Search This Blog in tamil

Showing posts with label கருத்தரிக்க. Show all posts
Showing posts with label கருத்தரிக்க. Show all posts

Saturday, 22 May 2021

10_பயனுள்ள_ரகசியங்கள்

 🇨🇭#குழந்தைக்காக_திட்டமிடும் #பெண்களுக்கு………❗


🇨🇭#10_பயனுள்ள_ரகசியங்கள்...❗❓


👉ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


#தாய்மைக்குத்_தயாராகும்_முன்… (Planning for Pregnancy)


⭕ 1. மாதவிலக்கு காலத்தில்…


மாதவிலக்கின் போது,


கருப்பு உளுந்து


கருங்குருவை அரிசி


நல்லெண்ணெய்


முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.


மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.


மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.


⭕ 2. புத்துணர்வு தேவை


பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.


⭕ 3. புகை, மது தவிர்க்கலாம்


கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.


⭕ 4. உடற்பயிற்சி நல்லது


ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.


⭕ 5. பெஸ்ட் டைம்


மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.


உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.


⭕ 6. காபி, டீக்கு நோ சொல்லுங்கள்


சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. 

டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.


⭕ 7. கெமில்கல்கள் இல்லாத சூழல்


வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.


⭕ 8. உடல் எடை பராமரிப்பு


உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.


⭕ 9. ஃபோலிக் ஆசிட் உணவுகள்


ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.


⭕ 10. ஆரோக்கியமான குழந்தை உருவாக உதவும் உணவுகள்


பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.


முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


புரோக்கோலியும் நல்ல உணவு.


உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.


மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.


மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள். 


வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.


அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.


பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.


ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.


பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.


கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 

48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.


மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

Wednesday, 5 May 2021

கர்ப்பம் தரிக்க விரும்புவோர் என்ன செய்யவேண்டும்...

 அன்பான உறவுகள் அனைவரும்

ORGASM அடைவோம் 


கர்ப்பம் தரிக்க விரும்புவோர் 

என்ன செய்யவேண்டும்...❓


 👉 குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்❓


👉 கர்ப்பம் தரிக்க  ஏதுவான நாட்கள் எது❓


⭕ பெண்கள் பிறக்கும் போதே அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக்  கருமுட்டைகள் வயதாக வயதாக  எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். 


ஆண்களுக்கும்  விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக ஆக குறையும்.


பெண் வயதுக்கு வந்த பின் சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பெல்லோபியன் குழாய் அதாவது #fallopian_tube வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு Ovulation (ஓவுலேஷன்) என்று பெயர்.

 


❤  கர்ப்பம்தரிக்கஏதுவான நாட்கள்❓


கருமுட்டை கருப்பையில் இருந்து வெளிவந்து 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேரவேண்டும். அதனால்  இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். #ஆணின்_விந்து சராசரியாக #3_5_நாட்கள் வரை பெண்ணின்  பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

 

பொதுவாக உடலுறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவை பயன்படுத்தினால் அவற்றை நிறுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். முடிந்தவரை எந்த விதமான எண்ணெய் பொருட்களையும் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

 

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும், பல திரவங்களையும், தண்ணீரையும் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது நீங்கள் கர்ப்பம் அடைய  நினைக்கும் நேரத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.


👫👉 #குழந்தை_பெற_உடலுறவுகொள்ள #வேண்டிய_நாள்கள்❓


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.


இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது. 


👇 பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, இரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.


▶ ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். 


▶ சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.


இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். 


இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.


இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டையானது 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.


உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.


எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.


👉 பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். 


👉 சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். 


➡ பெண்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.


➡ #உதாரணமாக………


உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.


கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பாக கருமுட்டை வெளிவரும்.


👉 உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.


➡ 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் தான் கருமுட்டை வரும்


➡ 30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் தான் கருமுட்டை வரும்


➡ 34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் தான் கருமுட்டை வரும்


இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.


இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.


    குழந்தை_வேண்டிய_தம்பதிகள்

#கடைபிடிக்க_வேண்டியவை……❗


💚 ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்


💚 ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....


💚அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.


💚ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....


💚துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.


💚இரவு திரவநிலை உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்


❌ வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்……❗


🥴அப்படி செய்தால் பிறக்கும் குழந்தைகள்………


👉 மந்தபுத்தி,


👉உடல்ஊனம்,


👉மூளைவளர்ச்சி குன்றி 


பிறப்பார்கள்....ஆகையால் மலம்,சிறுநீர்  கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.


⭕ எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்…… விளையாடுங்கள்


👉முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள்


என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள்,


உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் தாம்பத்தியம் சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்.


💚 சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....


👉 ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு *தலையணையை* வைத்துவிட்டு  ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்....


⭕💚 எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம்கலைய நேரிடும் ஆகையால்.....


⭐ ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.


⭐ பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.


⭐ எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.


⭐ எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.


உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,


உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் *அன்பின் மொழி பேசுங்கள்* அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.


*மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.


*கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 

60 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....


இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது.


⭕ #பெண்கள்_உடலுறவின்_பின்…


1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா❓


2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா❓


3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே❓


4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே❓


❓மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே…


இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் *(நீந்துவதன் மூலம்)*

பெண்ணின் முட்டையைச்

சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.


இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் 60 நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது.

 

அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் 

கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். 


அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு அதாவது கத்தரிகோள் போன்று படுத்திருப்பதும் உகந்தது.


🌟வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துகங்க.....


🌟வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துகங்க....


🌟நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.


🌟தாதுபலப்படும்,கற்பபைபலப்படும், விந்துஎண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.


🔴 ஆண் & பெண்…❓❓❓

 

உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் மிக குறைந்த அளவு உணவில் சேர்க்கவும். 


புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். 


எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். 


அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 


அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். 


இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல *புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி* *எல்லாத் தம்பதிகளுக்குமே* *பொருந்தும்.*


*பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,


*வெள்ளை சர்க்கரை, மைதா தவிர்க்கவும்.


*நொருக்கு தீணியை தவிர்க்கவும்,


*வெளிநாட்டு உணவு முறையையும், குளிர்பானங்களையும் தவிர்க்கவும்.....


 *மருத்துவ வழிகாட்டி 


ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப வழிமுறைகள் மாறுபடும்


மருத்துவம் தேவைக்கு

Saturday, 20 March 2021

எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?


இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.


இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.


ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.


ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).


ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.


அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.


இயற்கையான கருத்தடை முறைகள்


உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.


இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.


முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .


அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.


அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.


இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.


இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை பாவிப்பது கட்டாயமாகும்

Thursday, 20 February 2020

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? -

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? - செக்ஸ் டிப்ஸ்!

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்!

செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன்.

உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ சொல்லப்படுவதும், நம்பப்படுவதுமே! முயற்சித்துப் பார்ப்பதில் எதையும் இழந்துவிடப் போவதில்லையே! முயற்சியுங்கள்; குழந்தை இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு பேரின்பமாவது கிடைக்கட்டுமே! Udaluravu kolvathu eppadi?

எதனால் உடலுறவு முறைகள் முக்கியம்?!
இந்த செக்ஸ் பொசிஷன்கள் கர்ப்பமாவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக ‘மிஷனரி’ முறையில் உடலுறவு கொள்ளும்போது, கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசையே உதவிசெய்கிறது. இம்முறையில் ஆணின் விந்தணுக்கள் கருமுட்டையை எளிதில் அடைகிறது. இதை சில மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்!

இந்த பொசிஷன் சமாச்சாரங்களை விடவும், BMI சரியாக இருக்கவேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், கரு முட்டை வெளிவரும் ஓவுலேசன் (Ovulation) நாள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், கருமுட்டையானது பீரியட்ஸ் ஆகி 13-வது நாளில் வரலாம். இர்ரெகுலர் இருப்பவர்களுக்கு மாறுபடலாம். அதனால் அந்த ஓவுலேசன் தேதிக்கு முன்பும், பின்பும் தினசரி உடலுறவு கொள்வது பலனைத் தரும். ஏனெனில், கரு முட்டை 24 மணிநேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். பெண்களுக்கு மாதத்தில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே வரும்.

படிக்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்!
நிலைமை இப்படி இருக்க, உடலுறவு கொள்வது, உடலுறவு முறைகள் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன குழந்தை உருவாவதற்கு! ‘மன்மதனின்’ பல்கலைக்கழகத்தில் பல வித விதமான செக்ஸ் முறைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு சில முறைகளை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மிஷனரி நிலை: (Missionary position)
இது செக்ஸ் உருவான காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பழைய முறை. இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது. இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும். குழந்தையும் வேண்டும், என்ஜாயும் வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்த உடலுறவு முறைக்குச் செல்லலாம்.

படிக்க: குழந்தையின்மை போக்க முடியுமா?

Doggy Style முறை:
இந்த Doggy Style முறை தான் பெரும்பாலான தம்பதியினரின் பிரியமான முறையாக இருக்கலாம். இதில் பெண், கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும்போது, ஆண் முட்டிபோட்டோ அல்லது வேறு மாதிரியோ பின்னாலிருந்து உறவுகொள்வது. இதில் ஆணின் விந்தணு மிக எளிதாக கருமுட்டையை அடைகிறது, இதனால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் இந்த முறையானது ‘நேரத்தை’ நீட்டிக்கும், ஆண்-பெண் இருவருக்கும் பேரின்பத்தைத் தரும் முறை என்கிற செக்ஸ் டிப்ஸையும் உங்களுக்காகத் தருகிறோம்.

அவள் கால்கள் – அவன் தோள்களில் நிலை: (Legs on Shoulders)
லவ் மேக்கிங்குடன் எண்டெர்டெயின்மென்ட் வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் இந்த Legs on Shoulders முறையை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கிப் படுத்து, தான் கால்களை தூக்கி, காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன், அவளருகில் முட்டிபோட்டோ, அல்லது வேறு மாதிரியோ இருக்க வேண்டும். இதில் அவள் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியில் வருவதை தடுக்கும். இந்த முறை, விந்தணு கருமுட்டையை சேருவதில் சிரமம் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு எக்கச்சக்கம்.

படிக்க: எந்த கருத்தடை பாதுகாப்பானது?
ஸ்பூன் முறை உடலுறவு: (Spoon sex position)
இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம். இந்த முறை கொஞ்சம் ஜாலியானதும் கூட! எப்படியெனில், பின்னாலிருந்து, உடலுறவில் இருக்கும்போது கழுத்தில் முத்தம் தரலாம், முதுகில் அவன் முத்தம் வைத்தால் அவளுக்கு ஜிவ்வுனு இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! அன்பை பெருக்குங்கள்.

மேலும் சில முறைகளும் உள்ளன. உதாரணமாக Wheelbarrow, ரியர் என்ட்ரி, கேட் மற்றும் சில. அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். ஆனந்தமாய் இருங்கள். சந்தோஷம் தானே எல்லாம்?!

Monday, 25 August 2014

உடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா


உடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா


கருத்தரிக்காமல் தடுக்க
உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள்.
இதனால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, சந்தோஷத்தை அனுபவிக்க நினைத்திருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் தம்மை அறியாமல் கருத்தரிக்க நேரிடுகிறது. இப்படி கருத்தரித்த பின்னர், கருவை கலைக்க மனமில்லாமலும், குழந்தையை பெற்றுக் கொள்ள மனமில்லாமலும், பலர் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே கருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், உடலுறவு கொள்ளும் போதும், அதில் ஈடுபடும் முன்னரும் ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றினால், கருத்தரிப்பதில் இருந்து தப்பிக்கலாம். சரி, இப்போது அந்த ட்ரிக்ஸ் என்னவென்று பார்ப்போமா!!!
  1. காண்டம் இல்லாமல் உறவு வேண்டாம் எப்போது உடலுறவு கொள்ளும் போதும், காண்டம் பயன்படுத்தாமல் ஈடுபடாதீர்கள். இதில் நீங்கள் உறுதியாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவும்.
  2. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உறவில் ஈடுபடும் முன் எடுத்து வந்தால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
  3. எவ்வளவு தான் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருத்தரித்துவிடுவோமோ என்ற அச்சம் இருக்கும் சிலருக்கு இருக்கும். அத்தகையவர்கள், மாதவிடாய் காலத்தின் போது உடலுறவில் பயமின்றி ஈடுபடலாம். மேலும் நிபுணர்களும் இது பாதுகாப்பான காலம் என்று கூறுகிறார்கள்.
  4. தினமும் கருத்தடை மாத்திரைகளை பெண்கள் எடுத்து வருவது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், இப்படி செய்தால் நிச்சயம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
  5. உடலுறவில் ஈடுபடும் போது சில நேரங்களில் ஆணுறை அணியாமல், ஆண்கள் உறவில் ஈடுபட்டு, சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தை அடைந்து விந்தணு வெளியேறும் தருணம் எடுப்பார்கள். இப்படி செய்வதால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று நினைக்க வேண்டாம். சில நேங்களில் இவற்றாலும் கருத்தரிக்கக்கூடும்.
  6. சிலர் உறவில் ஈடுபடும் முன், தம்பதியர்கள் கை விளையாட்டில் ஈடுபடுவார்கள். இப்படி விளையாடுவதால், உறவில் ஈடுபடும் போது நம்மை அறியாமல் திடீரென்று விந்தணு உள்ளே செல்லும் வாய்ப்புள்ளது. எனவே கை விளையாட்டில் அதிகம் ஈடுபட வேண்டாம்.
  7. காண்டம் அணிந்து உறவு கொள்ளும் போது, விந்தணு வெளியேறிய பின் நீண்ட நேரம் ஆணுறுப்பை பெண்ணுப்பின் உள்ளே வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் அதில் ஓட்டை ஏற்பட்டு, கருத்தரிக்க செய்துவிடும். எனவே விந்தணு வெளியேறிய பின்னர், உடனே வெளியே எடுக்க வேண்டியது அவசியம்.
  8. உங்களுக்கு கருத்தரிக்க விருப்பமில்லை, ஆனால் உறவில் ஈடுபட வேண்டுமானால், பெண்கள் புரோஜெஸ்டின் என்னும் ஹார்மோன் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வகையான ஊசியானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் போட்டு வந்தால், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.(RISK_High)
  9. உங்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி சீராக நடந்தால், அதனை கணக்கிட்டு உறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்பில்லை. அதாவது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் ஏழு நாட்களுக்கு முன்னும், அது முடிந்து ஏழு நாட்களுக்கு பிறகும் உறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே சரியாக கணக்கிட்டு உறவில் ஈடுபடுங்கள். (best)
- See more at: http://tamilwin.in/archives/19452#sthash.8TiWxN8Q.dpuf