Search This Blog in tamil

Monday, 25 August 2014

மனைவி மீது சந்தேகம் வரலாமா


மனைவி மீது சந்தேகம் வரலாமா



ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அதிலும் சந்தேகம், கணவன், மனைவி விடயத்தில் வரவே கூடாது. இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் நிலவும் விடயமாக இது இருக்கிறது.
ஒரு ஒரு கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ வீணான சந்தேகங்களை உண்டாக்கி கொள்வது குடும்ப வாழ்விற்கு பெரும் ஆபத்தாக அமையும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் ஷைத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் சான்றோர்கள்.
இதன் மூலம் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு எல்லாமே போய்விடும். பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு இல்லாத ஒரு குடும்ப வாழ்க்கை, சிறந்த குடும்ப வாழ்க்கையாக இருக்காது. சந்தேகங்கள் உருவாகாமல் இருவரும் நடப்பதும் மிக முக்கியம். எந்த விடயத்தையும் மனம் விட்டு பேசுவதும், ஒளிவு மறைவுகள் இல்லாமல் நடப்பதும் மிக நன்மையாகும்.
இந்த சந்தேகத்தால் இன்று எத்தனை குடும்பங்கள் பிரிந்து நீதிமன்ற வாசல்களில் நிற்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வது கூடாது. கணவனின் அனுமதியோடு எந்த காரியத்தையும் செய்தால் அதில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காது. அதுபோல் ஒரு கணவனும் தன் மனைவிக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது, நடப்பது கூடாது.
சந்தேகம் என்பது ஒரு வகையான மனநோய். இந்த நோய் காரணமாக பிளவுபட்ட குடும்ப உறவுகள் சிதைந்து போய் கொண்டு இருக்கிறது. இந்த மன நோய்க்கு உள்ளானவர்கள் மற்றவர்களையும் அந்த நோய்க்கு உட்படுத்தி விடுவார்கள்.
இது மற்றவர்களை விட அழகு, பதவி என்று வரும் பொழுது ஏற்ற தாழ்வில் ஏற்படும் மன வியாதி. இந்த சந்தேக வியாதி எப்படிபட்டதென்றால், ஒரு கணவன் தான் மனைவியை சந்தேக கண்கொண்டு பார்க்கும் பொழுது அது அவளது தந்தை, சகோதரன், மகன் என்னும் உறவுகளை கூட கொச்சைப்படுத்தி விடுகிறது. இது அவளை தாழ்வு மனப்பான்மையை கூட உருவாக்க வழிவகுக்கிறது. அதுமட்டும் இல்லை தற்கொலைக்கு கூட இட்டு செல்கிறது.
பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நாடிவிடுவானோ என்ற வீணான அச்சங்கள் காரணமாக இது வருகிறது.
கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் பெரும் விபரீதத்தை உண்டாக்கும்.
தனது சந்தேகத்தை நேரடியாக தான் வாழ்க்கை துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம்.
கணவன், மனைவி என்பவர்கள் திருமண பங்காளிகள். ஒரு பங்காளி மற்றொரு பங்காளியிடம் ஒளிவுமறைவு இல்லாமல் நீதமாக நடந்தாலே அந்த வியாபாரம் சிறக்கும். இதுபோலவே கணவன், மனைவி சந்தேகங்களுக்கு இடம் வகுக்காமல் நல்ல பரஸ்பர புரிந்து உணர்வுகளுடன் நடப்பது திருமண வாழ்விற்கு சிறப்பாக அமையும். குடும்ப வாழ்வு இறைவனின் அன்பின் சின்னம். அது இந்த சந்தேகங்களால் உடைந்திடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவிக்கு உண்டு.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள். அப்புறம் உங்கள் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
- See more at: http://tamilwin.in/archives/19444#sthash.100E1Q1D.dpuf

செக்ஸ் அடிமை என்பது உண்மையா


செக்ஸ் அடிமை என்பது உண்மையா




செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர்.
சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.

 கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆவர்
இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ் விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், உடல் ரீதியான கோளாறு காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது.
மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ் விருப்பங்கள், ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள்.


இவர்கள் கொடுத்த பதிலை வைத்து இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன.


இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம்.

அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.

- See more at: http://tamilwin.in/archives/19448#sthash.n1Jyc6Z2.dpuf

உடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா


உடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா


கருத்தரிக்காமல் தடுக்க
உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள்.
இதனால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, சந்தோஷத்தை அனுபவிக்க நினைத்திருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் தம்மை அறியாமல் கருத்தரிக்க நேரிடுகிறது. இப்படி கருத்தரித்த பின்னர், கருவை கலைக்க மனமில்லாமலும், குழந்தையை பெற்றுக் கொள்ள மனமில்லாமலும், பலர் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே கருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், உடலுறவு கொள்ளும் போதும், அதில் ஈடுபடும் முன்னரும் ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றினால், கருத்தரிப்பதில் இருந்து தப்பிக்கலாம். சரி, இப்போது அந்த ட்ரிக்ஸ் என்னவென்று பார்ப்போமா!!!
  1. காண்டம் இல்லாமல் உறவு வேண்டாம் எப்போது உடலுறவு கொள்ளும் போதும், காண்டம் பயன்படுத்தாமல் ஈடுபடாதீர்கள். இதில் நீங்கள் உறுதியாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவும்.
  2. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உறவில் ஈடுபடும் முன் எடுத்து வந்தால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
  3. எவ்வளவு தான் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருத்தரித்துவிடுவோமோ என்ற அச்சம் இருக்கும் சிலருக்கு இருக்கும். அத்தகையவர்கள், மாதவிடாய் காலத்தின் போது உடலுறவில் பயமின்றி ஈடுபடலாம். மேலும் நிபுணர்களும் இது பாதுகாப்பான காலம் என்று கூறுகிறார்கள்.
  4. தினமும் கருத்தடை மாத்திரைகளை பெண்கள் எடுத்து வருவது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், இப்படி செய்தால் நிச்சயம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
  5. உடலுறவில் ஈடுபடும் போது சில நேரங்களில் ஆணுறை அணியாமல், ஆண்கள் உறவில் ஈடுபட்டு, சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தை அடைந்து விந்தணு வெளியேறும் தருணம் எடுப்பார்கள். இப்படி செய்வதால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று நினைக்க வேண்டாம். சில நேங்களில் இவற்றாலும் கருத்தரிக்கக்கூடும்.
  6. சிலர் உறவில் ஈடுபடும் முன், தம்பதியர்கள் கை விளையாட்டில் ஈடுபடுவார்கள். இப்படி விளையாடுவதால், உறவில் ஈடுபடும் போது நம்மை அறியாமல் திடீரென்று விந்தணு உள்ளே செல்லும் வாய்ப்புள்ளது. எனவே கை விளையாட்டில் அதிகம் ஈடுபட வேண்டாம்.
  7. காண்டம் அணிந்து உறவு கொள்ளும் போது, விந்தணு வெளியேறிய பின் நீண்ட நேரம் ஆணுறுப்பை பெண்ணுப்பின் உள்ளே வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் அதில் ஓட்டை ஏற்பட்டு, கருத்தரிக்க செய்துவிடும். எனவே விந்தணு வெளியேறிய பின்னர், உடனே வெளியே எடுக்க வேண்டியது அவசியம்.
  8. உங்களுக்கு கருத்தரிக்க விருப்பமில்லை, ஆனால் உறவில் ஈடுபட வேண்டுமானால், பெண்கள் புரோஜெஸ்டின் என்னும் ஹார்மோன் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வகையான ஊசியானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் போட்டு வந்தால், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.(RISK_High)
  9. உங்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி சீராக நடந்தால், அதனை கணக்கிட்டு உறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்பில்லை. அதாவது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் ஏழு நாட்களுக்கு முன்னும், அது முடிந்து ஏழு நாட்களுக்கு பிறகும் உறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே சரியாக கணக்கிட்டு உறவில் ஈடுபடுங்கள். (best)
- See more at: http://tamilwin.in/archives/19452#sthash.8TiWxN8Q.dpuf

காதலில் ஆறு வகை..!!

காதலில் ஆறு வகை..!!

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்’ காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…

மன்மதன் காதல்
காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம்.
உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
கவன ஈர்ப்பு காதல்
நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை.
ஆராய்ச்சியாளர்கள் இதனை`கவனஈர்ப்பு காதல்`என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்?’ என்றுதானே கேட்கிறீர்கள்.
சேமிப்பு காதல்
இப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் `சேமிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள்.
`காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்
`உங்களை பிடித்திருக்கிறது’ என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை…!
உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?
இது `திட்டக் காதல்’.வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
இனிப்பு காதல்
அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?
இதனை `இனிப்பு காதல்’என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள்.
இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
வெற்றிக்காதல்
காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா?’ என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை `வெற்றிக் காதல்’ என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
சரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்..!!!!

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???











1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற
பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில்
நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும்.திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.
சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

செக்ஸ் உறவில் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள்


செக்ஸ் உறவில் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள்


செக்ஸ் உறவுக்கு முன்பு ஆண்களிடம் உங்களுக்கு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய பட்டியலையே கொடுப்பார்கள். அதில் முக்கியமானது செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியானதாக பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி கருதுவதில்லை, அதை மனதோடும் தொடர்பு படுத்தி உண்மையான உடல் மற்றும் மன இன்பத்தை அனுபவிப்பவர்கள்
பெண்கள். உடலும், மனதும் இணையும் உறவாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

செக்ஸின் போது மியூசிக்? எதுக்கும் கேட்டுக்குங்கப்பா
சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை பரவ விடுங்கள்.
செல் போன் பேச்சி, செக்ஸின் போது போச்சி
இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே ‘செல்’லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே ‘ஆன்’ செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக ‘அந்த’ நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
ஐஸ், தாஜா, கெஞ்சுவது நோ நோ, ஸ்டெரெயிட்டா மேட்டர்க்கு வா
பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும். செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.
நோ அவசரம், நிதானமே முக்கியம்
மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும். முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம். உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.
எல்லவற்றுக்கும் பெர்மிஷனா? தூக்கி போடுங்க‌
எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு ‘பெர்மிஷன்’ கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்
- See more at: http://tamilwin.in/archives/19455#sthash.MYunRUfR.dpuf

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு











தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும்.அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர்.
அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம். சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு.

do kayakala yoga __ it will help you long term  https://www.youtube.com/watch?v=CWdN-y-zxqU

பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…

பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…










ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்…
* `கீ’ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே… என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.
* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்









ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உ
டல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.
சில அரவாணிகள், டாக்டர்களிடம் சென்று கொடூரமாக தண் ஆண்குறியையும், விரைப்பையும் முழுவதுமாக வெட்டி சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு சிறு இடம் விட்டு தைத்துக் கொள்வர். இதில் 10 அலிகளுக்கு 8 அலிகள், பிறப்பு உறுப்பு பகுதியில் சீழ்வைத்து, உடல்நலம் கெட்டு இறந்து விடுவார்கள். ஒரு சிலர் பிழைத்து “நான் முழுவதுமாக” பெண்ணாகவே மாறி விட்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்வார். அவர்களுக்கு முறையான பெண்குறி (யஹஞ்ண்ய்ஹ) இருக்காது. அந்த அலி தனக்கு பெண்குறி இருப்பதுபோல் நடித்து தன் வாடிக்கைக்காரர்களுடன் உடல்உறவு கொள்ள அழைத்து, பின் தனது ஆசனவாய் (Vagina) வழியில்தான் உடல்உறவு வைத்துக் கொள்வார்.
இப்படி ஆண் ஆணுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பால்வினை நோய்கள் பல, விருந்து வைத்து விடுகின்றன. அதன்மூலம் HIV என்ற எய்ட்ஸ் பங்காளி யையும் வரவழைக்க உதவுகின்றன. இந்த ஓரினச்சேர்க்கை எங்கு எவரிடத்தில் அதிகம் நடைபெறுகின்றது?
1. ஒரே இடத்தில் தங்கி வாழும் ஹோட்டல் சர்வர்கள்.
2. ஹாஸ்டலில் ஒரே அறையில் பலபேர் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.
3. ஒரே ரூமில் தங்கி வாழும் பஸ் டிரை வர்கள் மற்றும் வேலையாட்கள்.
4. பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளி கல்லூரி தோழிகள்.
5. நீண்ட தூரத்தில் ஒரே இடத்தில் தங்கி வாழும், மனைவியைப் பிரிந்து பணியாற்றும் காவலாளிகள், இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், ஆபீசர்கள், மருத்துவ பிரதிநிதிகள்.
6. ஒரே சிறையில் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகள்.
7. மனைவி குழந்தை பெற்றுவிட்டால் இப்போது உடல்உறவு அவளுடன் கொள்ளக் கூடாது என்ற தப்பான எண்ணத்தில் தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் நண்பர்களுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்கள்.
8. ஆண் கலைஞர்கள் நடனம், நாட்டியம், டிஸ்கோ, பாட்டு என்று ஊர் ஊராய் சென்று ஒரே இடத்தில் தங்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.
9. பெரிய செல்வந்தார்கள் உயர் மட்டத்தில் வாழும் ஆண்கள், பார்ட்டி, டின்னர், சீட்டாட்ட ‘கிளப்பில்’ ஆடிவிட்டு அதன்பின் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் என இந்த ஓரினச்சேர்க்கை வட்டம் விரிவடைந்து வருகின்றது.
ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு
ஒன்று
ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.
இரண்டாவது வகை
தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.
இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.
1. சிபிலிஸ் என்ற கிரந்திநோய் (Syphillis) :
இந்த நோயை தன்னிடம் வைத்து இருக்கும் ஒரு (எஹஹ்) ‘கே’ யுடன் அதாவது ஓரினச் சேர்க்கையில் வாழும் ஒரு ஆணுடன், வேறுஒருவன் உடல்உறவை வைத்துக் கொள்ளும் போது அவனது ஆசனவாயில் 10 முதல் 90 நாட்களில் இந்த நோய் புண்களாகத் தோன்றும் இந்த நோய்க்குரிய கிருமியின் பெயர் டிரப்னிமா பாலிடம் (Treponema Palidum). இது மிக்க கொடிய நஞ்சுக்குணம் கொண் டது.
ஆசனவாயின் உட்புறத்திலும் ரெக்டம் (Rectum) என்ற குதப்பகுதியிலும், புண்கள் தோன்றி இருக்கும். அதனால் மலம் கழிக்கும்போது வலி, எரிச்சல், சீழுடன் கூடிய திரவம் அல்லது ரத்தமும் வடிய ஆரம்பிக்கும். 6 மாதம் வரை வைத்தியம் மேற்கொள்ளா விட்டால், இந்த வியாதி ஆசனவாயில் ஓரப்பகுதியிலும் காண்டிலோமோலேட்டா (Condylomata) என்ற கொடிய வியாதியை தோற்றுவிக்கும். இது புற்கள் மாதிரி முளைத்து வளர்ந்து இருக்கும்.
வாய்வழிப்புணர்ச்சி இருந்தால் வாயிலும் புண்கள் தோன்றும். அரை இடுக்கு களில் வலிக்காத நெரிகட்டிகள் தோன்றும்.
முறையான வைத்தியம் பார்க்கா விட்டால் இரத்தம் மூலம் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவி தோல் முழுவதும் தட்டையான கொப்பளங்கள், பத்துக்கள் தோன்றும். தீராத தொல்லைகளை கொடுத்து பரம்பரைக்கும் நோயை நீடிக்க வைத்துவிடும்.
பெண்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட பெண்களுக்கும், இந்த சிபிலிஸ் நோய் வரும்.
ஆண்களுக்கு வரும் தொல்லைகள்மாதிரி இவர்களுக்கும் தோன்றி தொல்லை கொடுக்கும்.
2. கோனாரியா என்ற வெட்டை நோய் :
ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசன வாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். ஆசனவாய் உளபகுதியை (Prostocopy) உருப்பெருக்கி கருவி கொண்டு சோதிக்கும் போது, மலக்குடல் பாதை சிவந்தும், புண்கள் தோன்றியும், புண்ணில் இருந்து சீழ் கோர்த்து இருப்பதும் தெரிய வரும். இரத்தமும் வடியும் நிலை இருக்கும். சீழ் திரவத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது வெட்டை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படும். கல்சர் டெஸ்ட் செய்யும்போது இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்படும். வாய் வழி புணர்ச்சி கொண்டவனுக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.
பெண்கள் :
இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

3. ஹெர்பிஸ் என்ற அக்கிக் கொப்பளங்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒரு Gay ஆசனவாயைச் சுற்றிலும், அதன் உட்புற பாதையிலும் புண்ணாக வெடிக்கும்.
மலம் கழிக்கும்போது எரிச்சல், ஆசனவாயைச் சுற்றிலும் அரிப்பும் (Mucoid) ஏற்படும். மூக்காய்டு என்ற சளித்திரவம் ஆசனவாயில் இருந்து வடிந்து கொண்டு இருக்கும் இந்தப் புண்கள் வரக் காரணமான HIV ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் ஹோமினிஸ் என்ற நுண்கிருமி, கிருமியை சிநேகம் பிடித்து கூட்டிவரும்.
வாய்வழிப்புணர்ச்சி கொண்ட நபருக்கு வாயில் உதட்டு ஓரங்கள் உதட்டின் உட்புறப்பகுதி, தொண்டைப்பகுதி என பல இடங்களிமல் இந்த நோய்க்கிருமி இடம் பிடித்து சிறு சிறு புண்களைக் கொடுக்கும். இந்த புண்கள் வலி கொடுக்கும் தொண்டை அழற்சி ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமல் அவதியுற நேரிடும். முறையாக வைத்தியம் மேற் கொள்ளாவிட்டால் இப்புண்கள் கடுகுகள் மாதிரி சிறு, சிறு புண்களாக பல மாதம், வருடங்கள் என திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கும். மிக கவலை தரும் நோயாக மாறும்.

பெண்கள் :
ஓரினச்சேர்க்ககையில் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கு, ஆண்களுக்கு வருவது மாதிரியே இப்புண்கள் ஆசனவாயில் வாயின் உதட்டுப்பகுதி தொண்டைக்குழி முதலிய இடங்களில் தோன்றி அவதியு வைக்கும்
4. ஜெனிட்டல் வார்ட்ஸ் (Gental Warts) :
ஓரினச்சேர்க்கையில் ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒருவனுக்கு ஜெனிட்டல் வார்ட்ஸ் என்ற விஷப் பருக்கள், ஆசனவாய்ப் பகுதியில் உடல்உறவு வைத்துக் கொண்டு சில வாரங்களில், ஏன் சில மாதங்களில் தோன்றக் கூடும். இந்த நோய் கிருமியின் பெயர் ஹீயூமன் பாப்பில் பாமா வைரஸ் (Human/ Papilloma Virus) என்பதாகும். ஆசனவாயை சுற்றிலும் பெரினியம் என்ற ஆண்குறிக்கும் மலத்து வாரத்துக்கும் இடையில் உள்ள இடத்திலும் இப்பருக்கள் தோன்றும். ஆசனவாய் உட்புறத்திலும், இந்த விஷச் செடி முளைக்கும். மலம் வரும்போது வலியும், எரிச்சலும், இரத்தமும் கலந்து வடிந்து தொல்லை கொடுக்கும். வாய்வழிப் புணர்ச்சி கொண்டவர்களுக்கு வாயின் ஓரங்களிலும் தொண்டைக்குழியிலும் இப்படி பருக்கள்தோன்றி மிக எச்சில் விழுங்க முடியாமல் தொல்லை கொடுக்கும். முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால் புற்றாகவும் (Cancer) மாறக்கூடும்.
பெண்கள் :
ஆசனவாய் வழிப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கும் விஷப் பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கும்.
5. மஞ்சள் காமாலை வியாதி :
ஓரினச்சேர்க்கையர், ஆசனவாய் வழி உடல்உறவு வைத்துக் கொள்பவருக்கு “ஹெப்படைடிஸ் பி வைரஸ்” (Hepatitiis B) என்ற நுண்கிருமி இரத்தத்தின் வழியே உள்ளே நோயை உண்டாக்கி விடுகின்றது. இந்த நோய் கண்ட “அலிக்கு” உடல் சோர்வு, களைப்பு, வயிறு, வீக்கம் சிறுநீர் மஞ்சளாக போதல், கண்ணின் வெள்ளைப்படலம், மஞ்சளாக மாறுதல் முதலியன ஏற்படும். ஜான்டிஸ் என்ற இந்த மஞ்சள் காமாலை நோய் மிக விஷத்தன்மை கொண்டது. நோய்க்கிருமி மிகக் கடுமையாக இருந்தால் பிழைப்பது அரிது.
7. அமீபியாசிஸ், சியார்டியாசிஸ் என்ற வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை நோய்கள் :
ஓரினச்சேர்க்கையில் அவனது ஆசனவாய் புணர்ச்சி மூலம் அமீபியாசிஸ் சியார்டியாசிஸ் போன்ற வியாதிகள் தோன்றி வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை போன்ற நோய்கள் வரும். இதற்காரணமான பார சைட்டுகள் ள்(Parasites) என்ற கிருமிகள் என்டமிபாகிஸ்டோலிகா சியார்டியா லேம்லியா (Entamoeba/ Histolylica/ Giardia/ Lambia) என்பதாகும். இவைகளால் பலவிதமான வயிற்றுக் கோளாறு உண்டாகும் அடிவயிற்று வலி சளி மாதிரி நுரையுடன் கூடிய மலம் வெளி யேறுதல், மலத்துடன் இரத்தம் வருதல் என பலவித கஷ்டங்களைக் கொடுக்கும். அதாவது கழிசல் நோய் கொடுக்கும்.
பெண்கள் :
ஓரினச்சோக்கை மூலம் ஆசனவாய் வழியாக இந்த கழிசல் நோய்கள் குடல்களில் பரவி வயிற்றுவலி, வயிற்றாலை, வயிற்றுக் கடுப்பு என பெண்களும் துன்பப்படுவர்.
இவ்விதம் ஓரினச்சேர்க்கை மூலம் வரும் பால்வினை நோய்களைப் பற்றி விரிவாக அறிந்தோம். எல்லா பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோய்க்கு வழிகாட்டி நிற்கும் இது .

ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை


ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்மை குறைபாடு என்றால் என்ன?

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
வாழ்க்கை முறைகள்
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.
மூலிகைகள்
அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு – வேப்பிலை, சிவனுக்கு – வில்வம், விநாயகருக்கு – அருகம்புல், விஷ்ணுவுக்கு – துளசி, பிரம்மாவுக்கு – அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.
அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.
உணவு முறைகள்
நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.
ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.
கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.
மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.

and one more thing.... kela comments la irukuravangala nambathinga... go sex doctors and check your self ___max 300rs fees than varum
- See more at: http://tamilwin.in/archives/19480#sthash.5RqZJqiq.dpuf

ஆண் பெண் நேசம் புனிதமானது




* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!
* மேக்கப் இல்லாத இயற்கையழகே பெண்களுக்கு முழு அழகு! பெரும்பாலான ஆண்கள் பெண்களின் மேக்கப் தோற்றத்தை விரும்புவது இல்லை. அவர்களின் இயற்கை அழகையே ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அதுபோல அழகில் கர்வம் கொண்டவர்களையும் ஆண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆடம்பரமான மேக்கப் இல்லாமல் எளிமையான இயற்கையழகுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் ஆண்களின் மனதில் இடம் பிடிக்கலாம்.

* பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண் நண்பர்களுடன் வெளியில் போகும்போது தோழிகள் யாரா வது தென்பட்டால் உடனே அளவுக்கு மீறி பயந்து வெட்கி தலைகுனிந்து விடக்கூடாது. பல்லைக்காட்டி சிரித்துக் கொண்டு வானத்திற்கும் பூமிக்குமாக தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கவும் கூடாது. இவை உங்களை மிகுந்த பயம் கொண்டவராகவும், பக்குவமற்றவராகவும் காட்டிவிடும்.
* உங்களுடன் நெருங்கிப் பழகும் ஆண்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது பற்றி அறிய அவர்களே மிகுந்த ஆவலுடன் காணப்படுவர்.
நீங்கள் உங்கள் ஆண் நண்பர்களோடு பழகும்போது அவர்களின் புதிய முடியலங்காரம் அழகாகத் தோன்றி னால், `அழகா இருக்குங்கஸ’ என்று உடனே வெளிப் படையாகச் சொல்லிடுங்க. அதேமாதிரி அவர்கள் போட்டி ருக்கும் `டிரெஸ்’ அழகா இல்லைன்னாலும், `நல்லா இல்லைங்க..’ என்று சொல்லி விடலாம். அது உங்க ஆண் நண்பர் உங்களை புரிந்து கொள்ள உதவும்!
* எப்பப் பார்த்தாலும் முகத்தை `உம்’ முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்காதீங்க! பெண்க ளுக்கு மாதம் ஒருமுறை வரும் `அந்த சில நாட்களில்’ உங்களுக்கு உள்ள உடல் கஷ்டமும் உள்ளக் குமைச்சலும் ஆண்களுக்குத் தெரிஞ்சது தான்! அதையே சாக்காக வைத்துக்கொண்டு எப்பப்பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்கக்கூடாது. ஏன்னா, உங்களோட இந்த `உம்மணாமூஞ்சி’ ஆண்களுக்கு அறவே பிடிக்காது.
* `நாம குண்டா இருக்கோமே, நம்மை ஆண்கள் விரும்புவாங்களா?’ன்னு நீங்க கவலைப்பட வேண்டாம்.
எந்த ஒரு பையனும் தான் நெருங்கிப் பழகுற பெண் குண்டா இருந்தா, அதை அந்த பொண்ணு கிட்ட `நீ ரொம்ப குண்டா இருக்கேஸ’ என்று குறை சொன்னதே இல்லைங்க..! எனவே, பெண் பிள்ளைகளே நீங்க குண்டா இருந்தா அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க. உங்க மனசையும், அன்பையும்தான் ஆண் பிள்ளைங்க எதிர்பார்க்கிறாங்க!
* உங்கள் தோழிகளுடன் பொது இடத்தில் அமர்ந்திருக்கும்போது மற்றவர்கள் கவனத்தைக் கவரும் விதமாக அளவுக்கு மீறி சிரித்துக் கொண் டோ அல்லது குசுகுசுவென பேசிக்கொண்டோ இருந்தால் நீங்கள் இன்னும் பள்ளி செல்லும் சிறுபிள்ளையாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை ஆண்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும் நீங்கள் உறுதியற்ற மனநிலை கொண்டவர் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கி விடும். இந்த மாதிரியான பெண்களை ஒருபோதும் ஆண்கள் விரும்புவதில்லை.
* உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே ஆண்கள் அதிகம் விரும்புறாங்க என்பதை மனதில் கொள்ளுங்க..! உங்கள் புற அழகில் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அது அவர்களை விரும்ப வைக்காது. அதிக அளவில் காதல் விளையாட்டில் ஈடுபட்டு ஆண்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சிட்டும் பெண்ணாகத் தோன்றாமல் அடக்கமும், அமைதியும் நிறைந்த பெண்ணாகப் பவனி வருவதைத்தான் அதிகமான ஆண்கள் விரும்புறாங்க!
* காதல் உணர்வுடன் உங்களுடன் ஒருவர் பழகினால், இழுத்தடிக்காமல் `அவரைப் பிடிக்கிறதா? இல்லையா?’ என்பதை உடனே நேரடியாகச் சொல்லிடுங்க. நீங்கள் ஒரு வரை விரும்பிக் கொண்டே பிடிக்காததுபோல் ரொம்பநாள் பாசாங்கு பண்ணினீங் கன்னா அவர் உங்களை விட்டு விட்டு வேறுபெண்ணை விரும்பிப் போகும்நிலை ஏற்படு முங்க. பிறகு நீங்க கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லீங்கஸ! பிடிச்சிருந்தா, பிடிச்சி ருக்குன்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க!
இந்த விஷயங்களை தெளிவா மனசுல உள்வாங்கிக்கிட்டு நீங்க ஆண்களிடம் பழகினால் அதிக சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டீங்க
- See more at: http://www.tamilnews.cc/news.php?id=38706#sthash.4DdO4xgr.dpuf

பெண்களை இலகுவாக கவர…

பெண்களை இலகுவாக கவர…













பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்.
பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக் கொள்ளுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள். அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.
தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான் பெண்களை எளிதில் கவரமுடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். உங்கள் உடல்மொழி, பேசும் திறன் போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் கவர்கின்றனராம் எனவே உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும். சந்தோசமான புன்னகையை தினசரி கண்ணாடியைப் பார்த்தாவது பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
பேசும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். அதேபோல் உங்களுக்கு தெரிந்தவைகளை எல்லாம் பேசி பெண்களை மிரட்சியடையச் செய்யவேண்டாம். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அது தொடர்பானவைகளை முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.
பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். காத்திருக்கும் சமயங்களில் என்ன பேசலாம் என்பதை ஒத்திகை பார்க்க இயலும்.