Search This Blog in tamil

Monday, 25 August 2014

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு











தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும்.அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர்.
அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம். சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு.

do kayakala yoga __ it will help you long term  https://www.youtube.com/watch?v=CWdN-y-zxqU

No comments:

Post a Comment