது மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களின் பாலியல் உணர்வை தூண்டுவதிலும் இது தொடர்புடையது. பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் தான் அதிகமானவை. 20-களில் இருக்கும் அந்த எண்ணிக்கை வயதாக வயதாக அதன் எண்ணிக்கையும் குறையும். பெண்களின் கருப்பை தான் அவர்களின் வாழ்நாள் முழுவதும் டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கும். ஒருவேளை, அதன் உற்பத்தி பெருமளவில் குறைய தொடங்கி விட்டால், லிபிடோ குறைவு அல்லது மகிழ்ச்சி அளிக்கிற பாலுணர்வு குறைவை உண்டாக்கிவிடும். வயது ஏற ஏற இதுவும் மெதுவாக குறையத் தொடங்கிவிடும். ஹார்மோனின் அளவு குறைவதால், யோனி மற்றும் பெண்குறி ஆகிய இடத்தில் உணர்திறன் குறைந்துவிடும். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடையாத பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையை தவிர்க்க சொல்கிறார்கள் பெண்களின் பாலியல் ரீதியான உடல்நல வல்லுனர்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு, பாலியல் உணர்வுகள் மீண்டும் உயிர்ப்பு பெறுகின்ற நேர்மறையான விளைவுகளை காட்டியுள்ளது. பெண்களின் பாலியல் செயல் பிறழ்ச்சி என்பது பல பெண்களுக்கும் தெரியாத மிக முக்கியமான பாலியல் ரீதியான உடல்நலன் தகவலாகும். உடல் ரீதியாக சுகத்தை உணரமுடியாத (குறிப்பாக உடலுறவு கொள்ளும் போது) அனுபவத்தை பெண்கள் சந்திக்கும் போதே இது ஏற்படுகிறது. பெண்களின் பாலியல் ரீதியான உடல்நலன் படி, பெண்களின் பாலியல் செயல் பிறழ்ச்சி என்பது பொதுவான ஒன்று தான். 18 முதல் 59 வயதை கொண்ட பெண்களில் 43% பேர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடல், உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல பாலியல் அம்சங்களை நிவர்த்தி செய்தால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். சில நேரம் உடலுறவின் போது ஆண்கள் தங்களின் ஆணுறுப்பை நுழைக்கும் போது, பெண்களுக்கு அது அதிக வலியை ஏற்படுத்தலாம். அதற்கு முக்கிய காரணம் கருப்பை சுவரியக்கமே தவிர யோனியினால் கிடையாது. கருப்பை சுவரியக்கம் என்பது ஒரு மருத்துவ ரீதியான நிலை. அதன் படி யோனி தசைகள் குறிப்பிட்ட ஒரு அளவு அவரை நன்றாக இறுகிக் கொள்ளும். இதனால் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் வலியை சந்திப்பார்கள். இது டென்ஷனால் கூட ஏற்படும் ஒன்று. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால், தம்பதிக்கு இடையே பெரிய பிரச்சனையாகிவிடும். உடலுறவுக்கு பின் யோனியில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை எல்லாம் சில அலர்ஜிகளாகும். விந்துவினால் ஏற்படும் சில ஒவ்வாமையால் தான் பெண்களுக்கு உடலுறவு தொடர்பான அலர்ஜி உண்டாகிறது. இது விந்து திரவத்தில் இருக்கும் புரதத்தின் வகையை பொறுத்து அமைவதால், இந்த அலர்ஜியின் தன்மை ஒவ்வொருவரை பொருத்தும் மாறுபடும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், பெண்களுக்கு காப்புப்பிறழ்வு (அனாபிலாக்ஸிஸ்) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சிறுநீரக அடங்காமை என்பது சிறுநீர்ப்பையிலிருந்து எதிர்பாராத அளவில் சிறுநீர் கழிப்பது. இது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையே. கர்ப்பம், பிரசவம் மற்றும் இறுதி மாதவிடாய் ஆகிய நேரங்களில் பெண்ணுக்கு இது ஏற்படலாம். பெண்ணுக்கு இருக்கும் பொதுவான சிறுநீரக அடங்காமையை மன அழுத்த சிறுநீரக அடங்காமை (SUI) என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சிறுநீர்ப்பை சுருக்குதசை இருமல், சிரித்தல், தும்மல் அல்லது சில உடற்பயிற்சியில் ஈடுபடும் அழுத்தத்தால் சிறிய அளவிலான சிறுநீரை உருவாக்கும். இதனை தவிர்க்க பெல்விக் தரை தசை பயிற்சிகளை செய்யலாம். இனப்பெருக்க திறன்களின் முடிவை பெண்கள் அடையும் காலம் உள்ளது. பல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள். ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும் பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும். இவைகளே பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகளாகும். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…